« இல்லம்

கதிரைச் சிலேடை வெண்பா 1- 5மறுமொழி மட்டறுத்தல்யாழப்பாண நூல்நிலையம்பித்தவெடிப்புக்கு மருந்துவிலைவாசிஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்இரு கவிராயர்பணம் பண்ணலாம் பணம்பதிபவர்கள்நண்பரின் திருமணம்  »கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழுங்
காய்கதிரைக் காட்டு்ங் கதிரையே - மேயசடை
ஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்
ஆறா னனத்த னகம் (6)

விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்
கற்கண்டங் கூறுங் கதிரையே - அற்பார் மொழியிற்
உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்
அறுவர்பய முண்டா னகம் (7)

வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்
காசிலன முண்ணுங் கதிரையே - மோசக்
கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்
திருவிளையாட் டம்மான் சிலம்பு (8)

அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்
கற்பூர மேவுங் கதிரையே - பொற்பூரு
மஞ்சத்தான் றோற்று மறுகவரு வானடியே
மஞ்சத்தான் றோற்று மரண். (9)

மேயகொடி மாளிகையு மெய்யடியார் கூட்டமுமா
காயங் கடக்குங் கதிரையே - தீய
மடக்குஞ் சரத்தானை மாமுகனைப் போரின்
மடக்குஞ் சரத்தான் மலை (10)

 
0 பின்னூட்டங்கள்:


பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
மறுமொழி மட்டறுத்தல்
யாழப்பாண நூல்நிலையம்
பித்தவெடிப்புக்கு மருந்து
விலைவாசி
ஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்
இரு கவிராயர்
பணம் பண்ணலாம் பணம்
பதிபவர்கள்
நண்பரின் திருமணம்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution