« இல்லம்

நானும் ஒரு சர்வே..நற்சிந்தனைமேலும் இரு வடிவங்கள்இன்றைய சிந்தனை - கருவி.உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டிவரதர் ஐயாவின் புதிய முயற்சிஇன்னுமொரு மணிக்கூடுபறாளை விநாயகர் பள்ளுஇரண்டு படங்கள்இணையத்தளங்களுக்கான கருவிகள்  »நற்சிந்தனை பற்றி.....
சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.

தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றிப் பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லைத்
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நன்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லைச்
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

 
4 பின்னூட்டங்கள்:
பகீ!
திரு மந்திரப் பாடல்களின் தாக்கம் உண்டு. தவிர்க்கமுடியாதது.
தந்ததற்கு நன்றி
யோகன் பாரிஸ்

அருமையான பாடல்கள் பகீ. யோகர் சுவாமிகளின் பாடல்களில் சித்தர் பாடல்களில் இருக்கும் தத்துவங்களும் அத்வைதத் தத்துவமும் மிளிர்கின்றன. இட்டதற்கு நன்றி.

யோகன் குமரன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நானும் அவதானித்திருக்கிறேன் திருமந்திரத்தின் எளிமையும் அழகும் யோகர் சுவாமிகளின் பாடல்களிலும் உண்டு

பகீ, நற்சிந்தனை முதற்பதிப்பில் விடுபட்ட பாடல்களையும் இணைத்து மேலுமிரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1976 அளவில் வெளிவந்த மூன்றாவது பதிப்பே கடைசியாக வெளிவந்ததாக இருக்க வேண்டும்.பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
நானும் ஒரு சர்வே..
நற்சிந்தனை
மேலும் இரு வடிவங்கள்
இன்றைய சிந்தனை - கருவி.
உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி
வரதர் ஐயாவின் புதிய முயற்சி
இன்னுமொரு மணிக்கூடு
பறாளை விநாயகர் பள்ளு
இரண்டு படங்கள்
இணையத்தளங்களுக்கான கருவிகள்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution