சில வியப்பூட்டும் விடயங்கள்.
இந்த வியப்பூட்டுகின்ற உண்மையான விடயங்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும். இது அறியாதவர்களுக்காக.

 1. ஒரு நான்கு வயது சராசரிக் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு கேள்விகளுக்கு மேல் கேட்கின்றது.
 2. உலகிலுள்ள நாற்பத்திஎட்டு ஏழை நாடுகள் கொண்டுள்ள சொத்தைவிட உலகின் மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
 3. உலகின் மிகவயது குறைந்த பெற்றார்கள் வயதுகள் முறையே எட்டு, ஒன்பது. இவர்கள் 1910 இல் சீனாவில் வாழ்ந்தார்கள்.
 4. "I am" என்பதுதான் ஆங்கில மொழியிலுள்ள பூரணமான சிறிய வசனமாகும்.
 5. "மொனோலிசா"விற்கு புருவங்கள் இல்லை.
 6. நேரத்தின் மிகச்சிறிய அலகு யொக்ரோசெக்கன்ட் (yoctosecond)
 7. ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிக தடவை கண்சிமிட்டுகின்றார்கள்.
 8. "TYPEWRITER" எனும் ஆங்கிலச் சொல்லுத்தான் விசைப்பலகையின் ஒருவரியினை மட்டும்கொண்டு உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லு.
 9. பன்றிகளால் ஒருபோதும் வானத்தினை பார்க்க இயலாது. அவற்றின் உடல்வாகு அதற்கு இடங்கொடுக்காது.
 10. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
 11. உலகிலுள்ள மிகவும் பொதுவான பெயர் "மொகமட்" (Mohammed)
 12. உலகிலேயே துள்ளிக்குதிக்க முடியாத மிருகம் யானை மட்டுமே.
 13. "Stewardesses" என்ற ஆங்கில சொல்தான் இடக்கையால் மட்டும் விசைப்பலகையில் உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லாகும்.
 14. சிகரெட் லைற்றர்கள் நெருப்புப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

2 பின்னூட்டங்கள்:
நல்ல தகவல்கள் பகீ.

1. இதனை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன். தினம் தினம் அனுபவிக்கிறேனே இதனை. கேள்விக்குத் தானே பதிலைச் சொல்லிவிட்டு பின்னர் ஏன் என்று ஒரு கேள்வி கேட்பாளே. என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பேனே. :-)

2. இது நம்பும் படியாக இருக்கிறது.

3. இது நம்பும் படியாக இல்லை. ஆனால் உண்மை என்று நீங்கள் சொன்னதால் நம்புகிறேன்.

4. இது ஓகே. ஆமாம் ஓகே முழுமையான வார்த்தை இல்லையா? :-)

5. அந்தக் காலத்தில் பெண்கள் புருவத்தை மழித்துவிடுவது தான் அழகு என்று நினைத்தார்களாம்.

6. நல்ல தகவல். நன்றி. ஆனால் நான் இதனை விரைவில் மறந்துவிடுவேன். என்ன செய்வது? மறந்துவிடுகிறதே. :-)

7. இது ஏன்?

8. அட ஆமாம்.

9. அப்படியா? அடுத்த முறை பன்றியைப் பார்க்கும் போது கவனிக்கணும்.

10. இது இந்த எண்ணிற்கு மட்டும் இல்லை. 11 * 11, 111 * 111, 1111 * 1111 என்று இந்தத் தொடரில் இருக்கும் எல்லா எண்களுக்கும் இதனைப் பார்க்கலாம்.

11. இதனை நம்பலாம்.

12. அட நீங்க டிஸ்னியோட 'ஹாப்பலம்ப்' இன்னும் பாக்கலையா? அந்த குட்டியானை என்ன குதி போடும் தெரியுமா?

13. அட ஆமாம்.

14. அப்படியா? ஏன்?

புத்தாண்டு நல்வாழ்த்துகள் பகீ.

யோகன் ஐயா. உங்கள் பதிவினை அறிமுகப்படுத்தினார். கூகுள் ரீடரில் உங்கள் பதிவினை இட்டிருக்கிறேன். அதனால் உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன். எப்போதாவது தான் பின்னூட்டம் இடுகிறேன்.

குமரன் வருகைக்கும் உங்கள் சிறந்த பின்னூட்டத்திற்கும் நன்றி. கூகிள் ரீடர் பற்றிக் கூட ஒரு பதிவிடவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துள்ளேன்.

அந்தக் காலத்தில் பெண்கள் புருவத்தை மழித்துவிடுவது தான் அழகு என்று நினைத்தார்களாம். இது இப்போது தான் எனக்கு தெரியும்.

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட
செயற்கைக் கடற்கரை
உலகின் முதலாவது மனிதனால் உருவாக்கப்பட்ட உள்வீட்டு கடற்கரை (Indoor beach) யப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீல வானமும், குளிரும் சூடுமற்ற வானிலையும், உப்பும் அழுக்குமற்ற நீரும், வெண்ணிற மணலும் கொண்ட முதலாவது கடற்கரையாக இது விளம்பரப்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு மணத்தியாலமும் இங்கிருக்கும் செயற்கை எரிமலை வெடித்து சிறிது நேரத்திற்கு உயிருடன் காணப்படுகின்றது. இந்த கடற்கரையின் அழகிய படங்களை கீழே பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கி படங்களை பெருதாக்கி பாருங்கள்)
4 பின்னூட்டங்கள்:
நல்லா இருக்கு, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

யாழ்த்தமிழன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அடடா அடடா அடடா.

வாங்க குமரன். பின்னூட்டத்திற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட


2006 இன் சிறந்த புகைப்படங்கள்
பிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) 2006 இன் சிறந்த புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்கள் இப்புகைப்படங்களை BBC இணையத்தளத்திலும் காணமுடியும். அங்கு பார்க்காதவர்களுக்காக கீழே. (படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)

5 பின்னூட்டங்கள்:
புகைப்படங்களுக்கு நன்றி

பகீ!
எனக்கு ஜோர்ச் புஸ் படம் தான் பிடித்தது. இதை விடக் கோமாளித் தனமாக அவரை எடுக்கமுடியாது.
இப்போ பிரச்சனையில்லாமல் திறக்கிறது.
யோகன் பாரிஸ்

புகைப்படங்கள் மிகவும் அருமை. புகைப்படக் கலையின் திறமையை ஒவ்வொரு ப்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
நன்றி

பொதுவாகவே மடல்களில் வருவது போல் இங்குள்ள புஷ் புகைப்படமும் ஏதும் ஏமாற்றுவேலை இல்லையே?! :)

மஞ்சூர் ராசா, யோகன் அண்ணா, செல்லி, பொன்ஸ் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

இவை bbc தளத்தால் வெளியிடப்பட்டவை. எந்த ஏமாற்று வேலையும் இல்லை.


பின்னூட்டம் ஒன்றை இட


2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.
ரைம் சஞ்சிகை வழமைபோல இந்த ஆண்டும் 2006 இன் சிறந்த 50 இணையத்தளங்களை (50 coolest Websites ) வரிசைப்படுத்தி உள்ளது. இந்த தளங்களில் அனேகமானவை web 2.0 இற்கான சிறந்த உதாரணங்களாக காணப்படுகின்றன. இனி
பட்டியல்.


Etertainment Arts and Media
Drawn
Jumpcut
Sundance Splinks
Wolfgang's Vault
Photo Muse
Podcast Pickle
Pandora
The 9
You Tube

Shopping, Lifestyle and hobbies
Phone Scoop
Delicious Days
Not Martha
Shop Intuition
Kids-In-Mind
Mighty Goods
Zunafish

News and Information
The Morning news
Kevin Sites in the Hot Zone
Charity Navigator
Footnoted
Tailrank
Deadspin
Digg
The Human Clock


Staying connected

MySpace
Google Spreadsheets
Singshot
Meebo
Dodgeball

Time wasters
TMZ
Shockwave
Yu-Gi-Oh Groove
Cute Overload
Jackson Pollock by Miltos Manetas
Number Logic

Travel and real estate
Zipcar
Farecast
Kayak
Zillow
HopStop
CentralPark
Yelp

Web Search and Services
Accoona
Kosmix
Snap
Pixsy
Argali White and Yellow
Blurb
Seamless Web
McAfee SiteAdvisor.

2 பின்னூட்டங்கள்:
dear sir hope u may help me how to add photo im my profile[i know to add photos in posts].what to write in photo url column
secondly whats meant by 'mil padhivu'[posting the earliest post again how to do]
i will be grateful if u let me know the ans for my doubts thank u

Hi,

There are two ways to add photos in the profile.
1. Upload your photo to any photo sharing hosts (such as flickr or photobucket or your own server) and give the link to the profile.
2. Create a new post and then add your photo to the post and now you get the photo link and give that to the profile. (Then discard the post)

I couldn't understand what do you mean in your second question.
(sorry for type in English)


பின்னூட்டம் ஒன்றை இட
கூகிள் - விடுமுறைநாள் சின்னங்கள்.
கூகிள் மிக அண்மையில் நத்தார் தினத்தோடு சேர்ந்த நாட்களில் வெளியிட்ட விடுமுறைநாட் சின்னங்கள் இவை. கூகிளின் தளத்தில் பார்க்காதவர்களுக்காக இங்கு மீளவும்.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட


சிக்கிண்குணியா
யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும் பேசாம விட்டுட்டன். முந்தநாள் தொடங்கினது இப்பத்தான் விரலெண்டான்ன கொஞ்சம் வேலைசெய்யுது. எந்த வேலையெண்டாலும் கொஞ்சம் சிலோ மோசனிலதான் செய்யேலும். முதல் இரண்டு நாளும் சரியான தலையிடியும் காய்ச்சலும். அதுகள் குறைஞ்சவுடன இந்த நோவுகள் தொடங்கிச்சு பாருங்கோ பேசாம காய்ச்சலாவே கிடந்திருக்கலாம் போல இருக்கு.

யாழ்ப்பாணத்து சனத்தொகையில 90 வீதத்திற்கு குறையாதவர்கள் இந்நோயின் தாக்கத்துக்குள்ள அகப்பட்டிருக்கினம். ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஏறத்தாள 65 இற்கு மேல்) இந்த நோய்த்தாக்கத்தால் தொடர்ச்சியாக காலமாகி வருகின்றார்கள். இப்படியே இந்த நோய் தொடருமானால் யாழ்ப்பாணத்தின் மூத்த சந்ததியின் நிலைமை என்னவாகும் என்பதற்கு எந்த பதிலும் இப்போது இங்கு யாரிடமும் இல்லை. இதற்கு மருத்துவர்கள் பனடோலையே பயன்படுத்த சொன்னாலும் பனடோல் பெறுவது என்பது யாழ்ப்பாணத்தில் குதிரைக்கொம்புதான்.

சரி அப்பிடியே வந்தனீங்கள் கீழ இருக்கிற இந்த வடிவான படங்களையும் பாத்திட்டு எனக்கு ஒரு பின்னூட்டமும் போட்டிட்டு போங்கோ.

11 பின்னூட்டங்கள்:
அடடா.. யாழ்ப்பாணம் வரை வந்துடுச்சா.. கொடுமைடா சாமி.. ஓரு மாதம் போயும் எனக்கு இரண்டு காலிலும் வீக்கம் போகலை. இன்னமும் அடிப்பட்ட நாயாய் நொண்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

வணக்கம் பகீ

சிக்குன் குனியாவின் செய்திகளை வாசித்துவிட்டு நல்ல படங்களோடு ஒன்றமுடியவில்லை. எங்களுரிலும் 15 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள்.

யாழ்ப்பாண நில்மையை நினைச்சா ச்ரியான் கவலையாயிருக்கு.

எனக்கொரு சின்ன help
என்னக்கு blogger.com ல் account இருக்கு அதை எப்படி தமிழ்மணத்தில் சேர்ப்பது?
நன்றி

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

படங்களுக்கு நன்றி :)

ஞானி, கானா பிரபா, சுந்தரி, voice of wings வருகைகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சுந்தரி தமிழ்மணத்தில் யு. ஆர். எல் இடுக என்ற பெட்டியில் உங்கள் யுஆர்எல் இனை இட்டு அழுத்துங்கள். அவ்வளவுதான்.

பகீ !

விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள். இப்போ எப்படி? படங்கள் மிகநன்று. நன்றி!

மலைநாடான் நன்றி. நேற்றையினை விட இன்று சிறிது மோசம் என்றே சொல்ல முடியும்.

பகீ!
யாழ் நிலை கேள்விப்பட்டேன். அங்குள்ள உலக சுகாதார நிறுவனம் மருத்துவ உதவி செய்யாதா??
நல்ல படங்கள்!
யோகன் பாரிஸ்

யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி. அவர்களால் எவ்வளவு பேருக்குத்தான் மருத்துவ உதவி செய்ய முடியும். அரச ஆதரவு கூட இல்லாமல்????

பகீ
எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நன்றி செல்லி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பின்னூட்டம் ஒன்றை இட


கூகிள் மேலதிக வசதிகள்
இணையத்தில் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி அறிந்து கொள்ளவேண்டுமாயின் எங்களில் அனேகர் உடன் செல்வது கூகளின் தேடுபொறிக்கே. இத்தேடுபொறி தேடுதல் தவிர ஆனேக மேலதிக வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் சிலவற்றினை கீழே பார்ப்போம்.நீங்கள் கூகிளை ஒரு பல் வசதி கொண்ட இணையக்கணிப்பானாய் பயன்படுத்த முடியும். உங்கள் சமன்பாட்டை கூகிளின் தேடுபெட்டியினில் உள்ளிட்டுவிட்டு தேடு பொத்தானை அழுத்தினால் அதற்கான விடையை கூகிள் உங்களுக்கு தரும். உதாரணமாக 2+3 என உள்ளிட்டு தேடினால் 5 என விடை வரும். இப்படியான சாதாரண கணக்குகள் மட்டுமன்றி திரிகோணகணிதம் போன்ற கடின கணக்குகளையும் தீர்க்கும்.

கூகிளில் நாங்கள் சமன்பாடுகளை உள்ளிடும் போது கணித விஞ்ஞான மாறிலிகளை பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு pi என உள்ளிட்டு தேடினால் 3.14159265 எனவும் speed of light என உள்ளிட்டால் 299792458 m/s என விடைகளை தரும்.

கூகிளால் ஒரு அளவீட்டில் இருக்கும் ஒரு பெறுமானத்தை இன்னொரு அளவீட்டுக்கு மாற்ற முடியும்.
உதாரணமாக 1 meter in feet, 1 cup in teaspoons மற்றும் 100 usd in euros போன்றவற்றை உள்ளிட்டு தேடிப்பாருங்கள்.

கூகிளை ஒரு அகராதியாக பயன்படுத்த முடியும். உதாரணமாக நீங்கள் defenestrate என்ற சொல்லின் அர்த்தத்தினை அறிய வேண்டுமாயின் what is defenestrate என உள்ளிட்டு தேடுங்கள் அவ்வளவுதான்.
ஏதாவது ஒரு சொல்லின் வரைவிலக்கணத்தை அறியவும் நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக defenestrate என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை அறிய define:defenestrate என உள்ளிட்டு தேடுங்கள். peer to peer இன் வரைவிலக்கணத்தை அறிய வேண்டுமாயின் define:"peer to peer" என உள்ளிட்டு
தேடுங்கள் அவ்வளவுதான். உங்களுக்கு இப்போது வரைவிலக்கணம் தெரிந்திருக்கும்.

சில குறிப்பிட்ட விடயங்களை அறிந்துகொள்ள நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக president germany என உள்ளிட்டு தேடினால் எங்களுக்கு தேவையான பதில் உடனே கிடைத்துவிடும்.

இதைவிட ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் செல்லுபடியாகும் பல வசதிகள் கூகிளில் உண்டு. தேவையெனில் அவற்றை வேறொரு பதிவில் பார்ப்போம். உங்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக பட்டால் எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுவிடுங்கள்

5 பின்னூட்டங்கள்:
வணக்கம் பகீ ...நன்றிகள் இப்பதிவுக்கு.... .. நீங்கள் சொன்ன மாதிரி உந்த கூகிளை கேட்டுத்தான் கம்பியூட்டரை எப்படி கையாள்வது என்பதையே அறிந்து கொண்டேன்

அருமையான தகவல்கள்! நன்றி நண்பரே!

அருமையான தகவல்கள்! நன்றி நன்பரே!

பகீ!
கணக்குகள் முயற்சிக்கவிலை;ஆனால் வேறு தகவல்கள்,நீங்கள் குறிப்பிடுவது போல் பெற்றுள்ளேன்.
புதிய விடயமறிந்தேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

இன்றுதான் மறுமொழியுமளவு விரலுக்கு தெம்பு வந்தது. சின்னக்குட்டி, யோகன் அண்ணா, ஜாபர் அலி வருகைகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட
வரதர் ஐயா காலமானார்
ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார்.

கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் பெயரை ஆழமாக முத்திரையிட்டவர் வரதர் அவர்கள். இதனைவிட ஆனந்தம், வெள்ளி, புதினம், தேன்மொழி, அறிவுக்களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளை காலத்துக்கு காலம் வெளியிட்டு தன் சுவடுகளை இதழியல் துறையில் ஆழப்பதித்தவர்.

ஈழத்து இலக்கி உலகிலே தனது இருப்பை ஆழ அகல பதிந்து இலங்கை அரசின் இலக்கிய வாதிகளுக்கான அதியுயர் விருதான சாகித்திய இரத்தினம் விருதை முதன்முதல் பெற்ற தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கின்றார்.

இதனைவிட பிரச்சனைகள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் யாழ்ப்பாணம் எரிகின்றது, மற்றும் 24 மணி நேரம் போன்ற நூல்களை வெளியிட்டு துணிச்சலுடன் செயலாற்றிய ஒரு பதிப்பாசிரியர், நூல்வெளியீட்டாளர்.

முதன்முதலாக ஈழத்தில் கவிதைக்கென சஞ்சிகை நடாத்திய புரட்சிவாதியும் இவரே

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

11 பின்னூட்டங்கள்:
அஞ்சலிகள்.

கடந்த மூன்று-நான்கு ஏ.ஜே., சு.வில்வரத்தினம், இரட்ணசபாபதி, அன்டன் பாலசிங்கம் என்று பலரை இழந்துகொண்டு வருகிறோம். :(

:-(

:-(

உங்கள் செய்தியைப் பார்த்தவுடனேயே நெஞ்சில் சுருக்கென்றது. கடந்த முறை அவரைச் சந்தித்துப் பேட்டி எடுக்க அனுமதி எடுத்து அன்பாகப் பேசி வழியனுப்பி வைத்தவர். மனம் வலிக்கின்றது. அன்னாருக்கு என் இதய அஞ்சலிகள்

தொடரும் மரணச் செய்திகள்.. :-(

ஈழ இலக்கிய உலகுக்குப் பேரிழப்பே!!!!
பட்டகாலே படும் என இதைத் தான் கூறுவதோ!!!
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.
ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.

இந்த மாதத்தில் மட்டுமே அரசியல், இலக்கியம் என்று ஈழத்தவருக்கு எத்தனை பெரிய இழப்புக்கள்?

மறைந்த வரதர் ஐயா அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

இது என்ன சோதனைக்காலம். தொடர்ந்து இழப்புக்களாகவே உள்ளதே.

எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.

அஞ்சலி செலுத்தியோருக்கு நன்றிகள்

ஊரோடி பகீ

நீளும் மரணங்கள் :-(
........
/நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை.
ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது./
வசந்தன் கூறியதுமாதிரி அறிவுக்களஞ்சியம், நங்கூரம் போன்றவைதான் எங்களுக்கு மிகப்பெரும் சொத்தாக ஒரு பருவத்தில் இருந்தன.

-டிசே


பின்னூட்டம் ஒன்றை இட


கூகிளின் முதற்பக்கம்
இன்று இணையத்தை பற்றி தெரியாதவர்கள் கூட கூகிளைப்பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். கூகிள் தன் சேவைப்பரப்பை காலத்துக்கு காலம் விஸ்தரித்துக்கொண்டே வருகின்றது. இப்பொழுது google என்ற சொல் கூட ஒரு வினைச்சொல்லாக அகராதிகளில் புகுந்துவிட்டது. கூகிள் இணையரீதியான வாழ்க்கைக்கு மக்களை வழிப்படுத்தி வருகின்றது. இணையவசதிகள் மிகக்குறைந்தளவே இருக்கின்ற நான்கூட எனது அனேகமான கூகிளின் அனேக சேவைகளை பயன்படுத்திவருகின்றேன். (Gmail, Blogger, Google search, Google webalbums with Picasa, Google docs & Spreadsheet, youtube, Google earth மற்றும் சிறிதளவில் Googel checkout மற்றும் பிறசேவைகள்). கூகிள் 2006 இன் சிறந்த நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது (இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளவை முறையே அப்பிள் கொம்பியூற்றேர்ஸ், யாகூ, மைக்ரோசொவ்ற்). மிக அண்மையில்(திசம்பர் 2006) கூட NASA நிறுவனத்துடன் கூகிள் தனது சேவைகளை விஸ்தரிக்கும் முகமாக ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. காலத்துக்கு காலம் தனது சேவைகளில் தேவையற்றவை என கருதப்படுவதை நிறுத்தியும் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் பாவனையாளர்களிடையே மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆரம்பகால முகப்புபக்கம் கீழே. ஆரம்ப கால பயனாளர்கள் இதனை பார்த்திருக்ககூடும். பார்க்காதவர்களுக்காக. பாத்திட்டு அப்பிடியே எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.


15 பின்னூட்டங்கள்:
தொடர்ந்து என் அபிமான கூகுள் செய்திகளை தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்,

என்னோட அபிமானமும் தாங்க

ரவிசங்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

பகீ,

இதோ நீங்கள் கேட்ட பின்னூட்டம்.

:-)

குமரன் வருகைக்கும் நீங்கள் தந்த பின்னூட்டத்திற்கும் நன்றி.

இப்படியான தகவல்களை இனியும் அள்ளித் தாருங்கள்...

நிச்சயமாக ஜி

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

பார்த்தேன்.இதோ எனது பின்னோட்டம்..பிரயோசமான தகவல்கள் தான் பகி...:)

உங்கள் வரவு நல்வரவு ஆகுக... !
ஞபகபடுத்தினிங்க .... பழைய கூகுளை ... நன்று ...

ஞபகபடுத்தினிங்க .... பழைய கூகுளை ... நன்று ...

இன்னும் நிறைய வெற்றி கதைகளையும் சொல்லுங்க ...

துயா சுந்தர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பகீ!
எனக்கு கூகிளின் இந்த முகப்பைப் பார்த்த ஞாபகமே!!இல்லை.
அவர்கள் வளர்ச்சியை அறியச் சந்தோசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்

பயனுள்ள பதிவு
கூகிளைப் பற்றி இன்னும் தகவல்ககள் தாருங்கோ, நன்றி.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ
நண்பனே கூகுள் நண்பனே!!! :-)

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

யோகன் அண்ணா, கண்ணபிரான் சுந்தரி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

சுந்தரி வாழ்த்துகளுக்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட
விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா
இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)

மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

9 பின்னூட்டங்கள்:
சத்தியமா உங்க தமிழ எனக்கு புரியல..

:))))

அப்பிடி என்னங்க புரியல இதில

அதுசரி... முடிவென்று ஒன்று வரத்தானே வேண்டும்...

"புளக்கர,பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம்,இண்டையோட"

இதுதான்

அதுதான் இதில என்னங்க விளங்கேல்ல??? தமிழா?? கருத்தா?? (கருதென்றால் இதில கருத்தென்று ஒண்டுமில்லை, இதில மட்டுமில்லீங்க என்னோட மொத்த பதிவிலயும்தான்.)

பகீ!
அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
யோகன் பாரிஸ்

பகீ!
அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
யோகன் பாரிஸ்

பகீ!
அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
யோகன் பாரிஸ்

உண்மைதான் யோகன் அண்ணா. பின்னூட்டத்திற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட
கூகிள் - 2006 இன் அதிக தேடல்கள்
கூகிள் சிலநாட்களுக்கு முன்னர் தனது தேடுபொறிமூலம் தேடப்பட்ட அதிக தேடல்களை அறிவித்துள்ளது. 1. bebo
 2. myspace
 3. world cup
 4. metacafe
 5. radioblog
 6. wikipedia
 7. video
 8. rebelde
 9. mininova
 10. wiki

மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அப்பிடியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

4 பின்னூட்டங்கள்:
okay ! Pinnuttam Pottakivittathu
Good Posting!
Yen tamilil podum vasathiyath tharavaillai neengkaL?

பின்னூட்டதிற்கு நன்றி அனானி. நிச்சயம் விரைவில் வசதி செய்து விடுகின்றேன்.

தமிழில் பின்னூட்ட முடிகிறதே ?!!

ச. சங்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தமிழில் பின்னூட்ட முடிகிறது. ஆனால் அனானிகேடடது என்னவெனில் தமிழில் ரைப்பண்ணுவதற்குரிய வசதியை


பின்னூட்டம் ஒன்றை இட
புளொக்கருக்கு ஒரு Chat
எறத்தாள ஒரு மாதத்தின் முன்னரே plugoo இனை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுத்தான் அதனைபயன்படுத்துவதற்குரிய அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது. அதனை நிறுவி சோதித்த உடனேயே அதன் வசதிகளும் பயன்களும் மற்ற எந்த chat engine இனையும் விட என்னை மிகவும் கவர்ந்து விட்டது. (ஊரோடி மைதானத்தில் இப்போதும் Chatango இனை சோதித்து வருகின்றேன்.)இதிலுள்ள முக்கிய பயன் என்னவெனில் எங்களால் இதனை எங்கள் வழமையான chat client உடன் இணைத்து பயன்படுத்த முடியும். நான் இதனை எனது GTalk உடன் இணைத்துள்ளேன். இதனால் நான் எனது மின்னஞ்சலை பாரக்கும் போதெல்லாம் என்னால் plugoo ஊடாக chat பண்ண முடியும். அனேகமாக நான் online இல் இருக்கும் போதெல்லாம் மின்னஞ்சலில் உள்நுழைந்திருப்பதால் இணைய வசதி குறைந்த இடத்தி்ல் இருக்கும் எனக்கு இது ஒரு வரப்பிரசாதமே.

இதனை உங்கள் பதிவிலும் பயன்படுத்த விரும்பினால் உடனே plugoo இணையத்திற்கு சென்று பதிந்து கொள்ளுங்கள். அது இன்னமும் பேற்றா நிலமையிலேயே இருப்பதால் உங்களுக்கு அழைப்பிதழ் கிடைத்ததும் இதனை உருவாக்கி கொள்ள முடியும். அத்தோடு எனக்கும் ஒரு அழைப்பிதழை அனுப்பும் வசதி உள்ளது. தேவையெனில் ஒரு பின்னூட்டமிடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.

7 பின்னூட்டங்கள்:
for me

id naadoodi@gamail.com

for me

id naadoodi@gamail.com

நாடோடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இதோ அனுப்பியாகி விட்டது

//for me
id naadoodi@gamail.com //

மன்னிக்கவும் சின்ன பிழை.
id naadoodi@gmail.com

இப்படி நிறைய இருக்கு ஊரோடி

plz send me one chat:;

to jicthotta4u@gmail.com

எனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புங்க.

நன்றி...

rubajee@gmail.com


பின்னூட்டம் ஒன்றை இட


கூகிள் மென்பொருள்கள்
ஒரு கூகிள் மென்பொருளை (Google Toolbar, Google Desktop, Google Earth, Picasa, Google Talk, Google Deskbar போன்றவை) எவ்வாறு வேறு மென்பொருட்களிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்?

அனேகமாக அது


0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட
கூகிள் நேற்றைய அனுபவம்
நான் இவ்வளவு காலமும் paypal இனை பயன்படுத்தி வந்தேன். சரி Google checkout இல் என்னதான் இருக்கின்றது என்று பார்ப்போம் என்று எனக்கான கணக்கொன்றை உருவாக்கினேன் பின்னர் ஒரு adsense கணக்கினையும் அதனுடன் இணைப்போம் என்று முயற்சி செய்கையில் Google என்ன சொன்னதென்று கீழே பாருங்கள்.

இதுதான் முதன் முதலாக நான் கூகிளில் கண்ட பிழை என நினைக்கின்றேன். உங்களால் அடையாளப்படுத்த முடிகின்றது தானே???


1 பின்னூட்டங்கள்:
I dont get it?

YOu mean the 'Sorry red label' is a mistake?

No. that happens all the time when the server is extremely busy.

surveysan


பின்னூட்டம் ஒன்றை இட


ஆறுமுக நாவலர் - பிறந்த தினம்
"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே" என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய; செய்யுள் வடிவிலிருந்த தமிழிலக்கியத்தினை கற்றோரும் மற்றோரும் உணரும்படி செந்தமிழ் உரைநடை வடிவிற்கு மாற்றி தமிழிற்கு பரோபகாரம் செய்த நல்லை நகர் ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்றாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலே பிறப்பெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தை விருத்திசெய்து, பொதுமக்கள் எல்லோருக்கும் புலப்படக்கூடிய ஒரு உரைநடையினை உருவாக்கி அதன் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் ஆறுமுக நாவலர் அவர்கள். 'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் அவர்கள் தனி ஒருவராய் தமிழ் உரைநடைக்கு செய்த பரோபகாரம் என்றும் நினைவில் கொள்ளப்படவேண்டியது. இவருடைய சைவவினாவிடைகள் இன்றுவரை சைவச்சிறார்களுக்கும் பெரியோருக்கும் வேதங்களாய் நின்று விளங்குகின்றன.

இவர் எழுதிய உரைநடை நூல்களுள்ளே குறிப்பிடத்தக்கவை பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கோயிற்புராண உரை முதலியன. இவர் இயற்றிய கண்டன நூல்கள் சுப்பிரபோதம், வச்சிரதண்டம் முதலியன. இவைதவிர சைவசமயத்தின் சிறப்புக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக எழுதிய யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்டுரை என்பனவும் இவரின் உரைநடைச் சிறப்பை எடுத்தியம்பிய வண்ணம் உள்ளவை.

இன்று நாவலர் பெருமானுடைய குருபூசை நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே விசேட பூசை வழிபாடுகளுடன் வெகு சிறப்பாக விமர்சையாக நடைபெற்றது.

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கக்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது
மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம்.
- சிறீல சிறீ ஆறுமுக நாவலர்.

1 பின்னூட்டங்கள்:
ஆறுமுக நாவலர் பிறந்த நாள் பதிவுக்கு நன்றிகள்.


பின்னூட்டம் ஒன்றை இட


புளொக்கர் சில வித்தைகள் - 3
சில பதிவுகளில் Header இற்கு பதிலாக ஒரு விரும்பிய படத்தினை இணைத்திருப்பதனை கவனித்திருப்பீர்கள். இது புளொக்கரில் சுலபமாயினும் புளொக்கர் பேற்றாவில் சிறிது கஸ்ரமே. நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஒரு படத்தினை Header image ஆக சேர்க்க விரும்பின் கீழே காட்டப்பட்ட நிரலியை பொருத்தமான இடத்தில் சேர்த்து விடுங்கள் (Body tag இன் கீழே)ஒரு படத்தினை இணைத்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட


அட - 2
இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது கிடைத்த இந்த படங்களை பாருங்கள். இவை கடதாசியால் உருவாக்கப்பட்டவை.


7 பின்னூட்டங்கள்:
eppadi naanga pannurathu?

பகீ!
இதை நான் பார்த்துள்ளேன். இவர்கள் உன்னத கலைஞர்கள்
யோகன் பாரிஸ்

அட.

அட.

யோகன் அண்ணா, குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எப்பிடி செய்யிறது எண்டு எனக்கு தெரியேல்லையப்பா...

வாவ்!

வாவ் சொல்றிதிக்கு ஏன் அனானியா சொல்லணும் ???????????????????


பின்னூட்டம் ஒன்றை இட


புளொக்கர் சில வித்தைகள் - 2
என்னுடைய வலைப்பதிவில் இருப்பது போல Header இன் கீழே முன்னைய பதிவிற்கான தொடுப்பை எப்படி சேர்ப்பதென பார்ப்போம். இதனை செய்தபின்னர் உங்கள் குடிலின் தலைப்பின் கீழே

<< இல்லம் | முன்னய பதிவின் தலைப்பு >>


இப்படியான வடிவில் ஒரு சேர்வை இருக்கும்.

கீழே தரப்பட்ட நிரலியை blogger tag இன் மேலே சேர்த்துவிடுங்கள் பின் பப்ளிஸ் பண்ணி விடுங்கள் அவ்வளவுதான்.

<ItemPage>
<p style="text-align:center">
« <a href="<$BlogURL$>">இல்லம்</a>
<span><BloggerPreviousItems> | <a href="<$BlogItemPermalinkURL$>"><$BlogPreviousItemTitle$></a> »</span><span style="display:none"></BloggerPreviousItems></span>
</p>
</ItemPage>

செய்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

7 பின்னூட்டங்கள்:
வார்ப்புரு நன்றாக இருக்கிறது. எழுத்துருவை கொஞ்சம் பெரிது செய்யலாம்.

ஊரோடி என் பதிவில் ஒரு சின்ன ப்ராப்ளம். உதவி தேவை. என்னுடைய Side-bar பதிவுகளுக்கெல்லாம் கீழே தெரிகிறது. (theyn.blogspot.com) இதை எப்படி சரி செய்வது?
தனிமடலில் தொடர்புகொள்ள cvalex அட் yahoo வில் மின்னஞ்சல் செய்யவும்

பொஸ்ரன் பாலா சிறில் அலெக்ஸ் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
எழுத்துருவை இன்னும் ஒரு பொயின்ரால் அதிகரிக்க முயற்சிக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் தனிமடல் அனுப்பியுள்ளேன்.

பகீ, கணிமை வலைப்பதிவில் கருத்துத் தெரிவித்ததற்கு நன்றி. உங்கள் வார்ப்புரு அருமையாக இருக்கிறது. நிறைய வித்தை தெரிந்து வைத்திருகிக்கிறீர்கள்.! நீங்கள் ஏன் இது போன்ற உதவிக் குறிப்புகளுக்காக ஒரு தனி வலைப்பதிவு தொடங்க கூடாது. நான் என் கூகுள் ரீடரில் துறை சார்ந்து வலைப்பதிவுகளை திரட்டி வருகிறேன். நீங்கள் தனியாக ஒரு வலைப்பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி ரவிசங்கர் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். ஒரு தனி வலைப்பதிவு எழுதலாம் தான். ஆனால் நிலமையும் வசதிகளும் எங்கள் பிரதேசத்தில் இல்லை. நிலமை மாறினால் நிச்சயமாக செய்வேன்.

எங்கு போடணும்..எனக்கு எரர் என காட்டுதே பகி

துயா வருகைக்கும நன்றி

இது பழைய புளொக்கர் வார்ப்புருவிற்கு மட்டுமே செயற்படும் புதிய வார்ப்புருவிற்கு சிறிய மாற்றங்கள் சிலவற்றை செய்யவேண்டி இருக்கும்.


பின்னூட்டம் ஒன்றை இட


புளொக்கருக்கு ஒரு எழுதுகருவி
புளொக்கரில நாங்கள் ஏதாவது பதிவு போடும்போது அதிலுள்ள எடிட்டரையே பயன் படுத்துகின்றோம். ஆனால் அதிலுள்ள வசதிகள் எமக்கு சிலவேளைகளில் போதுமானவையாக இருப்பதில்லை. சாதாரமாக ஒரு வேர்ட் பாட் இல் இருக்கின்ற வசதிகள் கூட இந்த எடிட்டரில் இல்லை.இதில் அட்டவணைகள் போன்றவற்றை சேர்க்க விரும்பினாலும் முடிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக வந்துள்ளதுதான் WriteToMyBlog.

இங்கேயே நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதி பப்ளிஸ் பண்ணி்க்கொள்ள முடியும். இதற்கு இது உங்கள் புளொக்கர் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பு பிரச்சனை பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏனென்றால் இந்த வலைத்தளம் அவற்றை சேமித்து வைப்பதில்லை. கீழே இதன் படத்தை பார்த்து இதன் வசதிகளை தெரிந்துகொள்ள முடியும்.இதனைப்பயன்படுத்தி உருவாக்கிய பதிவொன்றினை கீழே பாருங்கள்.

6 பின்னூட்டங்கள்:
இதைவிட ஒரு எளிமையான வசதி microsoft's live writer ல் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நான் சோதித்த வகையில் இது யுனிகோட் சப்போர்ட் பண்ணுது. qumana, w.bloggar போன்றவைகளும் உண்டு ஆனால் அவை யுனிகோட் எந்த அளவு உபயோகிக்க முடியும் என்று தெரியவில்லை.

microsoft's live writer ல் நீங்கள் ப்ள்கின் போன்றவற்றையும் இணைக்க முடியும்.

மாஹிர்

இதைவிட ஒரு எளிமையான வசதி microsoft's live writer ல் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நான் சோதித்த வகையில் இது யுனிகோட் சப்போர்ட் பண்ணுது. qumana, w.bloggar போன்றவைகளும் உண்டு ஆனால் அவை யுனிகோட் எந்த அளவு உபயோகிக்க முடியும் என்று தெரியவில்லை.

microsoft's live writer ல் நீங்கள் ப்ள்கின் போன்றவற்றையும் இணைக்க முடியும்.

மாஹிர்
http://techtamil.blogspot.com

மாஹிர் தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஓன்லைனை நம்பி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வசதி. மற்றயபடி வேர்ட் இல் கூட ரைப் பண்ணி வெட்டி ஒட்டலாம். சில மாறுதல்களுடன்.

உங்கள் microsoft live writer இப்பதான் கேள்விப்பட்டன். கட்டாயம் முயற்சி பண்ணி பாக்கிறன்.

என் கவிதை முயற்சியையும் உங்களோட சேர்துக்குங்க..

காண்க: www.pagadaipost.blogspot.com

சுவாமி,

சேர்த்தாகிவிட்டது.

wow:feed pagadaipost என்று உள்ளிட்டு சோதித்து பாருங்கள்

பகீ!
இப்படி ஒன்றை கூகிளே தரக்கூடாதா??


பின்னூட்டம் ஒன்றை இட
யாழிலிருந்து கிளம்பிடும் வீரம்

திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.


கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி "கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை" என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே? என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.

அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? அஞ்சி அயராதீர்கள் - அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். கொட்டுகிறது மழை தலையில், கொட்டுகிறது பசி வயிற்றில், கொட்டுகிறது அரசின் போக்கு நெஞ்சில் எனினும் ஆடாது அசையாது, இருந்த இடத்தில் இருந்தபடியே இலங்கைவாழ்த் தமிழர்கள், சர்க்காரது அலுவலகங்களில் செய்துவரும் மறியல் நடந்து வருகின்றது. யாழிலிருந்து இன்னிசையே கேட்கும். மோகன ராகத்தை இசைப்பது போல் அமைதியோடு வாழ்ந்த யாழ்ப்பாண நகரமும் ஏனைய தமிழ்ப்பட்டணங்களும், இன்று முரசொலிக்கின்றன. இம்முறை அங்கே நடைபெற்று வரும் அறப்போர் எளிதாக எண்ணக் கூடிய ஒன்றல்ல. ஏதாவது ஒரு அரசியற் கட்சியின் சார்பில் நடத்தப்படுவதுமல்ல. இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதிகள் யாவும் இன்று அறப்போர்க் களமாகி விட்டன. "யாரோ நடத்துகிறார்கள் நமக்கென்ன?" என்று போவோரில்லை. நடக்கும் அறப்போருக்கு நம்முடைய பங்கென்ன என்று கேட்கிறார்கள் ஒவ்வொருவரும். இலங்கைவாழ்த் தமிழர்களில் முஸ்லீம் மக்கள், குறிப்பிடக் கூடிய தொகையினராகும். அந்த மரக்கலராயரும் இப்போது மார்தட்டி இறங்கியிருக்கிறார்கள். அடுப்பங்கரைகளை விட்டு அணங்குகள் புறப்பட்டு அறப்போரிலீடுபட்டிருக்கின்றனர். எங்கும் பரபரப்புக் கூட்டம். இதைப்பற்றியே பேச்சு. ஓரு தேசிய எழுச்சி அங்கே உருவாகியிருக்கின்றது.

இலங்கை! - வாழப்போய்த் தங்கிய வம்பு மடமல்ல தமிழருக்கு. ஆண்டாண்டு காலமாய் அண்ணனும் தம்பியும் போல ஓடி விளையாண்ட கூடம். முடியுடை மூவேந்தர்கள் இறவாப் புகழோஞ்சியிருந்த காலத்திலே, இலங்கையும் தமிழ்நாடும் ஒரே தட்டிலுண்ணும் இரண்டு புறாக்களை போல் இருந்திருக்கின்றன. சோழ மன்னன் ராசராசன், இலங்கையின் வடபுலத்தை வென்று அந்த இடத்துக்கு மும்முடிச் சோழமண்டலம் எனும் பெயரைச் சூட்டினான். இலங்கையிலிருந்து கொணர்ந்த ஆட்களைக்கொண்டு காவிரிக்கு கரையமைத்தான் கரிகாற்பெருவளத்தான் என்பர். உட்பூசல்கள் உருவான நேரத்தில் இலங்கையரசர்கள் இடந்தேடி வந்தது இங்குதான். மூவேந்தர்களுக்குள்ளும் போர் மூண்டால் மூவரில் ஒருவரை ஆதரிக்க, சிங்கள அரசர்கள் படையுடன் வந்திருக்கின்றனர். பாண்டிய நாட்டு பைங்கிளிகள், இலங்கைச்சோலைக்கு வந்திருக்கின்றன. சோழனின் மணிமாடத்துக்கு சிங்களத்துச் செவ்வந்திப் பூக்களும் வந்திருக்கின்றன. இலங்கையின் இரத்தினங்களை எடுத்து சேரநாட்டு தேனிதழ் மாந்தர் சிரிப்புத் தவழும் தத்தமது உதடுகள் நிறத்துக்கு ஒப்பிட்டு மகிழ்ந்த காலமும் உண்டு. இலங்கையின் ஆதிக்குடிகள் திராவிடரே. பஃறுளியாறு கடல் கொள்ளப்பட்டபோது, இரத்தினத் தீவான இலங்கை பிரிபட்டது என்பர். சரித வல்லுனர் ஈழம் எனும் சொல்லே கேரளர் எனும் சொல்லிலிருந்து மருவியதாகவும் ஒரு ஆராய்ச்சி இருக்கின்றது. மலையாளத்தின் தென்னஞ்சோலைகளையும், இலங்கையிலும் அதே மண்வளம் இருப்பதையும் காட்டி இரண்டுக்கும் ஒப்புவமை கூறுவோரும் உண்டு. கதிர்காமத்துக் கந்தனையும், திருகோணமலை போன்ற இடங்களிலுள்ள திருக்கோயில்களையும், தமிழறிந்தான் இராவணனையும் சான்றுக்கிழுத்து பழந்தமிழர் வாழ்ந்த இடம் என்போரும் இருக்கின்றார்கள். இப்போதும் நெல்லை மாவட்டத்தில் ஈழத்துப் பிள்ளைமார் என்போர் இருக்கின்றார்கள். இவ்வளவு சான்றுகள் ஏன்?

யாழ்ப்பாணம் எனும் சொல்லே போதும் தமிழர்கள் எவ்வளவு தொன்மை கொண்டவர்களாக இலங்கையில் வாழகிறார்கள் என்பதனைக்கூற. இங்கே நம் பேச்சு வழக்கிலிருக்கின்ற தமிழைவிட, அங்குள்ளோர் பேசிடும் தமிழில், தூய்மையும் தொன்மையும் இருக்கின்றது.

இலங்கையில் மொத்த மக்கள் தொகை 90 இலட்சம். இதில் தமிழர்கள் தொகை 30 இலட்சம். மொத்த மக்களி்ல் மூன்றில் ஒரு பகுதியினர், தமிழர்கள். மக்கள் தொகையில் மட்டுமல்ல இலங்கையின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவர்கள் தமிழர்கள். உழைப்பால் இலங்கையை உருவாக்கி வருகின்றார்கள். அறிவால் அந்நாட்டின் பெருமையை அதிகமாக்கி வருகின்றார்கள். தோட்டத்தொழிலாளர்களாக மட்டுமல்ல டாக்டர்களாகவும் தமிழர்கள் இருக்கின்றார்கள். நமது தாயகம் இலங்கை அதன் புகழே நம் பெருமை என்று இரண்டறக் கலந்து வாழும் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை ஆண்ட வெள்ளையன் உணர்ந்தான். அதனால் அவன் காலத்தில் தமிழர்களுக்கும் அரசியலிலும் அதிகாரத்திலும் ஓரளவுக்கு இடங்கள் கிடைத்தன. இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் காலத்தில் சிங்களத் தோழர்களும் தமிழக்குடிகளும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதுமட்டுமன்றி வெள்ளை ஆதிக்கத்தை இலங்கையை விட்டு அகற்றவும் தொள் கொடுத்து போராடினார்கள் தமிழர்கள். சிங்களத்தின் அரசியல் வாதிகளுக்கு அப்போது ஆண்ட வெள்ளையனை வெளியேற்றும் வேலை இருந்தது. அந்த வேலை முடிந்து, ஆட்சி தங்கள் கைக்கு வந்ததும், கிடைத்த சுதந்திரத்தை சுகவழியாக்கும் மார்க்கத்தில் ஆளவந்தவர்கள் செல்லவில்லை. சிங்கள மக்கள் மன்சோர்வு அடைந்து தங்கள் செயல்த்திறமையை சந்தேகிக்க கூடாதே என்பதற்காக, ஒரே மொழி என்ற வெறித்தனத்தை உருவாக்கி ஆகா இவரைப்போல் நம்மொழிக்கு பாடுபடும் உத்தமருண்டோ? சிங்களத்தை காக்க எழுந்த சிங்கங்களே வாழி! என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகப் பாதகமான வழிகளில், சிங்கள அரசியல் வேட்டைக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டைக் கொளுத்திவிட்டு, எரியும் நெரு்பபில் சுருட்டுப்பிடிப்பவன் வாழ்க்கைச் சூதாடி மட்டுமல்ல ஏமாளியுங் கூட. தீ பரவுகிறது என்று தெரிந்தால் அதை அணைத்துவிட்டு அன்பால் எதனையும் வெல்கின்றவனே, புத்தரின் பொன்னான சீடனாவான் - சிறப்பும் அடைவான்.

பற்று என்பது வேறு, வெறி என்பது வேறு. மொழிப்பற்று எல்லோருக்கும் இருக்க வேண்டியதுதான். அனால் பற்றினையே வெறியாக்கி, எமது மொழியை நீ பயிலவேண்டும் என வற்புறுத்துவது, மனித நெறிக்கு அப்பாற்பட்டதாகும். நெறிமாறிய வழியிலே சிங்கள அரசு செல்கின்றது. ஒருவரல்ல, இருவரல்ல நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராயிருக்கும் தமிழர் மீது சிங்களத்தை திணிக்கின்றது. இதன் சின்னமாக 1958ல் தமிழர்கள் பட்ட அவதியை நாம் மறந்திருக்க முடியாது. தமிழர் தம் கடைகள் சூறையாடப்பட்டதும் தமிழர்களை நிறுத்தி அவர்தம் முதுகிலும் மார்பிலும் சிங்கள எழுத்துக்களை பொறித்ததும், தமிழ்ப்பெண்களெல்லாம் அவமானப்படுத்தப்பட்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக 158 தமிழ் உயிர்கள் சாகடிக்கப்பட்டதும் உலகம் அறியும்.

பாலஸ்தீனத்திலிருந்த யூதர்களை இப்படித்தான் அரபுமக்கள் அஞ்சுமளவிற்கு அடாவடித்தனம் செய்து வந்தனர். இலங்கையை போல 30 இலட்சம் கூட அல்ல அவர்கள். 16 இலட்சம் தான். ஒரே பிடியாக இருந்து கடைசியில் இஸ்ரேல் என்கினற் தனிநாட்டை பெற்று இன்று ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகித்து வருகின்றது. யூத மக்களுக்கு கேடுகள் ஏற்பட்டபோது அவர்கள் சார்பில் வாதாட ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகள் முன்வந்தன. பண்டித நேரு கூட இஸ்ரேல் பக்கம் நின்றார். இதனைச் சிங்கள நாட்டின் பார்லிமெண்டு உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டி "ஒரே மொழி என்றால் இரு நாடுகள்! இரு மொழி என்றால் ஒரே நாடு" என்று முழக்கமிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு நிலமை செல்லாமல் இலங்கை அரசு, பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆவல்.

காங்கோவில் நடைபெறுகின்ற அட்டூழித்தை கேளிவியுற்று, தயாள் என்கின்ற தன் பிரதிநிதியை நிறுத்தி, போதாதென்று இந்தக் கிழமை 4500 படைவீரர்களையும் தமிழர் ராஜா என்பவரி்ன் தலைமையின் கீழ் அனுப்பி வைத்திருக்கின்றது.

அந்தளவிற்கு கடுமையான முடிவுகள் எதனையும் எடுக்க வேண்டாம், நாமும் விரும்ப மாட்டோம், இலங்கைத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் சார்பில் அண்மையில் தன்னைச் சந்தித்த இலங்கைப்பிரதமர் சிரிமாவொவிடம் ஒரு சொல் உதிர்த்திருக்கலாகாதா பண்டித நேரு. வேண்டாம் இவ்வளவு பெரிய அறப்போர் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் இலண்டனில் கூடிடும் காமன்வெல்த் மாநாட்டில் தினசரி சந்திக்கின்றனர் சிரிமாவும் நேருவும், அக்கறையிருக்குமாயின் ஒரு வார்த்தை பேசலாகாதா? அல்லது, காமன்வெல்த் மாநாட்டிலேயே கண்டித்து விளக்கம் கேட்கக்கூடாதா?

நேருவுக்கு உள்ள நிலமையைப்பற்றி மனத்துடிப்பு, ஏற்பட வழியில்லை. ஏனெனில் இது தமிழர் பிரச்சனை. வேண்டுமென்றுகூட அல்ல தமிழர் தம் குரலின் உண்மையினை உணரும் அசை ஏற்படும் வழிகூட கிடையாது அவருக்கு. அதனை எடுத்துச் சொல்லவோ இங்கிருக்கும் காமராசர் அரசு அஞ்சுகின்றது.

"அனாதைகள் அல்ல அவர்கள், கேடுற்றவர்களுக்கு பரிதாபம் காட்ட ஒரு அரசு இருக்கின்றது" என்கிற அச்சமாவது இருக்குமன்றோ! தமிழருக்கு ஒரு தைரியம் ஏற்படுமன்றோ!!

" ஓன்று, தமிழர்கள் கண்ணுக் கெடாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப்பற்றி கவலைப்படுவது தி.மு.க தான்."
"நமக்கென இருப்பது, இன மரபு அறிந்தது, தி.மு.க ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும்."
"மூன்று, அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடிய அனுதாபச் செய்தியும், ஆறுதல் செய்தியும், வாழ்த்தும் நல்லுரையும்தான்."

"வீழ்ந்து பட்ட தமிழருக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழருக்கும் நம்முடைய அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரை காணிக்கையாக்குவோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகளை இழந்த தகப்பனும், அண்ணனை பறிகொடுத்த தம்பியும் தம்பியை பிரிந்த அண்ணனும் இப்படியாக, ஒரு கூப்பிடு தொலைவிலுள்ள இலங்கையில் இருந்து கொண்டு கொட்டும் கண்ணீருடனும், குமுறும் நெஞ்சத்தோடும் 30 இலட்சம் தமிழர்கள் வாடுகன்றார்கள். அங்குள்ள தமிழ்ப்பெருங்குடி மக்கள் தணலிட்ட தங்கம் போல உருகுகிறார்கள். அவர்கள் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகின்றது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத்தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்து இடம்பெற்றிருக்கின்றது,"

3 பின்னூட்டங்கள்:
பகீ!
44 வருடங்கள் இன்னும் நிலை மாறவில்லை. இதை நான் இதற்கு முதல் படிக்கவில்லை.
ஆற்றோழுக்குப் போல் என இதைத்தான் கூறுவதோ!!!!
இட்டதற்கு நன்றி!!
யோகன் பாரிஸ்

நல்லதொரு பதிவு இணைத்தமைக்கு நன்றிகள்

யோகன் அண்ணா, சின்னக்குட்டி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. ஈழத்தில் இன்னமும் நிலமை மாறவில்லைதான். ஆனால்....................


பின்னூட்டம் ஒன்றை இட


ஊரோடி - புதிய பரிமாணம்.
புதுவருசமும் வரப்போகுது எல்லாரும் ஏதோ புதிசா முடிவுகள் இலட்சியங்கள் எல்லாம் எடுப்பினம். ஊரோடி மட்டும் அப்பிடியே பழசா இருந்தா நல்லாஇருக்காது எண்டு சொல்லி அதுக்கும் ஒரு புதுச்சட்டை போட்டிருக்குது. இவ்வளவு காலமும் புளொக்கர் தந்த அடைப்பலகையை பாவிச்சது இப்ப புதுசா ஒண்டு. இந்த அடைப்பலகை முற்றுமுழுதா CSS மற்றும் javascript இனை பாவிச்சிருக்கு. இதில இருக்கிற விசேசங்கள் என்னெண்டா.

1. தேடு பொறி - வழமையா புளொக்கில தேடோணுமெண்டா புளொக்கர் search இனை பாவிக்க வேணும். அதில இருக்கிற பிரச்சனை திருப்பி புளொக்குக்க வாறதுக்க சீவன் போயிரும். அத்தனை தரம் back button ஐ அமத்த வேணும். ஆனா இந்த தேடுபொறி அப்பிடியில்லை. கரையிலயே ஒரு பக்கமா முடிவுகளை காட்டும் தேவையில்லையெண்டா நிப்பாட்டிவிடலாம்.

2. பிரிவுகள் - ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்தி இருக்கு. அந்த வகைப்படுத்தலை அழுத்தினா உடன அதில இருக்கிற பதிவுகள் எல்லாம் காட்டுப்படும். இது ஏற்கனவே புளொக்கர் பேற்றா பாவிக்கிற ஆக்களுக்கு தெரிஞ்சாலும் இதில இருக்கிற விசேசம் என்னெண்டா இது feeds ஐ பாவிக்குது. அதால வேகமா அது தெரியும். வேறொரு பக்கம் லோட் ஆகிற வேலையெல்லம் இங்க இல்ல. (ஆனா இதை இன்னமும் சரியா நான் முடிக்கல இரண்டு நாளில எல்லா பதிவையும் சேத்திருவன்)

3. பின்னூட்டபெட்டி - இதில ஒரு விசேசமும் இல்ல. இது cocomments பின்னூட்டப்பெட்டியை பாவிக்குது. பின்னூட்டங்களை தொடரா வாசிக்க வேணுமெண்டால் இது உதவி செய்யும்.

4. புளொக்கர் Nav bar - இதில மேல இருந்த புளொக்கர் கருவிப்பட்டையை எடுத்துப்போட்டு அந்த கோப்புகளையே பயன்படுத்தி கீழ எனக்கெண்டு ஒரு கருவிப்பட்டை போட்டிருக்கிறன்.

5. படவேலைப்பாடு - இந்த அடைப்பலகையில ஒரு படமும் பயன்படுத்தப்படேல்ல. எல்லாம் CSS ஐத்தான் பயன்படுத்தியிருக்கு. வேகமா பக்கம் லோட் ஆகும்.

6. பின்னூட்டங்கள் - இந்த அடைப்பலகையில ஒரு பதிவின்ர பின்னூட்டத்தை பாக்க அந்த பதிவை தனியா எடுத்து வாசிக்கோணுமெண்டெல்லாம் இல்லை. பின்னூட்டங்கள் எண்ட லிங்கை அமத்தினா போதும் கீழு தானே வந்திரும் (பின்னூட்டங்கள் இருந்தா மட்டும்).

தொடுப்புகள் இன்னும் சேர்க்கேல்ல. நாளைக்கு அல்லது நாளைக்கு மறுநாளைக்குள்ள சேர்த்திருவன்.

இன்னும் சில வசதிகளை சேக்க இருக்கிறன்.

எல்லாத்தை விட முக்கியமான விசயம் என்னெண்டா இது நெருப்புநரி 2.0, internet explorer 7.0, Opera 9.0 க்குத்தான் வடிவா வேலை செய்யும். மற்ற உலாவிகளுக்கும் வேலைசெய்தாலும் சில வசதிகள் வேலை செய்யாது.

மிகமிக முக்கியமான விசயம் என்னெண்டா இது மொத்தமும் நான் உருவாக்கினதில்லை. அங்கங்க தூக்கி ஒண்டாக்கி சின்ன சின்ன மாற்றம் செய்தது. ஊரோடி மைதானத்தில 10 நாளா போட்டு சரியா வேலைசெய்யுதோ எண்டு பாத்து பாத்து திருத்தினது. இன்னும் பிழை இருக்கும் குறையா நினைக்காதங்கோ.

தயவுசெய்து இது சம்பந்தமான உங்கட பின்னூட்டங்கள தாங்கோ. திருத்திறதுக்கு உதவியா இருக்கும்.

12 பின்னூட்டங்கள்:
நல்லாருக்குப்பா.............................................

நல்லருக்கு

பகீ!

மிக நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. யோகன் உங்களைப்பற்றிச் சொன்னார். தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன்.

- மலைநாடான்

பகீ!
வீட்டு வேலைகள் தெரிந்தோர் தங்கள் வீட்டை எப்போதும் புதிய திருத்தத்துடன் வைத்திருப்பார்கள்.
உங்கள் நிலை அதே!!! நான் ஆசைப்பட்டால் தேவையற்ற இடங்களில் பூச்சுக்கள் பட்டு;உள்ளதும் கெட்டுவிடும் ;வேணாப்பா!!இந்த விளையாட்டு எனக்கு!!
உங்கள் நல்லாதான் இருக்கு!!அதை நான் ரசிக்கிறேன்;
யோகன் பாரிஸ்

கலக்கிறியளப்பு

மலைநாடான், யோகன் அண்ணா, கானா பிரபா வருகைக்கும் உங்கள் ஊற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. யோகன் அண்ணா அடுத்தது உங்கட வீட்டுக்குத்தான் வேலை.

நல்லருக்கு.
சில உதவிக்கு என் பக்கத்திற்கும் வாங்க..
www.pagadaipost.blogspot.com

home page: www.pagadai.blogspot.com

good luck..

thottarayaswamy வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஆமா என்ன உதவி வேண்டுமென்று சொல்லவில்லையே.

வடிவா இருக்கு பகீ எண்டை வீட்டுக்கும் கொஞ்ச திருத்த வேலை இருக்கு இப்ப பிஸி அப்புறம் பார்ப்பம். நன்றி வணக்கம்

1.நெருப்பு நரியில் (2) தெரிவதில் சிக்கல் உள்ளது போல் தெரிகிறது. பாருங்கள்

2.மறுமொழிய மட்டறுத்துப்போட்டு தமிழ்மணத்துக்கு அறிவியிங்கோ.

இதைபற்றி கொஞ்சம் விளக்கவும்//

www.pagadaipost.blogspot.com

நீங்கள் பிஸி எண்டாப்பிறகு நான் மறிக்கவே ஏலும். அதென்ன நன்றி வணக்கம்????

கெதியெண்டு திருத்தொங்கோ. வருசத்துக்கு முதல்

ரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Thottarayaswamy நீங்கள் செற்றிங்குக்குள் சென்று modarate comments ஐ yes என கொடுத்து விடுங்கள். அப்போது உங்கள் மின்னஞ்சல் விலசத்தையும் கொடுத்து விடுங்கள். அதன்பின் யாராவது உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிட்டால் அது உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்கள் பதிவில் காட்டப்படும். இவ்வாறு செய்தபின் தமிழ்மணம் அறிவிப்புக்கு சென்று மட்டறுத்ததை பின்னூட்டமாக அங்கு அறிவித்துவிடுங்கள், அவ்வளவுதான்.

நெருப்புநரியில் பிரச்சனை எனின் உங்கள் CSS நிரலை பார்த்துதான் பிழை என்னவென்று சொல்ல முடியும்.


பின்னூட்டம் ஒன்றை இட


ஈழத்து இலக்கிய வழி
இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.


தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன.

நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும்
கூறுவர்.

இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார்.

இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.

வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.

அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.

அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பிப்புலவர் என்பதனை அவரியற்றிய நூல்கள் கொண்டு சாதிக்கலாம். 'கல்லாமற் பாதி குலவித்தை' என்கின்ற பழமொழியும் ஒரு பரம்பரையின் ஆவசியகத்தை தெரிவிப்பதாயிருக்கின்றது.

மகாவித்துவசிரோரத்தினமாய் விளங்கியவரும், சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய வழுக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தூய்மை செய்வதில் இணையற்றவரும், ஆதலினால் தோடஞ்ஞர் என்று பாராட்டப்பட்டவருமான சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், தம் மாணவரின் கசடுகளை போக்கி, அவர்களை இலக்கிய இலக்கண வரம்பில் நடத்துவதற்கு முதலில் படிக்கும்படி வதிக்கும் புத்தகங்கள் இரண்டு. ஒன்று மறைசையந்தாதி், சின்னத்தம்பிப்புலவர் இயற்றியது. மற்றையது கலைசைச் சிலேடை வெண்பா. மறைசையந்தாதியிலே புலவருக்கு ஆராமை அதிகம். அதில் வரும் சொற்கள் தொடர்களை அடிக்கடி சொல்லி சொல்லிச் சுவைப்பார் புலவர். தோடஞ்ஞரான புலவர் அவர்கள் கொண்டாடுவதிலிருந்தே மறைசையந்தாதியி்ன் தமிழ்வரம்பு மரபு எத்தகையது என்பது உணரத்தக்கது. (தோடம் - தோசம், ஞர் - அறிபவர், ஆராய்பவர்). சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய பறாளை விநாயகர் பள்ளுச் சாதாரண நாட்டுப்பாடல்களின் வரிசையில் வைத்து மதிக்கற் பாலது போன்று கல்லாதாரையும் இனிக்கச் செய்வதொன்றாயினும், அதன் செந்தமிழ் வளம் வித்துவான்கள் கைகூப்பி வணங்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

இவ்வாறான புலமை, அரசகேசரியிலிருந்து தொடங்கித் தலைமறைவாக நடந்துவந்ததொரு இலக்கியவழி, அடங்காது கிளர்ந்தெழுந்ததோர் எழுச்சியன் பெறுபேறேயாம்.

சின்னத்தம்பிப் புலவர் காலத்திலே 'சிவராத்திரி புராணம்' இயற்றிய வரதபண்டிதர் சுன்னாகத்திலிருந்தவர். 'யாழ்ப்பாண வைபவம்', 'புலியூரந்தாதி' என்னும் நூல்களியற்றிய மயில்வாகனப்புலவர் மாதகலிலிருந்தவர். பண்டிதரும் புலவரும் நிறைந்த புலமையுடையவர்கள். தலைமறைவாயிருந்து வந்த இலக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதிற் சந்தேகமில்லை.

சின்னத்தம்பிப் புலவருக்குப் பிறகு ஒல்லாந்தர் காலம் முடிந்து ஆங்கிலேயர் காலத்திலுந் தொடக்க காலம் வரை இலக்கண இலக்கிய பரம்பரைவழி மறைவாயேயிருந்தது. ஆயினும் ஒல்லாந்தர் காலம் ஆங்கிலேயர் காலம் ஆகிய இரு காலங்களி்ன் பொருத்தத்திலும் இருந்தவர் முத்துக்குமார கவிராயர். இவர் உடுவிலையும் சுன்னாகத்தையும் சேர்ந்தவர். இவருடைய புலமை சந்தர்ப்ப விசேடத்தால் மணலில் மூடுண்டு மூழ்கிப்போகாமல் திடீரென்று வீறிட்டெழுந்து பிரவாகித்து விட்டது. இவரியற்றிய நீண்ட ஆசிரிய விருத்தங்கள் தாயுமானவரின் விருத்தங்களே என்று சொல்லத்தக்க வகையிற் சற்றேனும் எடைவிடாமற் செந்தமிழ் வளங்கொழித்து ஒழுகி வழிபவை. இவர் காலத்திலேயே இருபாலையில் இருந்தவர் சேனாதிராய முதலியார். சிறந்த புலமை கனிந்தவர் முதலியார்.

முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார் இருவரும் யாழ்ப்பாணத்தின் இரு கண்கள். தமிழ் வளர்ச்சி தமிழிலக்கண இலக்கியவழி ஆகிய இவைகளின் இருபெருந் தந்தையர்கள் இவர்கள். 'தக்கார்' என்று வள்ளுவனார் வாயூறுகின்ற வார்த்தைக்கு பாத்திரமாகும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்து விட்டது. இந்த நாட்டிலே எச்சத்தால் உயர்ந்து விட்டார்கள் இவர்கள். எச்சம்- சந்ததி, வழி.

சி. வை. தாமோதரம்பிள்ளையைத் தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை என்று தமிழ் உலகு தலைமேல் வைத்து கொண்டாடும்படி வைத்தவர் முத்துக்குமார கவிராயர். கவிராயரின் எச்சம் தாமோதரம்பிள்ளை. எச்சம் என்பது இங்கே மாணவர் எனும் பொருட்டு. மாணவரும் புத்திரரே. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் கவிராயரின் உதிர பரம்பரையில் வந்தவர்.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையிற் செந்தமிழ் வசனநடையைத் தொடக்கிவைத்துச் செய்யுணடையிலிருந்து தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகாரசீலர் சிறீலசிறீ ஆறுமுகநாவலர் அவர்கள். நாவலர், சேனாதிராய முதலியாரின் எச்சம், மாணவர்.

நாவலர், பிள்ளை ஆகிய இவர்கள் காலத்திலே வேறு வித்துவ பரம்பரைகளும் மறைவிலிருந்து வந்தன என்பதற்கு உதாரணமாக ஆங்காங்கே பலர் பிரகாசித்துக்கொண்டிருந்தார்கள். உடுப்பிட்டியிலே சிவசம்புப்புலவர் இருந்தார். அவர் மாணவர் முருகேசபண்டிதர். பண்டிதரின் மாணவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர். நீர்வேலியிலே சிவசங்கர பண்டிதர் இருந்தார். இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தருக்க சமய சாத்திரங்களிலும் மாமேதை. நாவலர் அவர்களுக்கு வலக்கரம்போலுதவியவர் இந்த சிவசங்கரபண்டிதர்.

சென்னை சர்வகலாசாலை தொடங்கியது 1850 இற்கு பிறகு. அதற்கு முன்னமே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையிலே செமினரி என்று வழங்கிய கல்லூரியிலே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களும் நன்கு கற்பிக்கப்பட்டன. அங்கே படிக்கப் புகுந்தவர்களுட் பலர் முன்னமே மறைவிலிருந்த தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்கள் முறையாகக் கற்றுத் தெளிந்தவர்கள். அவர்கள் தமிழ்மயமாயிருந்து கொண்டே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களுங் கற்றார்கள். ஆகையினாலே, இந்த நாட்டுக்கேயன்றித் தாய்நாட்டுக்கும் வழிகாட்டிகளாய் அவர்கள் விளங்கினார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தமிழ்த்தொண்டு பிரகாசிப்பதற்கு வட்டுக்கோட்டைப் படிப்பு உறுதுணை புரிந்தது.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதி, அகராதிகளுக்கு வழிகாட்டியாய், வித்துவான்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது. ஒவ்வொரு சொல்லுந் தக்க பிரமாணங்கொண்டு தூய்மை செய்தது. இந்த அகராதியை ஆக்கியவர் நீதிபதி கதிரைவேற்பிள்ளை. இவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் தலைமையில் அறிஞர்கள் பலரின் உதவி கொண்டு இவ்வகராதியை ஒழுங்கு செய்தார். தமிழர் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் மல்லாகம் கனகசபைப்பிள்ளை. இந்நூல் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு எழுதுபவர்களுக்கு அடிநிலையாய் உதவுவது. நியாயஇலக்கணஞ் செய்தார் வட்டுக்கோட்டை முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை. வீசகணிதம் செய்தார் சுதுமலை விசுவநாதபிள்ளை. இங்ஙனம் தமிழாக்கஞ் செய்தார் பலர்.

சி. வை. தாமோதரம்பிள்ளைதான் டாக்டர் சாமிநாதையரின் பழந்தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டி. 1885 இல் தொல்காப்பியம் தாமோதரம்பிள்ளை பதிப்பு முழுவதும் உரையுடன் வெளிவந்துவிட்டது. 'இலக்கண விளக்கம்' , 'வீரசோழியம்' , 'இறையனார் களவியல்' முதலியன அதற்குமுன்னமே தாமோதரம்பிள்ளை பதித்து விட்டார். 1885க்குப் பிறகு கற்றறிந்தோரேத்துங் கலித்தொகையை அச்சிடுகிற காலத்திலேதான், தாமோதரம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடன் பழகி அவர் தூண்டுதலாற் சாமிநாதையர் பதிக்கத் தொடங்கினார். ஐயர் அவர்களின் முதற்பதிப்பு சீவகசிந்தாமணி. 1887ம் ஆண்டிற் பதித்தது.

தாமோதரம்பிள்ளையின் சேனாவரையப்பதிப்பு வெளிவந்தது 1868ம் ஆண்டில். அப்பொழுது சென்னைப்புலவர் சிலருக்கு ஒருவகைக் கொதிப்பு உண்டாயது. அவர்கள் திரைமறைவிலிருந்து ஒருவரைத் தூண்டித் தாமோதரம்பிள்ளையைத் தூறறிக் கண்டனப்பத்திரிகைகள் விடுத்தார்கள். அதனைக்கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள் 'நல்லறிவுச்சுடர் கொளுத்தல்' என்ற துண்டுப் புத்தகத்தை வெளியிட்டு்த் தாமோதரம்பிள்ளைக்கு ஊக்கம் அளிததார்கள். அப்புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் ஈண்டு ஞாபகப்படுத்தத்தக்கவை.

"இச் சென்னை சர்வகலாசாலையிலே தலைமைத் தமிழ் வித்தியா போதகராயுள்ள கனம்பொருந்திய பார்சிவல் துரை யாழ்ப்பாணத்திலே தமிழ் கற்றுக்கொண்டவர். சென்னை நார்மஸ்கூலில் தமிழ் வித்தியா போதகராய் முன்னிருந்த மாசிறீ செளந்தரநாயகம் பி்ள்ளை அவர்களும் இப்போதிருக்கிற மாசிறீ வேலுப்பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தவர்கள். இங்கிலீசினின்றுந் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் நாடெங்குமுள்ள கெவர்மென்ட் பாடசாலைகளெங்கும் வழங்குந் தமிழ்ப் புத்தகங்களுக்கு ஆசிரியராகிய மாசிறீ விசுவநாதபிள்ளை யாழ்ப்பாணத்தவர்.

தமிழிலே ஹேமாத்திரிகற்பம், இரகுவமிசம், இராமேசர்பிள்ளைவிடுதூதூ, செகராசசேகரம், பரராசசேகரம், அமுதசாகரம், தக்சிணகைலாச புராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பரகிதம், புலியூர்யமகவந்தாதி, கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, திருவண்ணைக்குறவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, திருநாகைக் குறவஞ்சி, திருநல்லைக் குறவஞ்சி, திருநல்லைக் கிள்ளைவிடு தூது, திருநல்லை வெண்பா, திருநல்லையந்தாதி, வேதாந்த செயஞ்சோதி, நியாயலக்கணம், வீசகணிதம், விரிவகராதி முதலியன யாழ்ப்பாணத்தாராற் செய்யப்பட்டன.

மதுரைச்சங்கத்தும், புதுவைச்சங்கத்தும், சென்னைச்சங்கத்தும் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் 'உதயதாரகை'ப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய 'யாழ்ப்பாணச் சிறப்பு' என்னுங் கடிதத்தில் பிற பாசை கலவாது சுத்தச் செந்தமிழ் பேசுவோர் யாழ்ப்பாணத்தார்களே யெனவும் மற்றைத் தேசத்தார்களெல்லோரும் தமிழோடு பல பாசையும் கலந்து பேசுகின்றார்களெனவுங் கூறியிருக்கின்றார்.

சிதம்பரத்திலே ஞானப்பிரகாசம் எனுங் குளஞ்செய்தவித்தவரும், சமஸ்கிருதத்திலே பெளஷ்கராகம விருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோகரத்நம், சிவாகமாதி மகான்மிய சங்கிரகம் என்பவைகளையும், தமிழிலே சிவஞானசித்தியாருக்கு ஓருரையும் இயற்றினவரும், திருவண்ணாமலை யாதீனத்திற் பலருக்குச் சைவாகமோபதேசஞ் செய்தருளியவருமாகிய சிறீ ஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்."


இவை நாவலர் எழுதியவை.

நாவலர் அவர்களை, 'தமிழ்நாடு முழுவதும் இணையில்லாதவர்' என்று, தாமோதரம்பிள்ளை எழுதியிருக்கின்றார். தமிழுக்குஞ் சமயத்துக்கும் உறையுளாய் அக்காலத்திலிருந்த திருவாடுதுறையாதீனம் முதலிய ஆதீனங்களும், தமிழை வளர்த்த இராமநாதபுர சமஸ்தானமும் நாவலர் அவர்களைப் பொன்னேபோற் போற்றியதை யாவரும் அறிவர்.

கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே


என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும்,

என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே


என்று பிள்ளையின் தலைமாணவரான தியாகராச செட்டியார் அவர்களும் நாவலர் அவர்களை போற்றினார்கள்.

நாவலர் அவர்களுக்குப் பிறகு அவர் மாணவரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்று யானைபோலத் தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றித் திக்கு விஜயஞ் செய்து செந்தமிழ் மழை பொழிந்தார். அவரியற்றிய 'திராவிடப் பிரகாசிகை' யின் மிடுக்கு பதிற்றுப்பத்து என்கின்ற சங்கப்பாட்டின் மிடுக்கோடு ஒப்பிடத்தக்கது.

நாவலரின் மாணவரில் ஒருவர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்குச் சாமிநாதையர் போலச் சித்தாந்தத்துக்குச் செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார். அவரியற்றிய நூல்கள் பல. நாவலர் வழியின் வழியில் வந்த நா. கதிரைவேற்பிள்ளை மாயாவாததும்சகோளரி சதாவதானி. திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் கணீர் என்ற பேச்சுத் தமிழுக்குக் கதிரைவேற்பிள்ளை தந்தை.

அரசகேசரியில் இருந்து தொடங்கிய இலக்கிய வழி சின்னத்தம்பிப் புலவரூடாக நடந்து, முத்துக்குமார கவிராயர் சேனாதிராய முதலியார் என்கின்ற இரு கிளைகளாய், எச்சங்களாலுயர்ந்து, வழிவழி சிறந்து வளர்ந்து வந்த வரலாறு ஒருவாறு காட்டப்பட்டது. சிறிய கிளைகளும் கிளைகளின் கிளைகளும் பல.

தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையரும் திருநெல்வேலித் தர்க்க குடார தாலுதாரி தம்பு என்பவரும் விவேகத்திற் சோழவந்தான் சண்முகம்பிள்ளைக்கு இளைத்தவரேயல்லர். 'இராமநாத மான்மியம்', 'அருணாசல மான்மியம்', 'இலங்கை மான்மியம்' என்கின்ற நூல்களியற்றிய சாவகச்சேரிப்புலவர் பொன்னம்பலப்பிள்ளையும், அளவெட்டியிற் சத்தா என வழங்கும் சற்குணசிங்கமும் புராணங்கள் காவியங்கள் இயற்றவல்ல செந்தமிழ்ச் செல்வர்கள். இன்னும் குடத்துள் விளக்கம் போலிருந்து போனவர் பலர்.

கவிதையுலகிற் சின்னத்தம்பிப்புலவர், முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார், சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஐவரும் யாழ்ப்பாணத்தின் பஞ்சரத்தினங்கள்.

யாழ்ப்பாணத்திலே தமிழ்வளங்கும் ஈழமண்டலமனைத்தும் அடங்கும். வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் திருகோணமலை மட்டக்களப்பு எனும் இடங்களில் உள்ளவர்களும் இனத்தாலும் கல்வியாலும் யாழ்ப்பாணத் தொடர்புள்ளவர்களே. சுவாமி விபுலானந்தர் அவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்கின்ற வேற்றுமையின்றி யாழ்ப்பாணத்தவராயே வாழ்ந்தார்கள்.

இலக்கியவழியிற் சுவாமிகளின் பங்கு மிகப்பெரியது. சுவாமிகளின் செய்யுள்கள் அனைத்துந் தொகுத்து நீண்டதொரு விமரிசனஞ் செய்தல் வேண்டும். சுவாமிகளியற்றிய வெள்ளைநிற மல்லிகை என்ற பாட்டு தேசிய விநாயகம்பிள்ளையின் அம்மா வென்குது வெள்ளைப்பசு என்பதனோ டொப்பிடத்தக்கது. அதன் தத்துவக் கருத்து பாரதியாரின் தின்னப் பழங்கொண்டு தருவான் என்கின்ற கண்ணன் பாட்டை ஊடுருவுகின்றது. அஞ்சினார்க்கு சதமரணம் என்கின்ற குறள் வெண்செந்துறை வீரம்கொப்பளிக்கின்றது. அது மனோன்மணீயஞ் சுந்தரம்பிள்ளையின் சிவகாமி சரிதையோடொப்பிடற் பாலது. சுவர்க்க நீக்கப் பாடல் பாரதியாரின் குயிலேதான் என்று சொல்லத்தக்கது. 'தாழ்ந்து மென்மொழி பகரந்திடேல்' என்கின்ற கம்பீரமான பாட்டு - யூலியசீசர் கூற்றாய் வருவது, சீவகசிந்தாமணி பாடல்களோடு ஒப்பிடத்தக்கது. 'துருவன் அனையன் ஒருவனீங் குளனால்' என்ற சீசரின் தலையெடுப்பான கூற்று புறநானூற்று வரிசையை சேர்ந்தது. இவ்வாறே 'சிலப்பதிகார' த்தில் வரும் இனிய பாடல்கள் கலித்தொகைப்பாடல்கள் என்றிவைகளின் வரிசையில் வைத்து சுவைத்தற்குரிய சுவாமிகளின் பாடல்கள் எண்ணில. மட்டக்களப்பு வாவியின் மீன்பாடல் அழியாநிலை படைத்தது. இவ்வாற்றால் இலக்கியவழி சுவாமிகளை அணுகிய வழிப் புத்தம்புதியதொரு வழியாய் கீழிருந்து மேலே மெல்லென உயர்ந்து வீரங்கிளர்ந்து செல்வதனைக்காணலாம். அதனைச் சொல்லுவதொரு தனித்த விமரிசன நூல் மிகமிக இன்றியமையாதது.

ஈழமண்டலத்தின் இலக்கிய வழியிலே ஒழுகி வழிந்த இரசனைப்பெருக்கு ஒய்யாரமாய் எழுந்த விளையாடிய மலையடுக்கங்களுள் உயர்ந்து விளங்குவதோர் இராசசிகரம், நாவலர் அவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய பொன்னம்பலபிள்ளையே யாவார். அவரைப் 'பொன்னம்பலப் பெயர்ப் புட்கலாவர்த்தம்' என்று வர்ணிக்கின்றார் அவருடைய தலைசிறந்த மாணவரும் புலவருமான ஒருவர். புட்கலாவர்த்தம் - பொன்மழை பொழியும் மேகம்.

இப்புத்தகம் பொன்னம்பலப்பிள்ளையை மத்தியாக வைத்து அவர் காலத்து சிவசம்புப் புலவரையும் அதற்கு முன் சின்னத்தம்பிப்புலவர் பரியந்தமானவர்களையும் சிவசம்புப் புலவருக்குப் பின் நமது காலத்திலிருந்த சோமசுந்தரப்புலவர் மகாலிங்கசிவம் என்பவர்களையும் இலக்கியவழி ஊடுருவி நடப்பதை ஒருவாரு சுட்டிக்காட்டுவது. இவ்வாற்றால் ஈழமண்டலத்தின் இலக்கியப்புதையல் உற்று நோக்கத்தக்கது.

ஈழமண்டலம் தாய்நாடாகிய தமிழ்நாட்டின் ஒரு சிறுதுளி. தமிழ்நாட்டின் இலக்கியவளம் மகாசமுத்திரம். ஈழமண்டலத்திலக்கியவழி அந்த மகாசமுத்திரத்திற் சென்று சேராதாயின் நின்று வற்றி விடும். ஆகையினாலே இரட்டையர், காளமேகம், புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு வந்து பின் மேலே எழுந்து கம்பரிலே சற்றுநேரந் தரித்துத் திருவள்ளுவரை வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றோரேற்றும் கலித்தொகையைத் தீண்டி முற்றுகின்றது 'இலக்கிய வழி' எனப் பெயரிய இப்புத்தகம்.

பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நாடுவார்க்குஞ் சிறப்பாக ஈழமண்டலத்தின் இலக்கிய வளர்ச்சியை அறியலுறுவார்க்கும் இப்புத்தகம் உபயோகப்படும். இதற்கெழுதிய இரசனைக்குறிப்பையும் இலக்கிய வழியின் எச்சமாய் எஞ்சிய பகுதியைச் சிறிதே பூர்த்தி செய்யும்.

திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களும் ஒருதாய் வயிற்றில் ஒருங்கு பிறவாத இரட்டையர்கள். அவர்கள் தமிழிலக்கண இலக்கிய வழியிற் செய்த சேவை அதிகம். தாய்நாட்டிலே பழைய நூலுரைகள் பதித்தவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் உதவியவர்கள், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள்.

குமாரசுவாமிப் புலவர் அவர்கள் செய்த 'தமிழ்ப்புலவர் சரித்திர'மும் அவர்களுக்கு முன் சதாசிவம்பிள்ளை இயற்றிய 'பாவலர் சரித்திர தீபமும்' புலவர் அவர்களுக்கு பின் மட்டக்களப்பு பூபாலபிள்ளை இயற்றிய 'தமிழ் வரலாறு' ம் படித்து, இந்த இலக்கிய வழி விரிவு செய்யற்பாலது.

இலக்கிய வழியிற் செல்பவர்கள், இலக்கியத்தினியல்பை யுணர்வது இன்றியமையாததாதலின், அவ்வழி மேலும் நடந்து, தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையை ஊடுருவி, இலக்கியத்தின் உயிரும் உடலிலும் சென்று முற்றுவதாயிற்று.

வருங்காலத் தமிழிலக்கிய உலகம் முந்தையோர் தந்த இலக்கிய வழியை மறந்து போகாமல் ஞாபகப்படுத்தவும், மேலும் வளர்ச்சிவழி வகுப்பதற்குத் தொடர்பு காணவும் உதவும் என்ற கருத்தால் இந்த முன்னுரை வளர்ந்திருக்கின்றது.

இலக்கிய வழி வளர்க, வாழ்க.

6 பின்னூட்டங்கள்:
தமிழை வளர்த்த அறிஞர்கள் பலரை அறியத்தந்தமைக்கு நன்றிகள்,
தொடர்ந்தும் தாருங்கள்.

நன்றி சுதேசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

பகீ,
நல்ல பதிவு. சிதம்பரத்தில் உள்ள சிவனாலயத்தைப் புதுப்பித்து பல தீர்த்தக் குளங்களை வெட்டுவித்தவர்களும் யாழ்ப்பாணத்தவர்களே. சிதம்பரத்திலும் தமிழகத்தின் இன்னும் சில பகுதிகளிலும் தமிழ்ப்பாடசாலைகள் அமைத்து தமிழக மக்கள் பலரின் அறிவுப் பசிக்கு விருந்தளித்தவர்களும் யாழ்ப்பாணத்தவர்களே. தமிழகம் மழையின்றி வரண்டு ஒரு தடவை அங்கு பஞ்சம் ஏற்ப்பட்ட போது தமிழக உறவுகளுக்கு உணவு அனுப்பி வைத்தவர்களும் யாழ்ப்பாணத்தவர்களே. நாவலரே இப் பணியை முன்னின்று செய்ததாக அறிந்தேன்.
அது சரி, உங்களுக்கு , ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அவர் பிறந்து வளர்ந்து தமிழ் மழை மொழிந்த ஊரவன் தான் நானும்.

வெற்றி பின்னூட்டத்திற்கு நன்றி மாதகல் மயில்வாகனப்புலவர் பற்றியும் ஒரு பதிவிட எண்ணியுள்ளேன்.

பகீ!
நம் புலவர்; சான்றோர் பலர் குடத்துவிளக்காகத் தான் போனார்கள்.இணைய வாயிலாக வெளிவருவது சந்தோசமே!!
நல்ல விடயம்; பகிர்வதற்கு நண்றி!
யோகன் பாரிஸ்

யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட


புளொக்கர் நேவ்பார் வித்தை
இதற்கு முன்னர் புளொக்கரின் கருவிப்பட்டையை (Blogger navbar) எவ்வாறு நீக்குவது என்று பார்த்தோம். ஆனால் பலர் இதனை முற்றாக நீக்குவதற்கு விரும்புவதில்லை. ஏனென்றால் ஒரு இலவச சேவையை பயன்படுத்துவோர் வழங்கனர்களுக்கு செய்யும் மரியாதையாக இதனை கருதுகின்றனர்.

கீழே சொல்லப்படுகின்ற முறை மூலம் பதிவினை பார்வையிடுபவர் விரும்பிய நேரம் சுட்டியை மேலே கொண்டு செல்வதன் மூலம் கருவிப்பட்டையை மறைக்கவும் தோன்றவும் வைக்க முடியும்.

அடைப்பலகையில் மாற்றம் செய்யுமிடத்தை திறவுங்கள்.


tag இடையில் இந்த CSS நிரல் துண்டை சேருங்கள்.

.show{filter:alpha(opacity=100);opacity:1.0}
.hide{filter:alpha(opacity=0);opacity:0.0}

tags இடையில் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை சேருங்கள்.br tag களை விட்டு விடுங்கள்.

கடைசியாக
body tag இனை கீழ் காட்டப்பட்டது போல மாற்றி விடுங்கள்.

body onload="att()"

சேவ் பண்ணி பப்ளிஸ் பண்ணி பாருங்கோ. என்ன நடக்கும் எண்டு பாக்க வேணுமெண்டால் இங்க வாங்கோ.

சும்மா பாத்தா நேவ்பார் இல்லாத மாதிரி இருக்கும் ஆனா நேவ்பார் உள்ள இடத்துக்கு சுட்டியை கொண்டுபோங்க. ஆனா இது புளொக்கர் பேற்றாவுக்கு (V3) வேலை செய்யாது. பழைய புளொக்கர் (V2) இற்கு மட்டும் தான் வேலை செய்யும். செய்து பாத்திட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்கோ.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட


கந்தபுராணத்தில் ஒரு பாடல்
இந்ததிருப்பாடல் கந்தபுராணத்தில் தேவகாண்டத்தில் தெய்வயானையம்மை திருமண படலத்தில் வருகின்றது. முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆறுமுகப்பெருமானின் திருமணத்திற்கு செல்லும்போது நடக்கின்ற காட்சிகளில் ஒரு பாடலாய் நிற்கின்றது. கந்த புராணம் இப்பிடி இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ஏன் நம்ம பையன்கள் எல்லாம் கந்தபுராணம் படிக்காம போகப்போறாங்க?

காமரு கொங்கையாற் கரிம ருப்பினை
ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்
மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்
தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென.


ஆண்யானையின் கொம்பு, பெண்யானையை அதன் மேல் மையல் கொள்ளும்படி வைக்கும் எழில் கொண்டது. அதன் பரிசத்தால் தான் பெண்யானை தன்னையறியாது ஆண்யானைமீது மருவிட உருக்கம் கொள்ளும். இதேபோன்று பெண்களுடைய தனங்களும் யானைக்கொம்பர்போல் நீண்டு பருத்திருந்தபோது அதன் எழிலைக்கண்டு ஆண்கள் அப்பெண்கள் மீது பெரும் மையல் கொள்வர். இந்த நிகழ்ச்சியால் அப்பெண்கள் ஆண்களுக்கு இடரே வருவிப்பர். இச்செயலில் யானைக்கொம்பைவிட பெண்கள் தங்கள் தனங்களால் வெற்றிகாண்பது எளிது. ஆதலின் தன் தனத்தால் ஆசையூட்டி ஆடவரை அலைத்திட வைத்த பெண்கள், அதே தன்மையை புரிந்த ஆண்யானைக் கொம்பைக்கண்டு அஞ்சி ஓடினர். இது பிறர்க்குச் செய்த வினை தன்னைச் சூழ்வது போன்றது.

7 பின்னூட்டங்கள்:
இதற்காகவாவது கந்தபுராணம் படிக்கத் தூண்டும் உங்கள் பக்தி ரசனைக்கு வாழ்த்துகள்!

கந்தபுராணம் நான் ஆங்காங்கு படித்ததோடு சரி...

திகட சக்கரச் செம்முகம் பாடலும்

தீயவை புரிந்தாரேனும் பாடலும்

துயில ஓருருவம் துஞ்சி என்ற பாடலும்

ஏலவார் குழல் இறைவிக்கும் பாடலும்

கோலமா மஞ்ஞை தன்னில் பாடலும் மட்டுமே தெரியும். இன்னும் ஆழ வேண்டும். அந்த ஆவலைத் தூண்டுகிறது உங்களது இந்தப் பதிவு.

எஸ்.கேயின் இனிய திருப்புகழ் பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை.

பகீ!
பண்டைய இலக்கியங்களில்..;இப்படியான வர்ணனைகள் மலிந்திருக்கும்; அது பக்தி இலக்கியமானாலும்.;;"மணி வாசகர் கூறுகிறார். "ஈர்கிடை போகா இளமுலை மாதர் தம்; கூர்த்தன நயனக் கொள்கையில் பட்டு....இதைவிடவா???அன்று இச்சொற்களோ வர்ணனைகளோ!!!வித்யாசமான கண்கொண்டு பார்க்கப் படவில்லை.
அதுவே "கம்பரசம்" உருவாகக் காரணமானது."சிவலிங்கம்" என்பது என்ன???,
எனினும்....எஸ் கே அண்ணா!!நினைப்பது போலன்றி....இதன் எழில் கருதியே!!நீங்கள் படிக்கிறீர்கள்..;என்பதனை தங்கள் ஏனைய பதிவுகள் மூலம் நான் அறிவேன். உங்கள் வயதில் உங்கள் தேடுதலை நான் மிக வரவேற்கிறேன்.
நேரம் கிடைக்கும் போது எஸ் கே அண்ணாவின் "திருப்புகழ் "ஆய்வு படிக்கவும்.
யோகன் பாரிஸ்

எஸ் கே ஐயா நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். உண்மையில் இந்த பாடலினினை நான் பதிந்ததன் காரணம் இன்று இளைய தலைமுறையினரிடம் காணமல் போகும் வாசிப்பும் பண்டை இலக்கியம் எங்கள் தனித்துவமான மொழிமீதான தாக்கமும் குறைந்து வருகின்றமை நோக்கியே. எப்படியாவது ஓரிருவரையாவது அவற்றின் மீது திசைதிருப்பி விட முடியுமா என்றே முயற்சிக்கிறேன். இல்லை என்று சொன்னாலும் ஆம் என்று சொன்னாலும் இளைஞர்கள் எதனை விரும்பிப்படிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று நம்புகின்றேன். இந்த பின்னூட்டத்தில் நீங்கள் என்னை கடிகின்றீர்களா அல்லது ஏதாவது செய்து தொலை என்கிறீர்களா என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும் என்சார்பான விளக்கமே. தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
நன்றி.

ராகவன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. யோகன் அண்ணா உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையே. உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு நிச்சயம் வழிகாட்டியே. நான் என் வாசிப்புகளை ஆழமாக்கியபோது வாசிப்பு வட்டத்தை குறைக்க வேண்டி வந்தது. அது வந்து நின்ற இடம் பண்டை இலக்கியங்களும் ஆன்மீகம் சார் இலக்கியங்களுமே. நான் கந்தபுராணத்தின் வாசகனே தவர வித்தகன் அல்ல. எஸ் கே ஐயாவின் பதிவுகளை ஏலவே சுவைத்துக்கொண்டிருப்பவன் நான்.

மனமார பாராட்டுமுகமாகவே சொன்னேன், திரு. பகீ!

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார், "படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன; போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன?
குளிர் போவணும்; அவ்வளவுதான் " என்று. [அவர் சொன்னது வேறு; ஆனால் அதுவும் இதே பொருளில் வரும்!:))]

அது போல, எப்படியோ, கந்தபுராணம் படிக்கத் தூண்டும் இம்முயற்சியினைப் பாராட்டியே சொன்னேன்!

நன்றி ஐயா உண்மையில் பயந்து விட்டீடன்.


பின்னூட்டம் ஒன்றை இட
ஊரோடி மைதானம்
கொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா சரியா வேலை செய்யுதா எண்டு பாக்கிற விளையாட்டு மைதானம் தான் இது. அதவிட ஏதோ புளொக்கர் அபி எண்டு அதையும் ஒரு ஆசையில எடுத்து படிக்கத் தொடங்கி இருக்கிறன். எங்க போய் முடியுதோ தெரியேல்ல. இதையெல்லாம்
ஊரோடியிலயே செய்து பாக்கலாம்தான் ஏதாவது பிசகிபோன என்ன செய்யிறது எண்ட பயத்திலதான் புதுசா ஒரு இடம். இருந்தாலும் இப்ப எங்கட இடத்தில இருக்கிற இணையத்தின்ர வேகத்திலயும் இணையம் பாவிக்ககூடிய நேரத்திலும் இதை தொடங்கியிருக்கிறன். ஏதோ ஒரு துணிவுதான். இத தமிழ்மணத்தில இணைக்கிற பிளான் ஒண்டும் இல்லை. எனக்கு இதில உதவி செய்யிறன் எண்டொருபெடியள் சொல்லியிருக்கிறாங்கள். பாப்பம் ஏதாவது பிரியோசனம் வருகுதோ எண்டு (பிரியோசனம் வராட்டியும் பிரச்சனை வராட்டி சரிதான்).

http://oorodiground.blogspot.com

2 பின்னூட்டங்கள்:
செய்யுங்கோ பாப்பம்,

பகீ!
சரியான வேலை செய்தீர்கள்; இப்படியான பரிசோதனைக்கு ,படிப்புக்கென்று ,இன்னும் ஒன்றை உருவாக்கியதே! மிகப் புத்திசாலித்தனம்.இத்துறையை நன்கு பரீட்சித்து, எங்களுக்கும் உதவுங்கள் அடுத்து; வானம்பாடி இன்னும் பறக்கவில்லை. அப்படியே "என் பார்வை" போல் இருக்கிறது.
யோகன் பாரிஸ்


பின்னூட்டம் ஒன்றை இட


யாழ்ப்பாணம் பாக்கலாம்
இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.

கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.
6 பின்னூட்டங்கள்:
பகீ
குசும்புதான்!!!
அப்படியே!!நல்லூர்க் கந்தனையும் ஓர் சமீப படமெடுத்துப்(டியிஸ்டல் போமா) போட்டுவிடப்பு...புண்ணியம் கிட்டும்.
யோகன் பாரிஸ்

இதைத்தான் குசும்பு என்பதா…? சிரிப்பில் முடிந்த ஏமாற்றம்…!

யோகன் அண்ணா, தமிழ்நதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுக்கில்லாமலா யோகன் அண்ணா நிச்சயமா போட்டு விடுறன்.

இப்படி ஏமாத்திட்டிங்களே!!!

துயா வருகைக்கு நன்றி. யாழ்ப்பாணம் பாத்தீங்க தானே அப்புறம் எப்பிடி ஏமாத்தீட்டிங்க என்று சொல்லுவீங்க


பின்னூட்டம் ஒன்றை இட


புளொக்கர் - சில வித்தைகள் -1
சில புளொக்கர் தளங்களுக்கு செல்லும் போது மேலிருக்கும் புளொக்கர் பட்டை (Nav bar) காணாமல் போயிருப்பதை அவதானித்திருக்கின்றேன். (உதாரணம் - வவாசங்கம்) இது சம்பந்தமாக வலையில் தேடி பெற்றதை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

உங்கள் வலைப்பதிவின் மேல் உள்ள பட்டையை நீக்க வேண்டுமாயின் கீழிருக்கும் வரிகளை இடையில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

புளொக்கர் பயனாளர்கள்
#b-navbar {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

புளொக்கர் பேற்றா பயனாளர்கள்
#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

இதை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

6 பின்னூட்டங்கள்:
தகவலுக்கு நன்றி ... வேலை செய்கிறது

என்ன பகீ!
புதுசா கொடியெல்லாம் கிறியேற் பண்ணுறியள். எங்களுக்கும் பறக்கவிட உதவி செய்வியளோ! அத்துடன் எனது ஆக்கம் தற்போது உங்கள் கைங்கரியத்தினால் தமிழ்மணம் பதிவில் பிச்சிக்கிட்டு ஓடுது. நன்றி பகீ!

உங்களுக்கு இல்லாததே கலீஸ். படம் ஒண்டு செய்து அனுப்புங்கோ கொடியா மாத்தி அனுப்பி வைக்கிறன்.

பிச்சிக்கிட்டு எண்டு??

பகீ!
நன்கு செய்யுங்கள்! நான் இன்னும் வெளியே வராத தளத்துக்கு என்ன??,செய்தென்ன??இது வரை வரவில்லை.மேலும் கைபோடப் பயமாக இருக்கிறது.
நீங்கள் தமிழ்மணத் தொழில் நுட்பக் குழுவில் இணையுங்கள்.பலருக்குதவும்
யோகன் பாரிஸ்

வணக்கம் பகீ
நல்லா இருக்கு உங்க குடில். வாழ்த்துக்கள். நல்லாத்தமிழ் கதைக்குறியள். உங்கட கதை எங்கயோ கேட்ட கதை மாதிரி இருக்குது. சரி அது எதுக்கு இப்ப?.

இரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
அதுசரி எங்க கேட்ட மாதிரி இருக்கு??


பின்னூட்டம் ஒன்றை இட
அடொப் அக்னி
இதனை சிலர் முன்னமே அறிந்திருக்க கூடும். அறியாதவர்களுக்காகவே இந்த பதிவு. ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன்னர் Macromedia Fireworks என்று அறியப்பட்ட மென்பொருளின் புதிய வெளியீட்டின் பேற்றா பதிப்பு சோதனைக்காக கிடைத்திருந்தது. அப்பொழுதே இதனை எழுதவேண்டும் என்று யோசித்தாலும் இப்பொழுதே பதிகின்றேன். மக்ரோமீடியா நிறுவனம் அடொப் நிறுவனத்துள் உள்வாங்கப்பட்ட பின் வெளிவரும் பதிப்பு இது ஆனால் பெயர் அடொப் அக்னி என்ற பெயருடன். இதன் நுளைவுப்படத்தினை கீழே பாருங்கள்.
இந்தியர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட


நற்சிந்தனை பற்றி.....
சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.

தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றிப் பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லைத்
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நன்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லைச்
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

4 பின்னூட்டங்கள்:
பகீ!
திரு மந்திரப் பாடல்களின் தாக்கம் உண்டு. தவிர்க்கமுடியாதது.
தந்ததற்கு நன்றி
யோகன் பாரிஸ்

அருமையான பாடல்கள் பகீ. யோகர் சுவாமிகளின் பாடல்களில் சித்தர் பாடல்களில் இருக்கும் தத்துவங்களும் அத்வைதத் தத்துவமும் மிளிர்கின்றன. இட்டதற்கு நன்றி.

யோகன் குமரன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நானும் அவதானித்திருக்கிறேன் திருமந்திரத்தின் எளிமையும் அழகும் யோகர் சுவாமிகளின் பாடல்களிலும் உண்டு

பகீ, நற்சிந்தனை முதற்பதிப்பில் விடுபட்ட பாடல்களையும் இணைத்து மேலுமிரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1976 அளவில் வெளிவந்த மூன்றாவது பதிப்பே கடைசியாக வெளிவந்ததாக இருக்க வேண்டும்.


பின்னூட்டம் ஒன்றை இட
நானும் ஒரு சர்வே..
கடந்த ஒரு கிழமையாக அனேகமாக எந்த பதிவிற்கு போனாலும் ஒரு சர்வே காணப்படுகிறது. இதைப்பார்த்தபின் எனக்கு ஒரு சர்வே நிரலை எழுதும் ஆசை வந்துவிட்டது. முழுவதும் நானே எழுதாமல்(அவ்வளவிற்கு திறமையிருந்தா பிறகென்ன?????) Flash relief இன் Poll component ஐ பலரும் பயன்படுத்தக் கூடியவாறு (Multi user system) உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் எவரும் இதனை தங்கள் சொந்த சர்வேக்கு பயன்படுத்த முடியும். சர்வேயின் பூரண கட்டுப்பாடும் உருவாக்குபவரிடமே இருக்கும் ஆனால் முடிவுகளை(வாக்குகளின் எண்ணிக்கையை) மாற்ற முடியாது. ஆனால் இது எந்தளவிற்கு சரியாக வேலை செய்கிறுது என்று சரிபார்க்க உங்கள் உதவியை நாடியுள்ளேன். வந்தது வந்ததாக ஒரு வாக்களியுங்கள். ஏனென்றால் அப்போதுதான் இதன் வினைத்திறனை சரிபார்க்க முடியும்.


9 பின்னூட்டங்கள்:
ஓட்டு போட்டு விட்டேன் :)

பொன்ஸ் வருகைக்கு பின்னூட்டத்திற்கு ஓட்டுக்கு அனைத்துக்குமே நன்றி. தயவு செய்து அதன் வினைத்திறன் சம்பந்தாமாயும் முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

பகீ,
ஆரம்பிக்கும்போதே சுட்டி "ஆம்"இல் இருப்பதைத் தவிர்க்கலாம். எந்த ஆப்ஷனும் குறிக்கப் படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..
மற்றபடி செயல்திறன் அருமையாக இருக்கிறது..
தொடர்ந்து மேம்படுத்தி படங்கள் சேர்க்கலாம்...

பகீ!

உங்களுடைய நிரலிகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் என் கணணியில் வெறும் பெட்டிபெட்டியாகவே தெரிகின்றன. என்ன காரணம். அறியத்தருவீர்களா?

நானும் ஓட்டுப்போட்டிட்டேன்

நன்றாக உள்ளது.

கீழே ஏன் அதிக வெற்றிடம்?
ஒரு பார்டர் சேர்த்து விடுங்கள்!

ம்... நானும் போட்டு விட்டேன் :)

பகீ!
வாக்குப் போட்டேன். விடை உருமாற்றம் மிக அழகாகத் தெரிகிறது.
யோகன் பாரிஸ்

பொன்ஸ், மலைநாடான், சகோதரி சுந்தரி, சிந்தாநதி, சத்தியா, யோகன் உங்கள் வருகைகளுக்கும் பயனுள்ள பின்னூட்டங்களுக்கும் நன்றி. மலைநாடான் உங்கள் கணனியில் யுனிகோடு நிறுவப்படவில்லை (உங்கள் இயங்குதளம் xp ஆக இருந்தால் மட்டும்) மான்ட்ரேவ் லினிக்ஸில் பிரச்சினை இல்லை. Control panel இல் language settings இல் இரண்டு தெரிவுகளையும் செய்து நிறுவி விடுங்கள். பிறகு சரியாக தெரியும். சிந்தாநதி நிச்சயமாக பார்டர் சேர்த்து விடுகின்றேன். பொன்ஸ் உங்கள் கருத்துக்கு நன்றி மிக முக்கியமான ஒன்றை சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள்.


பின்னூட்டம் ஒன்றை இட


நற்சிந்தனை
நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி - கிளியே
இரவுபகல் காணேனடி.

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே
நல்லூரான் தஞ்சமடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி - கிளியே
கவலையெல்லாம் போகுமடி

எத்தொழிலைச் செய்தாலென்
எதவத்தைப் பட்டாலென்
கந்தன் திருவடிகள் - கிளியே
காவல் அறிந்தி்டெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி - கிளியே
பொல்லாங்கு தீருமெடி.

13 பின்னூட்டங்கள்:
பகீ,
அருமை. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இது உங்களின் ஆக்கமா?

பகீ
அருமையான பாடல் ; பாரதியாரின் "நெஞ்சில் உரமும் இன்றி" மெட்டில் பாட வேண்டும்; நித்தியசிரியும் அருணாசலக் கவியின் ஓர் பாடல் இம்மெட்டில் பாடியுள்ளார்.
யாவுக்கும் நன்றி!!
யோகன் பாரிஸ்

பகீ!
கடைசிவரி "பூமியிற் சொன்னாலெடி"....என்பதே!!! பொருந்தும் போல் உள்ளது. நான் கூறுவதை யோசித்துப் பார்க்கவும்.
யோகன் பாரிஸ்

வெற்றி, யோகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வெற்றி இது என்னுடைய படைப்பு அல்ல? யார் எழுதியது என்றும் தெரியவில்லை. யோகன் தெரிந்தால் சொல்லுங்கள்.

வணக்கம் பகீ

இந்தப்பாடல் யோகர் சுவாமிகளுடையது. என் ஆக்கம் இதோ
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_08.html

கானா பிரபா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நற்சிந்தனை என்ற பெயரும் கடைசி பாடலின் முதல் வரியும் இதை எனக்கு உணர்த்தியிருந்தாலும். உறுதியாக தெரியாத படியால் குறிப்பிடவில்லை. தங்கள் பதிவை படித்தேன். மிகச்சிறப்பாயிருந்தது.
வெற்றி கானா பிரபாவின் பதிவையும் இதுவரை பார்க்காவிட்டால் பார்க்கவும். பூரண விபரம் உண்டு

பகீ,
/*சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னானெடி */

யார் இந்தச் சுவாமி யோகநாதன்? யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளா?
அவர் சொன்ன திருப்பாட்டு ஐந்து உங்களிடம் கைவசம் இருக்கிறதா?

நன்றி.

யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தான். நிச்சயம் யோகர் சுவாமிகளின் படைப்புகளை வலையேற்ற முயற்சிக்கியேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி வெற்றி

பகீ, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளைப் பற்றியும் அவரது நற்சிந்தனைகளையும் எனது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம்:

யோக சுவாமிகள்

யோகன் உங்கள் திருத்தமே சரியானது. நற்சிந்தனை புத்தகம் நண்பரிடம் இருந்து பெற்று பார்த்தேன். நன்றி. பதிவிலும் மாற்றிவிட்டேன். வெற்றி ஐந்து பாடல்கள் என்பது முதல் ஐந்து பாடல்களைத்தான்.

மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது பகீ. ஏற்கனவே யோகர் சுவாமிகளைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருந்ததால் இந்தப் பாடலைப் படிக்கத் தொடங்கியவுடன் இது யோகர் சுவாமிகள் எழுதியதாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

நன்றி குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

முருகா முருகா முருகா!

தமிழ் இனிமையென்றால்...அந்த இனிமையைக் கொண்டு வாழ்வில் இனிமை கூட்டும் வள்ளற் பெருமான் வேலவனைப் பாடுவதும் படிப்பதும் கேட்பதும் எத்துணை இனிமை.


பின்னூட்டம் ஒன்றை இட
மேலும் இரு வடிவங்கள்
இன்றைய சிந்தனை என்று உருவாக்கப்பட்ட இந்த கருவிக்கு மேலும் இரண்டு வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் அடைப்பலகைக்கு அழகு சேர்கக்கூடியதை பொருத்திக் கொள்ளுங்கள்.
நிரலிக்கு
நிரலிக்கு

இதனை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி பின்னூட்டம் இடுங்கள்.

4 பின்னூட்டங்கள்:
சிந்தனை தமிழில வராதோ.. வேணுமென்றால் சொல்லும் நிறைய என்ர சிந்தனைகளை அள்ளி விடுறன்..

சிந்தனைகள் புத்தகங்களில இருந்து எடுத்ததுதான். தமிழில சிந்தனைகளை அள்ளி விடுங்க குருவே சேத்து விடுவம்.

இந்த நிரலியை டெம்ப்ளேட்டில் எங்கே இடவேண்டும் என்று சொல்லுங்கள் பகீ. நான் எனக்குப் புரிந்த அளவில் இட்டுப் பார்த்தேன். வலைப்பூவில் தெரியவில்லை.

நீங்க தமிழ் மண பட்டை பொருத்தியிருக்கிறதுக்கு கீழ அப்பிடியே சேர்த்து வீடுங்கோ. குமரன்


பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
Google docs updated
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads

தொடுப்புகள்:
- என் பார்வையில்
- சாரல்Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution