இன்றைய சிந்தனை - கருவி.
இன்றைய சிந்தனை எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியானது உங்கள் கருவிப்பட்டைக்கு அழகு சேர்ப்பதுடன் ஒரு சிந்தனையையும் உங்கள் வாசகருக்கு ஊட்டக் கூடியது. தினமும் புதிய புதிய சிந்தனைகள் காட்டப்படக்கூடியவாறு இது அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறான கருத்தோ அல்லது விளம்பர வாசகங்களோ இதனூடாக காட்டப்படமாட்டாது ( எதுக்கும் இருக்கட்டும் எண்ட இந்த வசனத்தையும் சேத்தனான்). முதலாவதாக Prayers and Meditations for Mankind என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அனேக மதங்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நூல் Peter L. Higgs மற்றும் Kathleen R. Higgs ஆகியோரால் தொகுக்கப்பெற்று 1978ம் ஆண்டு மத்திய ஆபிரிக்காவின் சாம்பியா நாட்டின் தலைநகர் லுசாக்காவில் வெளிவந்தது.








நிரலிக்கு (சொடுக்கும் போது நிரலியை பெறமுடியாவிட்டால் right click பண்ணி save target as இனை தெரிவு செய்யுங்கள்)

இதனை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி பின்னூட்டம் இடுங்கள்.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட




உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி
உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு அழகிய நாட்காட்டியை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான். இந்நாட்காட்டியில் தினமும் ஒவ்வொரு அழகிய படம் அழகு செய்யும்.








நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.

23 பின்னூட்டங்கள்:
ஆகா இதோ பின்னூட்டம் இட்டு விட்டேன்
உங்கள் முயற்சிகள் வாழ்க!

ஆசிரியரே நன்றி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

பகீ, நாட்காட்டி நல்ல முயற்சி..

வெவ்வேறு படங்களுடன், விரும்பிய வடிவங்களுடன் என்று இதில் மாற்றங்கள் செய்ய முடியுமா?...

நன்றி நட்சத்திரமே(உங்களைத்தான் பொன்ஸ்) வருகைக்கு. இதில் வடிவங்கள் என்று எதை குறிக்கிறீர்கள் என்று புரியவில்லை. எதுவாக இருந்தாலும் Dynamic ஆக மாற்ற முடியாது. Adobe Flash இல் செய்யப்பட்டிருப்பதால் எவ்வாறு வேண்டு மானாலும் மாற்றலாம். நீங்கள் விரும்பினால் படங்களை தாருங்கள் எனது Server இல் போட்டு உங்களுக்கு பிரத்தியேக நாட்காட்டியை தருகிறேன். ( உங்களுக்கு மட்டுமல்ல எந்த தமிழ் பதிவர்க்கும்). பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

பகீ!
நிரலுக்கு கிளிக்கிய போது; மீட்டும் ஓர் நாட்காட்டியும் படமுமே! எனக்குத் தெரிகிறது.எனைய தங்கள் மணிக்கூட்டுக்கு வந்தது போல் எதுவுமே!! எனக்கு வரவில்லை.
விளக்க முடியுமா??,
தங்கள் ஆக்கத்துக்கும் ஊக்கத்திற்கும் பாராட்டும் நன்றியும்
யோகன் பாரிஸ்

யோகன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. தயவு செய்து Save targert as பண்ணி Save செய்யவும். பின் அதை Open செய்து நிரலை எடுக்கவும்.

பகீ
நல்ல பணி.
இதனால் என்னைமாதிரி வின்95 கணினியை உபயோகப்படுத்துகிறவர்கள் திறக்க நேரம் ஆகாது?.ஏனென்றால் புதிய Flash போடமுடியாது போன்ற பல பிரச்சனைகள்.

என்னுடைய வருகையைப் பதிவுச் செய்கிறேன்ங்க

வடுவூர்குமார், தேவ் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வடுவூர் குமார் வின்டோஸ் 95 இற்கு உரிய பிளாஸ் பிளேயர்கள் வெளிவராவிட்டாலும் இலவச லினக்ஸ் இற்குரிய பிளாஸ் பிளேயர்கள் வரத்தொடங்கிவிட்டன. நீங்கள் ஏன் முயற்சி பண்ணக்கூடாது. நீங்கள் தொடர்ந்தும் வின்டோஸ் 95 இல் இருந்தால் பல விடயங்களை இழந்து விடுவீர்கள். குறை கூறுவதாக எண்ணி விடாதீர்கள்.

பகீ,

//நீங்கள் விரும்பினால் படங்களை தாருங்கள் எனது Server இல் போட்டு உங்களுக்கு பிரத்தியேக நாட்காட்டியை தருகிறேன்.//

பதிவர் விருப்பம்:

>இந்தப் பூனை
போட்டது ஒன்று, இந்த யானை போட்டது ஒன்று.. :))

ஏதாவது ஒன்று தான் முடியும் என்றாலும் சரிதான் :))

பொன்ஸ் உங்கள் படங்கள் சேர்க்கப்பட்டு உங்களுக்கான நாட்காட்டியை upload செய்து விட்டேன். உங்கள் இரு படங்களும் மாறி மாறி இதில் தெரியும்.

நிரலிக்கு (சொடுக்குதல் வேலை செய்யாவிட்டால் Right click செய்து Save target as மூலம் நிரலியை பெற்று கொள்ளுங்கள்.)

பகீ,
விரைவான பதிலுக்கு நன்றிகள். உங்கள் நாட்காட்டியை இணைத்துக் கொண்டு விட்டேன்.. அழகாக இருக்கிறது..

உண்மையில் எனக்கே எனக்கான நாட்காட்டி என்று மிக்க மகிழ்ச்சியாகவும்.. :)

நன்றி பொன்ஸ் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும்.

பகீ,

நல்ல வேலை செய்கிறீர்கள். நாட்காட்டி அழகாக இருக்கிறது. சக்தி கூட்டுப்பதிவிற்கு ஒரு நாட்காட்டி போடலாமென்று யோசிக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

மறுபடியும் நல்லதொரு பணிக்கு நன்றி!

ஒரு கேள்வி: நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்தா பதிகிறீர்கள்?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மதி கந்தசாமி. உங்களுக்கு தேவையானால் உங்களுக்கு விரும்பிய படங்களை இணைத்து தருகின்றேன்.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து தான் பதிகின்றேன். ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம்????

பகீ,

எனக்கொரு மடல் அனுப்ப முடியுமா?

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:

mathygrps at gmail dot com

நன்றி!

பகீ
சொல்ல மறந்துவிட்டேன்.அது அலுவலக கணினி.நான் மாற்றமுடியாது.
:-))

முடியல வடுவூர் குமார். அது என்ன அலுவலகம் இன்னமும் வின்டோஸ் 95 வைத்துக்கொண்டு??

பகீ!
முடிந்தால் இந்த 365 நாளுக்கும் முக்கியமான உலகத்தலைவர்கள்;வின்ஞானிகள்;நடிகர்கள்;கவிஞர்கள்;இலக்கியவாதிகள் போன்றோரின் படங்களைப் போடக்கூடாதா??,
உ+ம்:காந்தி;லிங்கன்;மண்டலா,விவேகானந்தர்,யோகர் சிவாமிகள்;மணி ஐயர்;பாரதி;கண்ணதாசன்,சின்னத் தம்பிப்புலவர்;மு.வ; ஜெய காந்தன்; செங்கையாளியான், மல்லிகை ஜீவா!!!;சிவாஜி;பத்மினி.சாளி சப்ளின்;;இப்படி
அதாவது அவர்கள் பிறந்த நாள்;நினைவு நாள்
யோசிக்கவும்.என்னால் முடியாதப்பா???
யோகன் பாரிஸ்

யோகன் மிக அருமையான யோசனை. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நிச்சயம் முயற்சி செய்கின்றேன்.

நன்றி நன்பரே !!!

பகீ,
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.

செந்தழல் ரவி, வெற்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட






வரதர் ஐயாவின் புதிய முயற்சி
ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.

அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

10 பின்னூட்டங்கள்:
வரதர் ஐயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், ஏதாவது செய்யவேண்டும் என்றால் எனது மெயிலுக்கு தனிமடல் போடுகிறீர்களா?

கடந்த முறை யாழ் சென்றபோது வரதர் ஐயாவைப் படம் எடுத்து, வானொலிக்காகப் போட்டி எடுப்பதாகவும் சொல்லியிருந்தேன், ஆனால் இன்னும் சந்தர்ப்பம் கைகூட முடியாமல் நாட்டு நிலமை மாறிவிட்டது.

நன்றி கானா பிரபா. உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் ஊக்கப்படுத்த. வருகைக்கு நன்றி

வரதர் ஐயாவின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரபா, வரதர் ஐயா அவர்களை விரைவில் பேட்டி கண்டு எமக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

kanags வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. கானா பிரபா நீங்கள் கேள்விகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை பேட்டியாக எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

வணக்கம் பகீ

இதை வானொலிக்காக ஒலிவடிவில் தான் செய்ய இருக்கிறேன், வரதர் ஐயா தன் ஆனந்தா அச்சகத் தொலைபேசி எண் தந்தவர், ஆனால் எமது நேர வித்தியாசத்தில் அவரைத் தொலைபேசியில் பிடிப்பது கடினம் என்றி நினைக்கிறேன்.

ம்........... அதுவும் இப்போது. கடினம்தான்.

பகீ!
அவர் முயற்சி வெற்றியடையட்டும். 2 புத்தகங்கள் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.
யோகன் பாரிஸ்

வரதர் என்றவுடன் எனக்கு அவரது அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகள் தான் நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆவலாக எப்போது வரும் என்று எதிர்பார்த்து வாசிக்கும் சஞ்சிகை அது. போர்க்காலச் சூழ்நிலையில் என்னைப்போன்றவர்களை வாசிப்பை நெசிக்கச் செய்ததற்கு அறிவுக்களஞ்சியத்துக்கும் நங்கூரத்திற்கும் பெரும்பங்கு உண்டு. வரதரின் விருப்புக்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

யோகன் டி.சே தமிழன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

பகீ,
பெரியவர் வரதர் ஐயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பகீ, யார் இந்த வரதர் ஐயா? முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவேன், அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு[என்னையும் சேர்த்து] பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




இன்னுமொரு மணிக்கூடு
உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.









நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

5 பின்னூட்டங்கள்:
நல்ல முயற்சி பகீ.. இதைத் தமிழில் செய்ய முயற்சிக்கலாமே..

ஆங்கில மணிக்கூடுகள் தாம் அனேகம் கிடைக்கின்றனவே... :)

அது தான் முதலே ஒரு தமிழ் மணிக்கூட்டை செய்து தந்திருக்கிறேனே.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பொன்ஸ்

அப்புறம் தான் அதைப் பார்த்தேன்..
அதில் தமிழ் மாதம், ஆங்கில நாள் என்று ஏதோ பிரச்சனை என்றார்களே.. சரியாகிவிட்டதா? எடுத்துக் கொள்ளலாமா? :)

அது என்னவென்றால் இது November 30 இனை கார்த்திகை 30 என்று காட்டும். ஆனால் தமிழிற்கு கார்த்திகை 14 தான் என்று பிரச்சனை. ஆனால் நாம் ஒருவரும் தமிழ் மாதம் தேதி பயன்படுத்துவதில்லை. ஆகவேதான் அப்படியே தமிழ் மொழிபெயர்ப்பாக உருவாக்கினேன்.

மணிக்கூட்டை நானும் பயன்படுத்துகின்றேன், நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




பறாளை விநாயகர் பள்ளு
சுந்தரிக்காக வென்று இப்பதிவு

பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் செயத நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளை என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக்கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாயும் இளையபள்ளி சோழமண்டலப்பள்ளியாயும் காட்சியளிக்கிறார்கள்.

இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக 'கண்ணனே காப்பு' என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது. அதன் பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றது. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல், மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்த பள்ளி இரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.

சுத்தர்பணிந் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும்
அத்த பரஞ்சோதி அண்ணலே - தைத்தலத்துச்
சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்
காலன் வரும்போது கா

8 பின்னூட்டங்கள்:
நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பாடிய மற்றைய பிரபந்தங்கள் -

மறைசையந்தாதி - இது வேதாரணியேசுரர் மேற் பாடப்பெற்றது. இதற்கான உரையை உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவரும், மதுரை மாகா வித்துவான் சபாபதி முதலியார் எழுதியுள்ளார்கள்

கல்வளையந்தாதி - இது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள விநாயகர் மீது பாடப் பெற்றது. இதற்கான உரையை வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ஸ்ரீ.வைத்திலிங்கம் பிள்ளை எழுதியுள்ளார்.

கரவை வேலன் கோவை - கரவெட்டி பிரபு திலகராகிய வேலாயுதம் பிள்ளை மேற் பாடப்பட்டது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச் செய்யுட்கள் சுண்ணாகம் அ.குமாரசாமிப் பிள்ளை அவர்களால் "செந்தமிழ்" பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

நல்லூர் சின்னத்தம்பிப்புலவரின் தந்தையார் பெயர் வில்வராய முதலியார், இவர் ஒல்லாந்தர் அரசினால் "தேச வளமை" நூலை திருத்தி அமைக்க பணிக்கப்பட்ட அறிஞர்.

நன்றி விருபா,
மேலும் நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள் இவற்றை சேர்த்து ஒரு பதிவிட எண்ணுகின்றேன். ஆடசேபனை இருக்காது தானே.

வருகைக்கும் வாழத்துகளுக்கும் நன்றி.

பகீ
பறாளாய் விநாயகர் பள்ளு பற்றி நிறைய விசயங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
விருபாவின் பின்னூட்டமும் மிக விளக்கமாக அமைந்திருந்தது. இருவருக்கும் நன்றிகள்.

பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே...

அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்

நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை

வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்

வாசலிடைக் கொன்றை மரம்.

என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்

சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்

நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்

அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.

அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!
பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!

//இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக 'கண்ணனே காப்பு' என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//

பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!

//சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//
சூலம் திரித்து = சூலம் தரித்து??

கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட






இரண்டு படங்கள்
இந்த இரண்டு படங்களும் நிழற்பட ஓவிய வகையைச் சார்ந்தவை. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting



0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட




இணையத்தளங்களுக்கான கருவிகள்
இணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத்தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற நம்பிக்கையான எனது இணையப்பிரதேசத்தினை(web hosting place) தரமுடியும்.

இதன் மூலம் ஏனைய வலைப்பதிபவர்களும் பயன்பெற முடியும்.

உங்கள் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்க்கிறேன்

2 பின்னூட்டங்கள்:
பகீ,இது பின்னூட்டம் அல்ல.சின்ன சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று.
நான் என்னுடைய டெம்பிளேட்யில் எப்படி மாறுதல் செய்தால் இதை என்னுடைய வலைப்பூவில் புகுத்த முடியும்?
என்னிடம் "சுரதா" விடம் பெற்ற நிரல் (பாமினி/தமிங்கலம்)உள்ளது.தேவைக்கேற்ற முறையில் கருத்தை அடித்தவுடன் அது தானாகவே "போஸ்ட் கமென்ட்" பெட்டிக்குள் போகவேண்டும்.அது எப்படி முடியும்?
ஆதாவது அடித்து முடித்த "டெக்ஸ்ட்"க்கும் கமென்ட் பெட்டிக்கும் எப்படி தொடர்பு கொடுப்பது?
முடிந்தால் விளக்கவும்.
vaduvurkumar at gmail dot com.

வடுவூர் குமார் பின்னூட்டுத்துக்கு நன்றி. இது உண்மையில் சிக்கலான ஒரு விடயம். ஆனால் நாங்கள் உருவாக்கும் பெட்டியுடனே பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கான பெட்டிகளையும் உருவாக்கினால் மிகசுலபமாக உங்கள் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். மேலதிக தகவல்களுக்கு புளொக்கரின் அபி கோட்டை பாருங்கள். இதற்கான கருவியொன்றை உருவாக்கி வருகிறேன். இது சம்பந்தமான பதிவு ஒன்றையும் விரைவில் இட முயற்சிக்கின்றேன்.
உங்கள் கேள்விக்கு இது சரியான பதிலோ தெரியவில்லை. இல்லையென்றால் கேள்வியை இன்னும் விளக்கமாக கேளுங்கள். நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட






உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி
உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்கவும் விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.









நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்களேன்.

6 பின்னூட்டங்கள்:
எனது வலைப்பக்கத்தில் உங்கள் தமிழ் நாட்காட்டியை இணைத்து பின் எடுத்துவிட்டேன், காரணம் அதிலுள்ள முக்கியமான குறை.

நவம்பர் 26 என்பது கார்த்திகை 10. ஆனால் நாட்காட்டி கார்த்திகை 26 என்று காட்டுகிறது இதை சரிசெய்து நாட்காட்டியை வெளியிட்டால் அது உண்மையான தமிழ் நாட்காட்டியாக இருக்கும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Thank you very much.

குறும்பன் வருகைக்கு நன்றி, இந்த கடிகாரம் உண்மையில் ஆங்கில திகதி மாதத்தையே தமிழில் காட்டுகின்றது. தமிழ் மாதம் பெரிதாக பயன்படுத்தப்படாமையினாலே நான் அவற்றை உருவாக்கவில்லை. அவ்வாறான ஒன்றையும் உருவாக்க முயற்சிக்கின்றேன். அனானி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வணக்கம்...பகீ... நீங்கள் அறிமுகபடுத்திய நாட்காட்டியை....பயன்படுத்தியுள்ளேன் மிக்க நன்றிகள்...

சின்னக்குட்டி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

பகீ!
அந்த நாட்காட்டி,மணிக்கூடு யாவும் பொருத்தி ,நன்றிப் பின்னூட்டம் போட்டேன்.
கிடைக்கவில்லையா???
இரண்டும் நன்றாக உள்ளது. என்ன ???என் தளம் தமிழ் மண முகப்புக்கு வரமுடியவில்லை.
அவர்கள் கூறிய பரிகாரமெதுவும் எடுபடவில்லை.
யோகன் பாரிஸ்


பின்னூட்டம் ஒன்றை இட




சுற்றுலாப் போனோம்
இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்











12 பின்னூட்டங்கள்:
நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு

பகீ!
யாழ் பல்கலைக்கழகமா???
என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
யோகன் பாரிஸ்

எங்க போனியளோ தெரியாது. ஆனா 'வில்லூண்டி'யக் காணேல.
வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)

கலாநிதி, சயந்தன், யோகன், வசந்தன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இல்லை. இது வட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டவை. சயந்தன் நான் யாரெண்டு கேட்டு பிரச்சனையில மாட்டி விட்டுராதயிங்கோ.

வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா

உது பழைய படம் போல 01.00.00 காட்டுது

கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே

வணக்கம், பகீ

ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ...........!
(கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.....................)

பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??

பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?

ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு :(

நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.


பின்னூட்டம் ஒன்றை இட




உங்கள் குடிலுக்கு மணிக்கூடு
நான் பலருடைய பதிவுகளுக்கு செல்லும்போது கரையிலிருக்கின்ற தொடுப்புகளை அவதானிப்பது வழக்கம். இப்படிப் பார்க்கின்ற போது பலருடைய பதிவுகளில் அடொப் பிளாஸ்(Adobe Flash) மென்பொருளால் செய்யப்பட்ட ஒரு மணிக்கூட்டினை அவதானித்திருக்கிறேன். ஆனால் அதன்மேல் சுட்டியை கொண்டு செல்லும்போத அது ஒரு விளம்பரமாக தொழிற்படுவதை அவதானித்திருக்கின்றேன்.

இதன் விளைவுதான் இந்த கம்பி மணிக்கூடு. கீழ்வரும் நிரலை உங்கள் குடிலின் தேவையான இடத்தி்ல் ஒட்டுவதன் மூலம் ஒரு அழகிய மணிக்கூடினை பெற முடியும். உங்கள் பின்புல நிறம் என்னவாக இருப்பினும் அதனையே இம்மணிக்கூடும் பயன்படுத்தும். (I set a transparent parameter below the quality parameter). உங்களுக்கு தேவையான உயர அகலத்தை வேண்டியளவு செப்பம் செய்து கொள்ளுங்கள். (Change the width and height in both places)






<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs

/flash/swflash.cab#version=6,0,0,0 " width="200" height="200" id="a_clock" align="middle">

<param name="movie" value="http://www.aslibrary.org/images/a_clock.swf" />
<param name="quality" value="high" />
<param name="wmode" value="transparent"/>
<param name="bgcolor" value="#ffffff" />
<embed src="http://www.aslibrary.org/images/a_clock.swf" quality="high" bgcolor="#ffffff" width="200" height="200" name="a_clock" align="middle" type="application/x-shockwave-flash"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
</object>



இதனை பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ஒரு பின்னூட்டம் போடுங்கள். பயன்படுத்தாவிட்டாலும் கூட ஒரு பின்னூட்டம் போடுங்கள். மாற்றங்கள் தேவையென்று நினைப்பவர்கள் அதைக்குறித்தும் பின்னூட்டம் போடுங்கள். வேறு புதிய கருவிகள் தேவையென்று நினைப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் உருவாக்க முயற்சிக்கிறேன்.

12 பின்னூட்டங்கள்:
பகீ!
நான் ;உங்களைப் போல் ஒருவரைத்தான் தேடுகிறேன்.என் புளக்கர் ; தடையாகவுள்ளது கருவிப்பட்டறை பொருத்த முடியவில்லை.
உங்கள் நண்பர் கலீலுக்கும் இதே பிரச்சனை போல் உள்ளது.காரணம் பின்னூட்டிய பின் கடந்த 24 நேரத்தில் பின்னூட்டியவர்கள் பட்டியலில் வரவில்லை. இது அக் கருவிப்பட்டடை பொருத்தாத பிரச்சனை!!
இப்படியான தகவல்கள் தரும் போது எங்களைப் போன்ற கணனிப் பின்புல அறிவற்றவர்களுக்காக சற்றுக் கூடுதலாக செய்முறை விளக்கம் தரும் படி அன்புடன் கேட்கிறேன்.
இவை மாத்திரமல்ல என்னும் பல விடயங்களைப் பொருத்தி என் தளத்தைப் பவனிவரவிட விருப்பம்; அந்த அளவு கணனி அறிவில்லை.
என் பதிவுகள் பல வெளியே வராமல் கிடக்கிறது. எனக்கும் சிறு வாசகர் குழு உண்டு.
என் செய்வேன்.எனக்குத் தெரியவில்லை.
தங்கள் தொலைபேசி இலக்கம் தனி அஞ்சலிடவும். விரும்பினால்
பிரபா தங்களைப் பற்றிக் கூறினார்.
யோகன் பாரிஸ்
http://johan-paris.blogspot.com/

பகீ!

உங்கள் நிரல் அருமையாக இருக்கிறது. வெகுவிரைவில் என் அடைப்பலகையில் மாற்றம் செய்யும் போது நிறுவுவேன். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

யோகன் உங்கள் புளொக் புளக்கர் பேற்றாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையை நிறுவுவதற்கு வழமையான முறையை பயன்படுத்த முடியது.
http://blog.thamizmanam.com/archives/51
இந்த முகவரிக்கு சென்றால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். அவைபோதாவிடின் அல்லது சரிவராவிட்டால் எனக்கு மின்னஞ்சலிடுங்கள். இது சம்பந்தமாக ஒரு பதிவிடவும் முயற்சிக்கிறேன்.

மலைநாடான் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

வணக்கம் பகீ,

உங்களின் இந்த உதவியால் எனது குடிலிலும் மணிக்கூட்டை இணைத்துள் ளேன். உங்கள் உதவிக்கு நன்றிகள்.

சத்தியா, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

தலைப்பை பாத்தவுடன நினைச்சன் ஒவ்வொரு ஆக்களுக்கும் மணிக்கூடு தரப் போகிறீர்கள் எண்டு..

அதுதான் ஒவ்வொருத்தருக்கும் மணிக்கூடு தந்திருக்கு தானே

பகீ!
நன்றி!
உங்கள் மணிக்கூட்டை என் மாளிகையில்(காகத்துக்கும் தன் குஞ்சுங்க) பொருத்திவிட்டேன்.
ஏனையதையும் முயல்கிறேன்.
எனக்கு தளமைத்தது. மலைநாடர்;என்னை ஊக்கப் படுத்தியதும் அவரே!!!;அத்துடன் குமரனும் யுக்திகளைச் சொல்லித் தந்தவர்கள்.
நான் பின்னூட்டமே இடத்தெரியாமல்; வாசித்துவிட்டு;மின்னஞ்சல் கொடுத்திருந்தவர்களுக்கு ;அதில் பதில் கூறி வாழ்ந்தவன்.குமரன் அதைச் சொல்லித்தர; மலைநாடர் வீடு கட்டித் தந்தவர்.
என் ஆரம்பப் பதிவுகளில் சொல்லியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும்.
தங்கள் நண்பர் கலீஸின் பின்னூட்டமெதுவும் ;தெரியவில்லை;அவரும் கருவிப் பட்டை பொருத்தவில்லையா??
யோகன் பாரிஸ்

யோகன் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் நன்றி. மணிக்கூட்டை உங்கள் தளத்திலும் பொருத்தியமைக்கு நன்றி.

பகீ!
நீர் எனக்கு ஓசியில தந்த மணிக்கூட்ட சந்தோசமா என்ர புளொக்கறில பொருத்திப்போட்டன். அப்படியே மணிக்கூடு சரியா யாழ்ப்பாணத்து மணிக்கூண்டுக் கோபுர மணிபோலவே இருக்குது. ஆனால் இதுக்கும் அதுக்கும் ஒரேயொரு வித்தியாசம் என்ன தெரியுமா? இது ஓடும் அது ஓடாது.

நன்றி.உங்கள் மணிக்கூடை என்
தளத்தில் உபயோகித்து கொண்டேன்.

வாருங்கள் லக்சுமி. பின்னூட்டத்திற்கு நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட




சூத்திரஞானம்
வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
வானில் வரும் ரதிமதியும் வாசி யாகும்
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூலதேகம்
நான்முகனே கண்மூக்குச் செவி நாக் காகும்
தந்திமுகன் சிவசத்தி திருவமூச் சாகும்
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே

அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்கலாமே.

(பூரகம் - மூச்சு உள்வாங்கல், கும்பகம் - சுவாச பந்தனம், இரேசகம் - சுவாசத்தை விடல்)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட




சிறையிலிருந்து ஒரு கடிதம்
அம்மா
நண்பர்கள் என்னைத் தேடி வந்து
கதவில் தட்டும்போதெல்லாம்
நீ வெம்பிக் கண்ணீர் மல்குதை
எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

ஆனால்
வாழ்க்கையின் சிறப்பு
என் சிறையில் பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்.

(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






ஈழத்து நூல்கள்
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை - சோதிட நூல்
செகராசசேகரமாலை - சோதிட நூல்
செகராசசேகரம் - வைத்திய நூல்
பரராசசேகரம் - வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு - கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை - கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் - வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் - தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு - ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு - கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை - கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் - கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் - சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் - ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது - காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை - பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் - விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் - கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் - வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை - சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி - சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி - வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு - பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி - இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு - கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி - சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

13 பின்னூட்டங்கள்:
நல்லது பகீ, உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியதே தேவைப்படும்போது நீர் தந்த இந்த நாகாஸ்திரத்தை பிரயோகிக்கின்றேன்

நல்லது பகீ, உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியதே தேவைப்படும்போது நீர் தந்த இந்த நாகாஸ்திரத்தை பிரயோகிக்கின்றேன்

இதுவரை நான் அறிந்திராத விவரங்கள்.
தகவலுக்கு மிக நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

பகீ!
நல்ல தகவல்கள்; கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலரா???
யோகன் பாரிஸ்

வருகைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

யோகன், கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலராய் இருக்க முடியாது. ஏனென்றால் இவையனைத்தும் 18ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்கள்.

//கரவை வேலன் கோவை பாடியது கல்லடி வேலராய் இருக்க முடியாது//
கரவை வேலன் கோவை ஒரு சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதனை எழுதியவர்: நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.

இவர் இணுவில் சின்னத்தம்பிப் புலவரல்ல. மேற்கூறிய சுட்டியில் அவரைப் பற்றி எழுதியுள்ளேன்.

what good thing ur doing, congratulation , continue continue continue.......

வருகைகளுக்கு நன்றி. Kanags தகவலுக்கு நன்றி.

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து நென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

பகீ
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய நல்ல பதிவு இது. நன்றி.
பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா படித்ததில்லை.
சுழிபுரம் என்ற ஊரில் நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவிலே பறாளாய் விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது, மிகவும் புராதானமான கோயிலிது. இந்த பெருமைமிக்க கோயிலைப்பற்றி சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு
1. ஒல்லாந்தர் இந்தக் கோயிலை இடிக்க முற்பட்டபோது காகங்கள் அவர்களைக் கொத்ததிக் கலைத்தததாகவும் அதனால் ஒல்லாந்தர் இப்பிள்ளையார் கோயிலை இடிக்காமற் விட்டுச்சென்றதாகக் கூறப்படுகிறது
2. இந்தக் கோயிலில் மிகவும் பழமைமிக்க தேர் ஒன்று உண்டு. அத் தேரிலுள்ள நுட்பமான முறையில் மரத்தில் செதுக்கப்பட்ட கலையம்சமிக்க சிற்பங்கள் மிகவும் பிரபல்யானவை. அத் தேரினைச் செய்தவர் வெள்ளோட்டத்தின் போது குருவியாகப் பறந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனது ஊர்க் கோயிலைப்பற்றி நான் எழுதும் போது எனக்கும் பெருமையாயிருக்கிறது.
நன்றி

சுந்தரி வருகைக்கு நன்றி. உங்களுக்காகவேனும் பறாளாய் பிள்ளையார் கோவில் சென்று புகைப்படம் எடுத்து பதிவில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

நன்றி பகீ
மேலும் அக் கோயில்ப் பிள்ளையார் காக்கைகள் (ஆகி) மூலம் ஒல்லாந்தரை கலைத்தபடியால் அப் பிள்ளையாருக்கு காக்கைக் கொத்திப் பிள்ளையார் என்று பெயரும் உண்டு

சுந்தரி


பின்னூட்டம் ஒன்றை இட






கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்
ஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.

நீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.

குறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.

குறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.

நீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.

நீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.

வெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.

நீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க...

4 பின்னூட்டங்கள்:
Its Good, Keep it up

good.. To contact with me add scoutprabu@hotmail.com in yr msn messenger.

பகீ!
என்னிடம் கைத்தொலைபேசியே இல்லை. எனினும் தங்கள் தரவுகள் ஏனைய படக் கருவிக்கும் செயல்படுத்தக் கூடியவை!!
பயனான விடயங்கள்
நன்றி!
யோகன் பாரிஸ்

அட உங்களுக்கே புகைப்படம் எடுத்தல் பாடமா யோகன்?? பின்னூட்டத்துக்கு நன்றி யோகன்.


பின்னூட்டம் ஒன்றை இட






வானம்பாடி

கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

3 பின்னூட்டங்கள்:
நீர் பெரிய ஆள் ஐசே, ஒருமாதிரிக் கண்டுபிடிச்சிட்டீர். அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறன்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கானா பிரபா.

இருவருக்கும் வாழ்த்து.


பின்னூட்டம் ஒன்றை இட






கதிரைச் சிலேடை வெண்பா 17-20
நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்
கற்பங் கடக்குங் கதிரையே - வெற்பரிந்தோன்
தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை (18)

வெற்பு அரிந்தோன் - மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த - மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை - பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் - நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே - தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் - திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே - தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.

மாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே - சேலேவை
மாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ
மாமடுவை வேலை மலை. (19)

சேல் ஏவை மாமடுவை வேலை மலை - சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் - மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை - மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்திய தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு - மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே - சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் - அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே - ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.

துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே - செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு (20)

கண்டு அடக்குஞ் செப்புமொழி - கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி - அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் - இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் - எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு - உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை - பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை - கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.

1 பின்னூட்டங்கள்:
பதிவுக்கு நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட




என்றென்றும் பல்ஸ்தீன்
பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

2 பின்னூட்டங்கள்:
நல்ல கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கானா பிரபா.


பின்னூட்டம் ஒன்றை இட






கதிரைச் சிலேடை வெண்பா 16,17
பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்
கற்பு மலருங் கதிரையே - வெற்புடனே
மாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச
மாமூல வேரறுப்பான் வைப்பு (16)

வெற்புடனே - மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து - அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த - தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் - உயிர்களது வஞ்சனை மிக்க இருண்மலத்தின் மூலமாகிய அவாவை அறுக்கும் முருகக் கடவுளது, வைப்பு - ஊர், சொற்புலவர் தூக்கினில் - சொல்வன்மையுள்ள புலரவர்களது செய்யுள்களில், கற்பு மலரும் கதிரையே - கற்பனை நயங்கள் விரிந்த பல பொருட்களை காட்டும் கதிரைப்பதியேயாகும், தூயமலர்ச்சோலையில் - தூய்மைவாய்ந்த பூஞ்சோலைகளில், கற்பு மலருங் கதிரையே - முல்லைக்கொடிகள் மலருங் கதிரைப்பதியேயாகும்.

நல்லார் மதிமுகத்து நாடு முலைமுகத்துங்
கல்லாரம் பூக்குங் கதிரையே - மல்லாடி
வந்தே விடுந்தேரான் மாயவடி வேற்பணித்த
வந்தே விடுந்தேரான் வாழ்வு. (17)

மல்லாடி வந்து ஏ விடுந்தேரான் மாய - போராடி எதிர்வந்து அம்புகளைத் தொடுத்த பகைவனாகிய சூரன் அழியுமாறு, வடிவேல் பணித்த - கூரிய வேலை ஏவிய, வந்து ஏவிடுந்தேரான் - வாயுதேவன் செலுத்திய தேரையிவர்ந்த முருகக்கடவுளின், வாழ்வு - கோயில், நல்லார் மதிமுகத்து - பெண்களது சந்திரன் போன்ற முகத்தில், கல்லாரம் பூக்குங் கதிரையே - குவளை மலர்கள் பூக்குங் கதிரைப்பதியேயாகும், நாடும் முலைமுகத்து - விரும்பப்படும் தனங்களின் மேல், கல் ஆரம் பூக்குங் கதிரையே - இரத்தினமாலை பொலியுங் கதிரைப்பதியேயாகும்.

1 பின்னூட்டங்கள்:
நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




கதிரைச் சிலேடை வெண்பா 11-15
மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்
கைக்குறி பார்க்குங் கதிரையே - கைக்குங்
கடமலையு மையற் கடமு மழித்துப்
படமலையு மையன் பதி. (11)

அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்
கஞ்சனை கடுக்குங் கதிரையே - விஞ்சுபல
மாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு
பாயத்தா னாடற் பதி. (12)

வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டி
கண்ணி வளைக்குங் கதிரையே - நண்ணுங் (னிலுங்)
கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்
கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)

இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்
கந்துகத்தே ரோட்டுங் கதிரையே - முந்தும்
பாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்
பாவமா வினையடித்தான் பற்று. (14)

மன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்
கன்னிகையை யேற்குங் கதிரையே - முன்னமலை
மாவர சத்தியத்த மால்கொளசுர் மைந்தடக்கு
மாவர சத்தியத்தன் வாழ்வு. (15)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழுங்
காய்கதிரைக் காட்டு்ங் கதிரையே - மேயசடை
ஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்
ஆறா னனத்த னகம் (6)

விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்
கற்கண்டங் கூறுங் கதிரையே - அற்பார் மொழியிற்
உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்
அறுவர்பய முண்டா னகம் (7)

வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்
காசிலன முண்ணுங் கதிரையே - மோசக்
கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்
திருவிளையாட் டம்மான் சிலம்பு (8)

அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்
கற்பூர மேவுங் கதிரையே - பொற்பூரு
மஞ்சத்தான் றோற்று மறுகவரு வானடியே
மஞ்சத்தான் றோற்று மரண். (9)

மேயகொடி மாளிகையு மெய்யடியார் கூட்டமுமா
காயங் கடக்குங் கதிரையே - தீய
மடக்குஞ் சரத்தானை மாமுகனைப் போரின்
மடக்குஞ் சரத்தான் மலை (10)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
யாழ்ப்பாணத்து நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் அவர்களால் கதிர்காமக் கந்தன் மேல் கண்ணோய் தீர பாடி கண்ணோய் தீர்ந்ததே இந்த கதிரைச் சிலேடை வெண்பாவாகும். இந்நூல் சிலேடை வெண்பாக்களினால் ஆன நூறு பாடல்களால் ஆனது. பொருளணியாகிய சிலேடையணியும் சொல்லணியாகிய மடக்கணியும் இந்த பாடல்கள் தோறும் நின்று சிறப்புச்செய்கின்றன. இப்பாடல்களில் சிலேடையணிகள் எல்லாம் கதிர்காமப்பதியினையும் மடக்கணிகள் எல்லாம் முருகப்பெருமானையும் போற்றி துதிக்கின்றன.

இனி நூலுக்கு வருவோம்.

காப்பு

விநாயகர்

கானுயிர்பூஞ் சோலைக் கதிரைச்சி லேடைவெண்பா
நானுரைக்கச் செஞ்சோ னயந்தருமே - வானவர்க்கு
முன்னுனை மாமுகவன் முன்னருளு மைந்துகரத்
தன்னானை மாமுகவன் றாள்.

மாணிக்கப் பிள்ளையார்

தேவரு மேத்துங் கதிரைச்சி லேடைவெண்பா
நாவரு மேத்தி நனிபணிந்தாற் - பூவருளு
மாதங்கம் பாதி வளர்வரையீ மாணிக்க
மாதங்கம் பாத மலர்.

நாமகள்

காசிப் பதிநேர் கதிரைச்சி லேடைவெண்பா
பேசிப் பரவப் பெரிதருளும் - ஆசைமுகன்
அம்புயத்தி னுவி லகத்திற் சிரத்தில்வெள்ளை
அம்புயத்தில் வாழு மனம்

நூல்

பூமருவு தண்டலையும் பொன்னனையார் பூங்கரமுங்
காமருவண் டார்க்குங் கதிரையே - ஓமருவும்
அத்தமறை தந்தா னறிய னனுங்கமுடி
யத்தமறை தந்தா னகம் (1)

பாவலருங் கண்டும் பணிமொழியா ருஞ்சுரும்புங்
காவலரைக் கூடுங் கதிரையே - தேவ
னுருக்குளத்து வந்தா னொரமுருகா காவென்று
ருக்குளத்து வந்தா னுறை (2)

பூப்பயிலும் பொன்னன்னார் பொன்புனைவார் பூங்கரத்தைக்
காப்பணியுஞ் செல்வக் கதிரையே - மாப்பிறவி
யாறக் கரத்தா னனைத்தெம்மை யாள்குமரன்
ஆறக் கரத்தா னரண். (3)

மங்கலிமார் வாண்முகமும் வண்டலைபூந் தண்டலையுங்
கங்கண மேவுங் கதிரையே - வெங்கலிதீர்
காசரவ ணத்தன் கமலத்தன் கைகுவிக்கு
மாசரவ ணத்தன் மலை (4)

உண்ணேய மிக்கோரு மோங்குமிளங் காவமலர்க்
கண்ணீர் சொரியுங் கதிரையே - யெண்ணுமறை
பன்னிருகை யாரின்பம் பாவமறுத் தீயுமருட்
பன்னிருகை யாரின் பதி (5)

4 பின்னூட்டங்கள்:
பொருள்? பதவுரையும் கூட இடலாமே...

விரிவாக விளக்கினால், என்னைப் போல் பலரும் பயனடைவோம்.

நிச்சயமாக. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி Bostan bala

பகீ, நல்ல முயற்சி. பொஸ்டன் பாலா சொன்னது போல பொருளும் தந்தால் பலர் பயனடைவர்.

நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரின் வரலாற்றையும் சுருக்கமாக (ஏன் விரிவாகவே!) தந்தீர்களானால் உங்கள் பதிவு முழுமையாக இருக்கும்.

நிச்சயமாக மீதி பாடல்களை பொருள்களுடன் போடுகின்றேன். முன்னைய 15 பாடல்களுக்கும் பொருள் சேர்த்து பப்ளிஸ் பண்ணுகிறேன். வருகைக்கு நன்றி Kanags


பின்னூட்டம் ஒன்றை இட




மறுமொழி மட்டறுத்தல்
நான் எனது இந்த பதிவிற்கு மறுமொழி மட்டறுத்து விட்டேன் கவனத்தில் எடுங்கள் மறுமொழி நிலவரத்தை காட்டுங்கள் என்று தமிழ்மணத்திற்கு இரண்டு முறை பின்னூட்டமிட்டுவிட்டேன். கவலை என்னவெனில் இரண்டு முறை இட்ட பின்னூட்டம் தானும் இன்னமும் பப்ளிஸ் பண்ணப்படவில்லை. எனது இந்த பதிவுகளின் மறுமொழி நிலவரமும் காட்டப்படுவதில்லை.

யாராவது இந்த பிரச்சனைக்கு உதவமுடியுமா எனப்பாருங்கள்.

நன்றி.

4 பின்னூட்டங்கள்:
enakkum athe gathi thaanga..mail anuppitten...onnum proyojanam illa..
ippo ellam ezhuthrathe illa intha oru karanathaala,,!

பின்னூட்டம் போட்டு நிறைய நாட்களாகிவிட்டதா?
பின்னூட்டமே வெளியிடப்படவில்லையென்றால் அவர்கள் இன்னமும் அதைப்பார்க்கவில்லையென்றுதான் பொருள்.
தங்கள் முழுநேரப்பணிகளுக்கிடையில் கிடைக்கும் சிறுநேரத்தை சேவை மாதிரிச் செலவழிக்கிறார்கள்.

நாங்கள் கொஞ்சம் பொறுத்துப் போகவேண்டும். இதில் மற்றவர்கள் உதவுவதற்கு எதுவுமில்லை.

எனக்கு அது தெரிந்தாலும் ஒரு ஆதங்கத்தில் தான் அதனை பதிவாக்கினேன். பின்னூட்டங்களுக்கு நன்றி

என்னோட பதிவுகளோட மறுமொழி நிலவரம் இப்போது தமிழ்மணத்தில் காட்டப்படுகிறது. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






யாழப்பாண நூல்நிலையம்
யாழ்நூல்நிலையத்தின் மேலும் இரண்டு தோற்றங்கள்.

எரிந்த நிலையில்

Photobucket - Video and Image Hosting



மீள கட்டப்படும்போது.

Photobucket - Video and Image Hosting


2 பின்னூட்டங்கள்:
அரசியலில் எப்படியிருந்தாலும்; அல்பிறட் துரையப்பா!!!! கலாரசனை மிக்கவர் என்பது இக் கட்டிட மைப்பில் தெரிகிறது.
யோகன் பாரிஸ்

வருகைக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி யோகன்.


பின்னூட்டம் ஒன்றை இட






பித்தவெடிப்புக்கு மருந்து
மழைகாலம் தொடங்கி விட்டது. பித்தவெடிப்பு இருப்பவர்களுக்கு தொல்லைகொடுக்கும் காலம் மட்டுமல்லாமல் சிலருக்கு பித்தவெடிப்பேற்பட்டு மிகவும் வலி வேதனைகளை கொடுக்கும். இதனால் என்னுடை நூற்சேர்வைகளுக்கிளிருந்து பித்தவெடிப்புக்கான மருந்தை கண்டு எழுதியிருக்கிறேன். தேவையானவர்கள் பார்த்து பயன் பெறவும். அப்படியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போடவும்.

சாந்தியாம்பித்தவெடி கண்டபேற்குத் தயவாக மருந்தொன்று செப்பக்கேளும் வாந்தியாம் வாயூறல் மயக்கம்நீங்க வாகாகத்தயிலமொன்று சாற்றக்கேளும் காந்தியாம்வெட்டிவேர்யேலந்தானும் கனமானமஞ்சிட்டிதேவதாரம் வேந்தியாம்நெல்லிமாஞ்சில்
கிராம்புசந்தம் மேலான தாளிசமாம் சீரமாமே,


சீரகமாநாகப்பூ பருததிநெல்லி திறமானமுசுமுசுக்கை சொன்னாங்கண்ணி காரமாமதுரமோடேலஞ்சுக்கு கனமானசிட்டமுடன் மாஞ்சில் முததம் தீராமாம்குடோரியது வொன்றாய்க்கூட்டித்திறமாக எண்ணெய்தனில் காய்ந்துமேதான்
வீரமாம்யெண்ணெயிடதயியிவேகம் வேதாந்தகுருபீடமிதுவாமே.


இதுவுமாம்கண் புகைச்சல்கண்ணெறிவு யிதமானகபாலவலிமண்டைக்குத்து சதுவுமாம்நீர்ப்பாய்ச்சல்நீரெறிவு சதுரானபித்தவெடிபித்தக்காந்தல் கதுவுமாம்பித்நாற்பதுவும்போகும் கடினமாம்யித்தயிலம் நவுலொணாது வெதுவுமாம் மண்டலந்தான்
முழுகிவாநீ மேருவாந்தயிலமது விளம்பக்கேளே.


இது பதினெண்சித்தர்களில் மகாமகுத்துவம் பொருந்திய தன்வந்திரிபகவான் யூகிமுனிக்கு உபதேசித்த வயித்தியகாவியம் ஆயிரம் ( 1892 இல் பதிக்கப்பட்டது - வித்தியாவிநோத அச்சுக்கூடம்) என்ற நூலி்ல் இருந்து எடுக்கப்பட்டது.

2 பின்னூட்டங்கள்:
ayyo...pittha vedippaa...dont remind me about that. I had horrible time during my chilhood time bcos of that...I used to apply a white colored cream for that which works quite well. I forgot the name of the medicine
------------------------------------
http://internetbazaar.blogspot.com/

ayyo...pittha vedippaa...dont remind me about that. I had horrible time during my chilhood time bcos of that...I used to apply a white colored cream for that which works quite well. I forgot the name of the medicine
------------------------------------
http://internetbazaar.blogspot.com/


பின்னூட்டம் ஒன்றை இட




விலைவாசி
யாழ்ப்பாணத்தில பொருட்களின்ர விலைய நீங்களும் அறிஞ்சுகொள்ளவேண்டும் எண்டுதான் இதுகளை பதிவாக்கிறன். வேறெந்த நோக்கமும் இல்லை. இப்பிடியே போனா டொலருக்கு சமனா யாழ்ப்பாணத்தில ரூபா வந்திரும்.

பெற்றோல் - 700.00
சிகரட் (ஒன்று) - 20.00
மண்ணெய் - 200.00
அரிசி - 180.00
மா - 130.00
தேங்காய் எண்ணெய் - 500.00
நல்லெண்ணெய் - 550.00
உள்ளி - 1200.00
மல்லி - 900.00
தேயிலை - 800.00
உழுந்து - 250.00
சவர்க்காரம் - 80.00
நெருப்புப்பெட்டி - 30.00
நுளம்புத்திரி - 150.00 (பெட்டி)
சீனி - 400.00

1 பின்னூட்டங்கள்:
விலைப்பட்டியல் ஆச்சரியமா இருக்குது போஸ்ட்ல சாமான் அனுப்பி கிடைக்கிறத பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கோவன் என்ன...


பின்னூட்டம் ஒன்றை இட






ஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்
வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.

சுகம்
பல்லரும்பா மழலை
வாய்குதப்பும் கைவிரல்
முரசழுந்தும் குறுகுறுப்பு
காதல் கவ்விக் குதப்பும் மனங்களில்

உள்ளொளி
தெளிந்த ஆழ் சுனைமனதில்
அலைகிளா அமிழ்ந்தாய்
அதிர்வுசூழ் கவிதையென
உன் சிறுசலனமும்
குமிழ் பெருக்க
சுனைமனது நுரைபூக்கும்
கவிதை கவிதையாய்.

காமம்
1
பாத்தியில் விழுந்து
தெறிக்காது தவழ்ந்து
வடிந்தடங்கும் பக்குவமாய்.
2
தறிகெட்டு பாய்ந்து
பாத்திமேவி
பரவி வடிந்து
தேங்கி நாறும் சகதியாய்

காதல் வனைந்த வாழ்வு
மடியும் கன்றின் மூக்குமாய்
முட்டி முட்டி
உனதும் எனதும்
பார்வைகள் உமிந்தன
என்னையும் உன்னையும்
மிச்சமில்லாமல் கரைந்து
மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்
சருமத் துவாரங்களில் காதல்வழிய
வெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்
முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்
உன் மனதில்
நிலவில் ஒளவையென
நித்தியம் என் சீவியமென்று
உச்சிக்கபாலத்தில் எழுதினோம்
ஒருவருக்கொருவர்

அலைப்புறும் மயிர்க்கீற்றுகள் ஒதுக்கி
கைகளில் ஏந்தி
கதுப்புகளில் புதையுண்டு
தழுவும் கணப்புகள் தணிவதேயில்லை.
காதலின் சுட்டுவிரல் பற்றி
வாழ்வின் வசீகரப்பொழுதுகள் நடையிட
வாழ்வு காலெடுத்த தடங்களில்
பசுந்தங்கப் படிவுகள்.

பூக்கவ்விய நாய்
பூக்கவ்வி
சலிக்காத வாலசைத்து
தெருவெல்லாம் முகர்ந்தலைந்தேன்

புழுதிபடல் நீள் தெருவில்
காத்திருந்து
வால்குழைத்துக் கால்சுற்றி
சிணுங்கினேன் செல்லமாய்,
பரிவொளிரும் பார்வை கொண்டு
மிருதுவாய் மனசளைந்து
கைசொடுக்காது கடந்து போனாய்
காட்சிகள் நீரில்மூழ்க

திருக்கோவில்களில்
நூலணிந்த கைகூப்பி
நீறணிந்து தொழுதழுது
சலிக்காது வாலசைக்கும்
பூக்கவ்வி.

3 பின்னூட்டங்கள்:
"மிச்சமில்லாமல் கரைந்து
மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்"
நன்று.

தமிழ் மொழியைத்தவிற வேறு எம்மொழியால் இவ்வளவு அழகாக பாவிக்கமுடியுமோ?

ஊக்கங்கள்.
தொடர்ந்து எழுதிவரவும்.
நன்றி.

வருகைக்கு நன்றி மாசிலா. வாழ்த்துக்கு நன்றி.

அருமையான கவிதைகள். தொடர்ந்து படிக்க ஆவல். வாழ்த்துகள்.


பின்னூட்டம் ஒன்றை இட




இரு கவிராயர்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இலக்கிய வழி எனும் நூலில் (திருத்தப்பதிப்பு - 1964) இருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல்களை ருசித்துப்பாருங்கள்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வேட்டைத்திருவிழாவினை பற்றி முத்துக்குமார கவிராயர் பாடிய இந்த பாடலை பாருங்கள்.

முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
தடைவி டாதனை யென்றுப லாலிகண்
சார வந்தனள் ஓரிள வாலையே

இதே போல நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் பற்றி சேனாதிராய கவிராயர் பாடுவதை பாருங்கள்

திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.


இப்பாடல்களின் பொருளை பிறிதொரு பதிவில் தருகிறேன்.

1 பின்னூட்டங்கள்:
பகீ!
இன்றைய இளைஞர்களும்,கவிஞர்களும் படித்துக் கவித்துவத்தின் அழகை,ஆழத்தை உணரவேண்டிய; அருமையான சிலேடைப் பாடலப்பா!!! இவற்றைத் தேடிக் கொண்டிருந்தேன். தந்ததற்கு மிக்க நன்றி!!
இப் பாடல்கள் இணையத்தில் இருந்தால் சுட்டி தரவும். உங்களிடம் புத்தகம் இருந்தால்; அதில் விற்குமிட விலாசமிருந்தால் எனக்குத் தரமுடியுமா???. இப்போதும் புத்தகம் கிடைக்குமா???கிடையாதெனில் எனக்கோர் பிரதி தரமுடியுமா?? உங்கள் பதிலை என் மின்னஞ்சலுக்கு இடவும். ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.
johan54@free.fr
யோகன் பாரிஸ்


பின்னூட்டம் ஒன்றை இட






பணம் பண்ணலாம் பணம்
இண்டைக்கு வழமைபோல இணையத்தை சுத்தி வரேக்க இந்த இணையத்தளத்தை கண்டு பிடிச்சனான். இதுகும் google adsence போலத்தான். நீங்களும் ஒருக்கா முயற்சி பண்ணி உங்கட தளத்தாலையும் பணம் பண்ணேலுமோ எண்டு பாருங்கோ...............

2 பின்னூட்டங்கள்:
Thanks for the link:-) It seems to be a good network. Anyway, if u dont mind, can u tell me how much money u made using this ad company?
----------------
http://internetbazaar.blogspot.com

Hi,
I have signed up by clicking ur link. So when I get approved, you should be paid $25.00. I will inform u abt update from my side....

http://internetbazaar.blogspot.com


பின்னூட்டம் ஒன்றை இட






பதிபவர்கள்
எல்லா இடத்திலயும் பதிபவர்கள் ஒன்றுகூடி கூட்டங்கள் வைக்கினம். எனக்கும் ஒரு ஆசை கூட்டம் வைக்க இல்ல. எத்தனை பேர் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு அறிய. உங்களுக்கு யார் யார் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ. மெத்தப்பெரிய உபகாரமா இருக்கும்.

1 பின்னூட்டங்கள்:
முந்தி யாழ்.கோபி எண்டு ஒரு சிங்கன் உங்க இருந்து பதிஞ்சுகொண்டிருந்தவர். இப்ப ஆளைக்காணேல.
இன்னொரு பெண் நூலகர் பதிஞ்சுகொண்டிருந்தவ. முடிந்தால் நீங்கள் ரெண்டு பேரும் சந்திக்கலாம்.
நீர் உங்கயிருந்து யாழ்ப்பாண நிலைவரத்தைப் பற்றி அடிக்கடி அறிக்கை போடும்.
பொருட்களின்ர தட்டுப்பாடு, முக்கியமான பொருட்களின்ர விலை எண்டு தொகுத்து அடிக்கடி நிலைமையை வெளியில கொண்டு வாரும்.
முடிந்தால் சில படங்களையும் போடும்.


பின்னூட்டம் ஒன்றை இட




நண்பரின் திருமணம்






வாழ்த்துச்சொல்லுங்கள். நன்று வாழ.

2 பின்னூட்டங்கள்:
தோழரும் தோழியும்
வாழ வாழ்த்துக்கள்!

நண்பனின் திருமண வாழ்வு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்


பின்னூட்டம் ஒன்றை இட






உமா ஜிப்ரான்
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத பெயரென்றாலும் அழகான ஆக்ரோசமான பல கவிதைவரிகளுக்கு சொந்தக்காரர். ஈழத்திலிருப்பதை பெருமையாய் சொல்லும் வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது கவிதை ஒன்றை பாருங்கள். இது இம்சை எனும் பெயரில் காலச்சுவடு 19 வது இதழில் வெளிவந்தது.

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்
பசித்த புலியின் குரூர வசீகரம்

உரையாடலின் நடுவே
அடிக்கடி
நெருப்பை உமிழும் நெடுமூச்சு
அலையென எழுந்து தாழும் மார்பை
விழிகள் தெறிக்க
.............................. தொடந்து செல்கிறது கவிதை.

நீண்ட நாட்களாகவே இவரை எனக்கு பழக்கமாக இருந்தாலும் ஒரு இலக்கியவாதியாக அறிமுகமாகி சில நாட்களே ஆகின்றன.

அமைதியான பேச்சு, அழகான உருவத்திற்கு சொந்தக்காரர் உமாஜிப்ரான். பாலஸ்தீனத்து இலக்கியவாதி கலீல் ஜிப்ரான் இன் பாதிப்பு இந்த புனை பெயரென்றாலும் மீதி உமா யாரென்று தெரியவில்லை. காலச்சுவடு இதழ்கள் உட்பட சிறிய புத்தகச்சேகரிப்பு இவரிடம் உண்டு அவற்றிலிருந்து எனக்கு இப்போது புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்துவதில் பின்னடிக்கும் அவ்வாறான ஆசைகள் தனக்கும் இருந்ததை நினைவு கூருகினறார்.

எப்படியென்றாலும் இவரிடமிருந்து ஒரு கவிதை வாங்கி பதிவில சேக்கிறது எண்டு முடிவெடுத்திருக்கிறன் பாப்பம்.

2 பின்னூட்டங்கள்:
//கலீல் ஜிப்ரான் இன் பாதிப்பு இந்த புனை பெயரென்றாலும் மீதி உமா யாரென்று தெரியவில்லை. //

எனக்குத் தெரியுமே....

நான் அவரின் தீவர இரசிகன்.
தனியே கவிதைகள் மட்டுமன்றி, நிகழ்வுகளைத் தொகுக்கும் விதமும் பிடிக்கும். விடுதலைப்புலிகள் ஏட்டில் அடிக்கடி எழுதுவார்.

ஆள் உங்க யாழ்ப்பாணத்திலயோ நிக்கிறார்?
இப்ப விடுதலைப்புலிகள் ஏட்டில எழுதிறேலப் போல.

அவரேதான் அவரேதான். வருகைக்கு நன்றி வசந்தன். யார் அந்த உமா? எனக்கும்தான் சொல்லுங்களேன்.


பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
Google docs updated
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads

தொடுப்புகள்:
- என் பார்வையில்
- சாரல்







Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution