புளொக்கருக்கு ஒரு எழுதுகருவி
புளொக்கரில நாங்கள் ஏதாவது பதிவு போடும்போது அதிலுள்ள எடிட்டரையே பயன் படுத்துகின்றோம். ஆனால் அதிலுள்ள வசதிகள் எமக்கு சிலவேளைகளில் போதுமானவையாக இருப்பதில்லை. சாதாரமாக ஒரு வேர்ட் பாட் இல் இருக்கின்ற வசதிகள் கூட இந்த எடிட்டரில் இல்லை. இதில் அட்டவணைகள் போன்றவற்றை சேர்க்க விரும்பினாலும் முடிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக வந்துள்ளதுதான் WriteToMyBlog.
இங்கேயே நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதி பப்ளிஸ் பண்ணி்க்கொள்ள முடியும். இதற்கு இது உங்கள் புளொக்கர் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பு பிரச்சனை பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏனென்றால் இந்த வலைத்தளம் அவற்றை சேமித்து வைப்பதில்லை. கீழே இதன் படத்தை பார்த்து இதன் வசதிகளை தெரிந்துகொள்ள முடியும்.
இதனைப்பயன்படுத்தி உருவாக்கிய பதிவொன்றினை கீழே பாருங்கள்.