சிக்கிண்குணியா
யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும் பேசாம விட்டுட்டன். முந்தநாள் தொடங்கினது இப்பத்தான் விரலெண்டான்ன கொஞ்சம் வேலைசெய்யுது. எந்த வேலையெண்டாலும் கொஞ்சம் சிலோ மோசனிலதான் செய்யேலும். முதல் இரண்டு நாளும் சரியான தலையிடியும் காய்ச்சலும். அதுகள் குறைஞ்சவுடன இந்த நோவுகள் தொடங்கிச்சு பாருங்கோ பேசாம காய்ச்சலாவே கிடந்திருக்கலாம் போல இருக்கு. யாழ்ப்பாணத்து சனத்தொகையில 90 வீதத்திற்கு குறையாதவர்கள் இந்நோயின் தாக்கத்துக்குள்ள அகப்பட்டிருக்கினம். ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஏறத்தாள 65 இற்கு மேல்) இந்த நோய்த்தாக்கத்தால் தொடர்ச்சியாக காலமாகி வருகின்றார்கள். இப்படியே இந்த நோய் தொடருமானால் யாழ்ப்பாணத்தின் மூத்த சந்ததியின் நிலைமை என்னவாகும் என்பதற்கு எந்த பதிலும் இப்போது இங்கு யாரிடமும் இல்லை. இதற்கு மருத்துவர்கள் பனடோலையே பயன்படுத்த சொன்னாலும் பனடோல் பெறுவது என்பது யாழ்ப்பாணத்தில் குதிரைக்கொம்புதான்.
சரி அப்பிடியே வந்தனீங்கள் கீழ இருக்கிற இந்த வடிவான படங்களையும் பாத்திட்டு எனக்கு ஒரு பின்னூட்டமும் போட்டிட்டு போங்கோ.






