இன்றைய சிந்தனை - கருவி.
இன்றைய சிந்தனை எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியானது உங்கள் கருவிப்பட்டைக்கு அழகு சேர்ப்பதுடன் ஒரு சிந்தனையையும் உங்கள் வாசகருக்கு ஊட்டக் கூடியது. தினமும் புதிய புதிய சிந்தனைகள் காட்டப்படக்கூடியவாறு இது அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறான கருத்தோ அல்லது விளம்பர வாசகங்களோ இதனூடாக காட்டப்படமாட்டாது ( எதுக்கும் இருக்கட்டும் எண்ட இந்த வசனத்தையும் சேத்தனான்). முதலாவதாக Prayers and Meditations for Mankind என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அனேக மதங்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நூல் Peter L. Higgs மற்றும் Kathleen R. Higgs ஆகியோரால் தொகுக்கப்பெற்று 1978ம் ஆண்டு மத்திய ஆபிரிக்காவின் சாம்பியா நாட்டின் தலைநகர் லுசாக்காவில் வெளிவந்தது.நிரலிக்கு (சொடுக்கும் போது நிரலியை பெறமுடியாவிட்டால் right click பண்ணி save target as இனை தெரிவு செய்யுங்கள்)
இதனை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி பின்னூட்டம் இடுங்கள்.