கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்
ஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.நீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.
குறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.
குறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.
நீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.
நீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.
வெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.
நீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க...