கந்தபுராணத்தில் ஒரு பாடல்
இந்ததிருப்பாடல் கந்தபுராணத்தில் தேவகாண்டத்தில் தெய்வயானையம்மை திருமண படலத்தில் வருகின்றது. முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆறுமுகப்பெருமானின் திருமணத்திற்கு செல்லும்போது நடக்கின்ற காட்சிகளில் ஒரு பாடலாய் நிற்கின்றது. கந்த புராணம் இப்பிடி இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ஏன் நம்ம பையன்கள் எல்லாம் கந்தபுராணம் படிக்காம போகப்போறாங்க?காமரு கொங்கையாற் கரிம ருப்பினை
ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்
மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்
தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென.
ஆண்யானையின் கொம்பு, பெண்யானையை அதன் மேல் மையல் கொள்ளும்படி வைக்கும் எழில் கொண்டது. அதன் பரிசத்தால் தான் பெண்யானை தன்னையறியாது ஆண்யானைமீது மருவிட உருக்கம் கொள்ளும். இதேபோன்று பெண்களுடைய தனங்களும் யானைக்கொம்பர்போல் நீண்டு பருத்திருந்தபோது அதன் எழிலைக்கண்டு ஆண்கள் அப்பெண்கள் மீது பெரும் மையல் கொள்வர். இந்த நிகழ்ச்சியால் அப்பெண்கள் ஆண்களுக்கு இடரே வருவிப்பர். இச்செயலில் யானைக்கொம்பைவிட பெண்கள் தங்கள் தனங்களால் வெற்றிகாண்பது எளிது. ஆதலின் தன் தனத்தால் ஆசையூட்டி ஆடவரை அலைத்திட வைத்த பெண்கள், அதே தன்மையை புரிந்த ஆண்யானைக் கொம்பைக்கண்டு அஞ்சி ஓடினர். இது பிறர்க்குச் செய்த வினை தன்னைச் சூழ்வது போன்றது.