« இல்லம்

கதிரைச் சிலேடை வெண்பா 6 -10கதிரைச் சிலேடை வெண்பா 1- 5மறுமொழி மட்டறுத்தல்யாழப்பாண நூல்நிலையம்பித்தவெடிப்புக்கு மருந்துவிலைவாசிஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்இரு கவிராயர்பணம் பண்ணலாம் பணம்பதிபவர்கள்  »கதிரைச் சிலேடை வெண்பா 11-15
மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்
கைக்குறி பார்க்குங் கதிரையே - கைக்குங்
கடமலையு மையற் கடமு மழித்துப்
படமலையு மையன் பதி. (11)

அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்
கஞ்சனை கடுக்குங் கதிரையே - விஞ்சுபல
மாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு
பாயத்தா னாடற் பதி. (12)

வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டி
கண்ணி வளைக்குங் கதிரையே - நண்ணுங் (னிலுங்)
கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்
கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)

இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்
கந்துகத்தே ரோட்டுங் கதிரையே - முந்தும்
பாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்
பாவமா வினையடித்தான் பற்று. (14)

மன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்
கன்னிகையை யேற்குங் கதிரையே - முன்னமலை
மாவர சத்தியத்த மால்கொளசுர் மைந்தடக்கு
மாவர சத்தியத்தன் வாழ்வு. (15)

 
1 பின்னூட்டங்கள்:


பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
மறுமொழி மட்டறுத்தல்
யாழப்பாண நூல்நிலையம்
பித்தவெடிப்புக்கு மருந்து
விலைவாசி
ஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்
இரு கவிராயர்
பணம் பண்ணலாம் பணம்
பதிபவர்கள்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution