« இல்லம்

xcavator.netஐபோன் கார்ட்டடூனில்Ask.com மீள்வடிவமைப்புவேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.simple CSSவலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்ஐபோன் இணைய உலாவிஅட..............YouTube in Mobileசிறுத்தை களத்தில்  »







சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

 
17 பின்னூட்டங்கள்:
அண்ணே,

எங்க ஊரு விசருகெள் பார்க்குங்கெள். உங்கட வெளிநாட்டில் உள்ளவைகெள் பணம் கொழுத்து பார்க்குதுகெள்.

யாழ்ப்பாணம் போன்ற போராடவேண்டிய பூமில கூடவா இந்த படத்தை பார்க்கணும். தமிழர்களின் வெட்கக்கேடு.

குட்டிப்பிசாசு வாங்க,

போராட்ட பூமியில இருந்து பார்க்கக் கூடாத அளவிற்கு இந்த படம் என்ன செய்திற்றுது???

வெளிநாட்டில இருக்கிறவை பணம் கொழுத்து படம் தான் பாக்குதுகள் எண்டு உங்களுக்கு எப்பிடி தெரியும்??

என்ன பகீ நீங்க சொல்லறதைப்பாத்தா யாழ்ப்பாணத்தில சொல்லப்படுகிறமாதிரி பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கேல்ல போல கிடக்கே. உலகம் முழுக்க நீங்க சாப்பாடில்லாம கஸ்டப்படுறியள் எண்டெல்லோ ஊர்வலம் உண்ணாவிரதமெல்லாம் நடக்குது.
*நான் இங்ங நீங்க என்று சொல்லுவது யாழ்ப்பாண மக்களைத்தான்...தனியே பகீ என்கிற நபரை மட்டுமல்ல...

யாழ்ப்பாணத்தில குண்டுகளுக்கும் வெள்ளை வானுக்கும் பயப்பட்டுக் கிடக்கிற சனத்துக்கு மூண்டு மணித்தியாலம் எண்டாலும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க அருள் செய்த அந்த சிவாஜிக்கு எனது நன்றிகள்.

anne,

naan kurai sollale. kaasu adigamaa selavu saithu paarkum alavirku padaththil onnum sollum padi ille. kaasu adigamaa vachchi vikkuraange. uyirukku kashda paduravaikku payanpaduththalaamnu sonnen.

naan sonnathai purinthu konda agilan avarkalukku nandri!!

naan jaffna-la irukkire makkal kashtam padurange-nu thappa nenaichiten pola. vaazththukkal!!

யாழ்ப்பாணம் போன்ற போராடவேண்டிய பூமில கூடவா இந்த படத்தை பார்க்கணும். தமிழர்களின் வெட்கக்கேடு/////

அதென்னாய்யா போராட வேண்டிய பூமி? தப்பிபிழைக்க தெரிந்தவை இந்தியாவிலையும் கொழும்பிலையும் வெளிநாடுகளிலையும் (அவரவருக்கான கஸ்டங்களுடன்)பல்வேறு பொழுதுபோக்குக்களொடு சவாஜிக்காக அலைமோதாலாம் ஆனால் எந்த பொழுதுபோக்கும் அற்று உள்ள அந்த மக்கள் எப்போதும் மரணம் பற்றி நினைதுக்கொண்டு வாழவேண்டும் என்கிர அபத்தமான கருத்துகளை சொல்பவர் புரிந்து கொள்ள வேணும்.

உயர்பாதுக்கப்பு வலையத்துள் உள்ள நூலகம் முனியப்பர்கோப்வில், இப்போது புத்துருவாக்க முயற்சித்த சுப்பிரமணியம் பூங்கா என்று எதுவும் இல்லை. இந்த லட்சனத்தில் இருப்பதில் சந்தோசமடைவதற்கான வழியத் தேடுவதைத் தவிர வேறு என்ன.

அப்பு அகிலன் சாபடில்லம கசஸ்டப் படுகினம்.அதுக்காக வந்திருகிற சிவாஜியப் பாக்க கூடாதெண்டில்லையப்பு.

95 க்கு பிறகு சாப்பாடு அனுபிறதில காட்டின கவனத்தை விட அரசு வேறு சில பொருட்களை அனூவதில்தான் அதிக கவன்ம் செலுத்தியது.

யாழ்ப்பாணத்திற்குள் உணவை அனுப்ப மறுக்கின்ற சிங்கள அரசு "சிவாஜியை" அனுமதிக்கிறது. போராடும் இனத்தின் போர்க்குணத்தைக் குறைக்க எதை அனுப்ப வேண்டும், எதை அனுப்பக்கூடாது என்பதில் ஆக்கிரமிப்பாளர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்

யாழ்ப்பாணத்தில் திரைப்பட ரசிகர்கள்
எல்லாக் காலமும் இருந்துள்ளார்கள்.
பட்டினி கிடந்தும் படம் பார்ப்போர், என்றும் இருந்துள்ளார்கள்.
இன்று இருந்தால் ஆச்சரியமில்லை.
அவர்களைப் படம் பார்க்கக் கூடாதெனக் கூற
நமக்கு அருகதையில்லை.
எல்லாவற்றையுமே அரசியலாக்கக் கூடாது.
இந்த அர்ப்ப சந்தோசத்தைக் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாதென நினைப்பதில் நாயமில்லை.
இது சர்வாதிகாரம் மனப்போக்கு.

பகீ,
யாழ்ப்பாணத்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இதுபோல, யாழ்ப்பாணத்தில் நடக்கும் அதேநேரம் பத்திரிகைகளில் வெளிவராத தகவல்களை உங்கள் பதிவுகளின் மூலம் தாருங்கள்.

குட்டிபிசாசு சொல்லியிருந்தார்
" எங்க ஊரு விசருகெள் பார்க்குங்கெள். உங்கட வெளிநாட்டில் உள்ளவைகெள் பணம் கொழுத்து பார்க்குதுகெள்."
யாழ்ப்பாணம் போன்ற போராடவேண்டிய பூமில கூடவா இந்த படத்தை பார்க்கணும். தமிழர்களின் வெட்கக்கேடு ."

நான் யாழ்ப்பாணத்தை விட்டுவந்து ஒரு வருடமாகிறது ஆனாலும் சொல்லுறன்

அவர் ஒன்று தெரிஞ்சுகொள்ள வேண்டும்
---- யாழ்ப்பாணத்தமிழர்களின் வீரத்தை ஒருவரும் குறைக்கமுடியாதென்டு----

அநதக்காலத்தில "மன்மதராசா மன்மதராசா " பாடிக்கோண்டிருந்த மக்கள்தான் "பொங்குதமிழ் " என்டு ஒன்றை நடத்தி
தமிழ் மக்களின் பலத்தை வெளிக்காட்டினார்கள்

ஆகவே

பணிவுடன் கேட்டுக்கோள்கிறேன்
தெவையில்லாம தமிழ்மக்களை குறைத்து எடை போடவேண்டாம்

//சோமி said...
அப்பு அகிலன் சாபடில்லம கசஸ்டப் படுகினம்.அதுக்காக வந்திருகிற சிவாஜியப் பாக்க கூடாதெண்டில்லையப்பு.//

மன்னிக்கோணும் சோமி ஐயா!உதுக்குள்ள நான் சிவாஜியைப் யாழ்ப்பாண சனம் பார்க்ககூடாது எண்டு சொன்னதெண்டு ஒரு பிட்டை சேர்த்துப்போடுறியள்... ஏன் ஏதேனும் தனிப்பட்ட கோபமோ... பகீ உங்களிற்கு விளங்குது தானே நான் அப்படி சொல்லேல்ல எண்டது.... அது சரி சோமி ஐயாவிற்கு இப்படி யுத்தவலைக்குள்ள மாட்டிக்கொண்ட அனுபவங்கள் ஏதும் இருக்கா என்ன.... இல்லை வெளியிலிருந்து தான் ஆதரவா எப்பவுமே....

இடது பக்கம் போட்டிருக்கர புத்தாண்டு வாழ்த்துப் பட்டைல உள்ள தமிழ் எழுத்துரு நல்ல இருக்கே. பெயர் என்ன? எங்கு கிடைக்கும்?

வன்னியில் தற்போதும் திரைப்படங்களுக்குத் தடையில்லை. சிவாஜி வெளியான மூன்றாம் நாள் முதல் வன்னிப் பகுதி மினி சினிமாக்களில் அரங்க நிறைந்த காட்சியாக சிவாஜி ஓடிக்கொண்டிருக்கிறது. ஐயா சபேசன் - யாழ்ப்பாணத்தில தான் அரசு போர்க்குணத்தை இல்லாதொழிக்கிறது. வன்னியிலுமா..? நாங்கள் தான் ஏதோ கூட அலட்டுறம் போல இருக்கு..

சிவாஜி படத்தை ஆர் பாக்கோணும் பாக்கக்கூடாதெண்டு பாக்கிறவைதான் தீர்மானிக்கவேணும்.

ஆனால், சபேசன் சொன்னதிலை இருக்கிற உண்மையை மறுக்கமுடியாது. செவிக்கும் கண்ணுக்கும் ஈய கொம்பியூட்டர் கிராபிக்ஸ் ரஜினியை அனுப்புற அரசுக்கு அரிசியை அனுப்ப ஏன் கஷ்டம்?

rajani ella tamil sanathitku enna seithavar.oru helpavathu seithavaree.penthu poi avarai thukki pidicu addureenka.pls kurajunko.

yalavan



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி
அட..............
YouTube in Mobile
சிறுத்தை களத்தில்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution