Google Notebook
கூகிள் நிறுவனம் தனது நோட்புக்கில் பயன்படுத்த இலகுவானதாக சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் முதற்பக்கம் பூராகவும் AJAX இல் மீள வடிவமைக்கப்பட்டு சில வசதிகளும் மேலதிகமாக செய்யப்பட்டுள்ளன. இதனால் இதனை மிக வேகமாக பயன்படுத்த முடிவதுடன் இலகுவாக கையாளவும் முடிகிறது. அத்துடன் கூகிள் நோட்புக்கில் எடுக்கப்பட்ட குறிப்பொன்றினை Google docs இற்கு இலகுவாக அனுப்பவும் முடிகின்றது.

கூகிள் நோட்புக் (புதியது)



கூகிள் நோட்புக் (பழையது)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






தமிழையும் பாவிக்கலாம்
சில நாட்களுக்கு முன்னர் நான் அடொப் அப்பலோ பற்றி எழுதிய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டமாக அடொப் flex பற்றியும் குறிப்பிட்டு அதில் தமிழினை பயன்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நான் நீண்ட நாட்களாகவே Adobe Flex இனை பயன்படுத்தி வந்தாலும் தமிழை (Unicode) ஒருபோதும் பயன்படுத்தி பார்க்காமையினால் என்னால் எக்கருத்தும் தெரிவிகக இயலவில்லை.



ஆனால் தமிழை பயன்டுத்துவதில் (அல்லது Unicode இல் உள்ளடங்கும் எந்த ஒரு மொழியினையும் பயன்படுத்துவதில்) எனக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை. திரைவெட்டுகளை பாருங்கள்.





அனேகமாக நண்பரின் பிரச்சனை இதுவாக தான் இருந்திருக்கும். ஆனால் நண்பர் மேலும் விளக்கமாக பின்னூட்டமொன்றினை இட்டால் என்னால் முடிந்தளவு பதிலளிக்க தயாராயுள்ளேன். (நண்பருக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும்தான்....)

2 பின்னூட்டங்கள்:
Hi,

I tried as you have shown..
In the code (like when there is a text value for an attribute) I am able to cut and paste tamil letters/words (from the transliteration websites - suratha - I guess)
.
But when I run this code the output shows some symbols and not the tamil words or letters - font issues I guess..

Did you try running your code and how did the output look..

This problem was observed both in Flex as well as Apollo.

I will look forward to your repliy on this ..

Thanks
Thiagu

Hi thiyagu,

To answer this question i want to know two things.
1. Your operating system
2. Did you install supportive unicode fonts.

Even in Apollo I don't have this problem.


பின்னூட்டம் ஒன்றை இட






கணினிகள்
நாங்கள் எல்லோரும் கணினி பயன்படுத்துபவர்கள். ஆனால் இப்படியான வடிவங்களில் கணினிகளை கண்டிருக்க மாட்டோம். பார்த்துவிட்டு உங்கள் கணினிகளையும் மாற்றி பாருங்களேன்.






2 பின்னூட்டங்கள்:
பகீ!
முதல் வடிவமைப்பு எனக்குப் பிடித்தது. காரணம் மேசை வாங்கத் தேவையில்லை.

வாங்க யோகன் அண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






Adobe Flash CS3 Professional
நேற்று அடொப் நிறுவனம் தனது flash CS3 professional மென்பொருள் வெளியீடு சம்பந்தமான உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. flash என்றால் என்ன அதனை பயன்டுத்தி என்ன செய்ய முடியும் என்ற விடயங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இங்கு இந்த CS 3 இல் வரப்போகும் முக்கிய வசதிகளை மட்டும் குறிப்பிடுகின்றேன்.



Adobe Photoshop மற்றும் Illustrator உடன் மிகுந்த ஒத்திசைவு.
இதன் மூலம் இம்மென்பொருள்களில் தயாரிக்கபடும் வெளியீடுகளை (psd,ai) நேரடியாக flash இனுள் உள்ளீடு செய்துகொண்டு பயன்படுத்த முடியும். உள்ளீடு செய்யும்போது அவற்றின் layer மற்றும் structure என்பன மாற்றமடையாமல் உள்ளீடு செய்யப்படுவதால் இலகுவாக எமக்கு தேவையான விதத்தில் அவற்றை கையாள முடியும்.



Convert animation to AS 3.0
நாங்கள் சாதாரணமாக செய்கின்ற animation களை இலகுவாக ActionScript 3.0 நிரல்களாக எழுதி பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் ஒரே அனிமேசனை பல வேறு வேறு object களுக்கு கொடுக்க முடியும்.

Action Script 3.0
இவ்வளவு காலமும் Action Script 2.0 ஆக இருந்த இது இப்போது மிகவும் மேம்படுத்தப்பட்டு ActionScript 3.0 ஆக இந்த பதிப்பில் வெளிவந்துள்ளது. (உங்களுக்கு ActionScript 1.0 மற்றும் Action Script 2.0 இற்கு இடையில் ஏற்பட்ட மாற்றம் மறந்திருக்காது என்று நினைக்கின்றேன்)

ActionScript debugger
இந்த புதிய வசதி இலகுவாக எங்கள் நிரல்களை எழுத உதவிடும்.

புதிய வரையும் கருவிகள்
அடொப் நிறுவனத்துடன் இணைந்தவுடனேயே எதிர்பார்க்கப்பட்ட வசதி இது. இதன்மூலம் ஒரு சிறந்த Graphic editor இல் வேலை செய்வது போல இதிலும் வேலை செய்ய முடியும்.

மேம்படுத்தப்பட்ட AS3 components
மிக இலகுவாக மாற்றியமைக்க கூடியவையும் அளவு குறைந்தனவுமான component கள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Advance QuickTime export
இதன்மூலம் எமது swf கோப்பு ஒன்றினை இலகுவாக மிகுந்த வசதிகளுடன் QuickTime கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.



இதைவிட அடொப் நிறுவனம் தனது முந்தைய மென்பொருள்களில் பயன்படுத்திய GUI இனையே இப்போது flash மென்பொருளிற்கும் பயன்படுத்தியுள்ளது. இது பலவழிகளில் இலகுத்தன்மையை கொண்டு வந்துள்ளது.

இதைவிட மேலும் பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

2 பின்னூட்டங்கள்:
Flash 8 இலயே தெரியாத விசயம் கனக்கக்கிடக்கு(எனக்கு)..
அதுக்குள்ள CS3 வேற வருது, வேற நிறைய வசதிகளோட.. ம்ம்..
:)

இப்பிடி தலைப்பு போட்டா flash தெரிஞ்சாக்கள் தவிர மற்ற ஆக்கள் கெதியில வரமாட்டினம்.. :(

ரமணன்

வாங்க ரமணன்.

எனக்கும்தான் flash 4 இல தொடங்கினது. இப்ப CS3 பாப்பம் கையில கிடைச்சாப்பிறகுதான் என்னவெண்டாலும் சொல்லலாம்.

தலைப்பில கூட இவ்வளவு விசயம் இருக்கா????


பின்னூட்டம் ஒன்றை இட






அடொப் புதிய வெளியீடுகள்
அடொப் நிறுவனம் இப்போது மக்ரோமீடியா நிறுவனத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டு இணைய மற்றும் Graphics உலகில் முடிசூடா மன்னனாகியுள்ளது. இப்பொழுது அடொப் நிறுவனம் தனது அனைத்து மென்பொருட்களதும் புதிய பதிப்புகளை வெளியிட உள்ளது. (அனேகமாக ஏப்பிரல் 20)இப்பொழுதே அடொப் போட்டோசொப்பின் பீற்றா பதிப்பு வெளியாகி உள்ளமை அனைவருக்கும் தெரியும்.


(படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)

இவை பயனாளர்களின் நன்மைகருதி பல தொகுப்புகளாக வெளிவர உள்ளன.


வெளிவர இருக்கும் சில புதிய பதிப்புகள்
* Adobe InDesign CS3 for professional page design
* Adobe Photoshop CS3 Extended for new dimensions in digital imaging
* Adobe Illustrator CS3 for powerful vector graphics creation
* Adobe Acrobat 8 Professional for Adobe PDF creation and collaboration
* Adobe Flash CS3 Professional for creating rich interactive content
* Adobe Dreamweaver CS3 for developing standards-based websites and applications
* Adobe Fireworks CS3 for web prototyping and designing
* Adobe Contribute CS3 for updating websites and blogs
* Adobe After Effects CS3 Professional for industry-standard motion graphics and visual effects
* Adobe Premiere Pro CS3 for capturing, editing, and delivering video
* Adobe Encore CS3 for preparing DVD titles
* Adobe Soundbooth CS3 for creating and editing audio quickly and intuitively

2 பின்னூட்டங்கள்:
நல்ல தகவல்கள் நண்பரே..

ஆனா நியாயமா காசுக்கு ஏதும் வாங்கி பாவிக்கிற பழக்கம்தான் நமக்கு கிடையாதே..
:)

crack ஓடயோ அல்லது serial ஓடயோ கெதியில எங்கயாவது பதிவிறக்கலாம், அப்ப பாப்பம்..

நல்ல பதிவு

ரமணன்

இதுதான். இதைத்தான் நாங்கள் பள்ளிக்கூட பழக்கம் எண்டு சொல்லுறனாங்கள்


பின்னூட்டம் ஒன்றை இட






அடொப் அப்பலோ வெளியானது
இன்று நாளை என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அடொப் அப்பலோ சில நாட்களின் முன்னர் அல்பா பதிப்பாக வெளியானது. நீண்ட நாட்களாக இதனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். வெளியிடப்பட்டவுடனேயே ஒரு பதிவு இடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போதும் மேலோட்டமாகவேனும் விளங்கிக்கொண்ட பின்னரே பதிவிடவேண்டும் என்று அதனை தவிர்த்துவிட்டேன். இப்போது எனது முதலாவது மென்பொருள் ஏறத்தாள தயாராகிவிட்டது.




இந்த அல்பா பதிப்பு அனைத்து வசதிகளுடனும் வெளியிடப்படவில்லை. 2007ம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் பூரணமான முதற் பதிப்பு வெளியிடப்படும் என அடொப் அறிவித்துள்ளது. அப்போது அதன் அளவு ஏறத்தாள 9mb ஆக அமையும் (இப்போது 6mb)

இப்பொழுது மென்பொருள் எழுதுபவர்களின் பிரதான runtime களான java மற்றும் .NET க்கு இது பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணங்களாக அமையக்கூடியன

அளவு (9mb)
HTML, DHTML, Javascript, AJAX, Flash, Flex, ActionScript எதைவேண்டுமானாலும் மென்பொருள் உருவாக்கத்திற்கு பயன்படுத்த முடியும்.
எங்களுக்கு விரும்பியவாறு மாற்றி அமைக்கும் வசதி (customizable)
இணையத்தோடு இணைந்து வேலைசெய்யக்கூடிய வசதி
உருவாக்கப்படும் மென்பொருட்களின் அளவு
மிக அழகிய GUI களை உருவாக்கக்கூடிய வசதி

மிகவிரைவில் அடொப் அப்பலோ சம்பந்தமான பூரண விளக்கப்பதிவு ஒன்றினையும் இட முயற்சிக்கின்றேன்.

அடொப் அப்பலோ சம்பந்தமான கருத்துக்கள் பிரச்சனைகள் என்பவற்றை பின்னூட்டமாக இடுங்கள். பதிலளிக்க முயற்சிக்கின்றேன்.


4 பின்னூட்டங்கள்:
Nice to see some one talk about Adobe Apollo in a Tamil Forum. You should mention about Flex also I guess.

I am trying to have Flex with Tamil characters (in the gui-s)

Have you made any attempts in this area ( using Tamil-unicode) in Flex
or Apollo.

I have not seen any Tamil names in the Flex-india user group..

Flex and Apollo are the best gui software I have seen so far in my IT career ( 20 years plus)

we have certainly come a lonnng way. Java unfortunately failed in this area - miserably with awt, swt, applets, swing, JSP, JSF etc

EVen Flex-Apollo have competition . There is Laszlo and Avalon(XAML)..

Thanks once again to see Apollo metioned inn Thennkoodu.

Thiagu

உங்கள் கணினி பற்றிய தமிழ் பதிவுகள் மிகப் பயனுள்ளவையாக அமைகின்றன. அப்போலோ விற்கு போட்டியென slingshot என்ற மென்பொருள் வந்துள்ளதாமே, தவிர firefox 3 இந்த தேவையை நிறைவேற்றுமோ -- பார்க்க இந்த சுட்டி

அனானி வாங்க. இப்படி ஒரு பின்னூட்டத்தினை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி. அப்பலோவினை பற்றி பூரணமான ஒரு பதிவின்போது நிச்சயமாக flex இனைபற்றி குறிப்பிடுவேன்.

நான் தமிழை ஒருபோதும் பயன்படுத்தி பார்த்ததில்லை. ஆனால் ஒருமுறை நிச்சயமாக உங்களுக்காக பயன்படுத்தி பார்க்கின்றேன். நான் flex user group இல் இணைந்து கொள்வதில் ஆர்வமாயில்லை. அத்தோடு நான் இந்தியனும் அல்ல.

நிச்சயமாக GUI என்றால் flex /flash தான்.

Laszlo நிச்சயமாக போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியாக இருப்பின் அதன் பெயர் இப்போது எங்கேயோ இருக்க வேண்டும். ஓரிருவருக்கு தான் அந்த பெயரே தெரியும். அதைவிட அவர்களின் runtime அவ்வளவு நம்பத்தகுந்தது அல்ல.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

மணியன் வாங்க. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Slingshot இன்னமும் வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்டால் அதைப்பற்றி யோசிக்கலாம். இருந்தாலும் அப்பலோவின் பலமே flex மற்றும் flash தான். இதனை slingshot எவ்வாறு எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.

firefox3 நிச்சயமாக ஒரு runtime ஆக இயங்க முடியர்து. அவ்வாறு இயங்குவதானாலும் அதனால் ஒரு மென்பொருள் உருவாக்கத்திற்கான தேவையை நிறைவேற்ற முடியாது.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






அலுவலகத்தில் தூங்குவது எப்படி?
அலுவலகத்தில் மற்றவர்களுக்கு தெரியாமல் தூங்கவேண்டுமா? கீழே பாருங்கள்.





3 பின்னூட்டங்கள்:
:) நானும் போட்டிருந்தேன்

http://sirippu.wordpress.com/2007/03/07/sleep/

இதை இன்று நான் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டுவிட்டீர்கள்!!!;)

சேவியர் வாங்க உங்க வருகைக்கு நன்றி. நீங்க போட்டிருக்கிறது தெரிஞ்சிருந்தா போட்டிருக்கவே மாட்டேன். ஆனா நீங்க குடுத்திருக்கிற வசனங்கள் ரொம்ப நல்ல இருக்கு.

யோசிப்பவர் வாங்க. நீங்க யோசிக்கிற நேரத்தில நான் போட்டுட்டேனோ???
உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






மலைநாடானுக்கு நன்றிகள்.
எல்லாற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில காட்டுப்படுறது என்றது பொதுவானது. ஆனா என்னுடைய ஊரோடி வானொலியில தெரிஞ்ச செய்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்பிடி தெரிய வைச்சவர் மலைநாடான். தனது இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சியில என்னுடைய இந்த பதிவை பற்றி அறிமுகம் செய்து வைச்சிருக்கிறார். இது நிச்சயமா என்னோடு வாசகர்களின்ர அல்லது விருந்தினர்களின்ர எண்ணிக்கையை கூட்டும் என்பது ஒருபக்கம் இருக்க நானும் ஏதோ எழுதிறன் எண்டு இரண்டு மூன்று பேராவது நினைக்கிறார்கள் எண்டு ஒரு சந்தோசம்.

மலைநாடானுடன் எனது பழக்கம் நிச்சயமாக மண்ணிலிருந்தே உருவானது என நினைக்கின்றேன். ஏனென்றால் எத்தனை பதிவுகள் இருந்தாலும் நான் முதலில் ஈழத்தவர்களின் பதிவு என்றால் உடன் சென்று வாசிப்பது வழக்கம். இதற்காக நான் யாரையும் வெறுக்கின்றேன் என்று அர்த்தமல்ல. அப்படி வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட நான் இருப்பதில்லை. இருந்தாலும் தமிழ்மணத்தின் முகப்பில் அந்த பெயர்களை கண்டவுடன் எனது விரல் தானாகவே அந்த தொடுப்புகளை சொடுக்கிவிடும். அப்படித்தான் மலைநாடானின் பக்கங்கள் எனக்கு தெரிய வந்தது, அவருக்கும் அவவாறு இருக்கக்கூடும். அதன்பின் ஜிமெயிலின் அரட்டை மூலம் சிலதடைவைகள் சுகம் விசாரித்திருக்கின்றோம். யாழ்ப்பாண செய்திகள் பரிமாறியிருக்கின்றோம். ஆனால் மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை. இப்படியான பழக்கம் மலைநாடானுடன் மட்டுமல்ல வேறு பல ஈழத்து பதிவர்களுடன்தான்.

சரி அப்பிடியே மலைநாடானின் அந்த நிகழ்ச்சியை கேட்க இங்கு சொடுக்குங்கள்.

14 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள் பகீ.

கூகுள் தன் விருப்பப்பக்கத்தில் அழகழகாய் தோற்றக்கருக்கள் (themes) வந்திருக்கு. பார்த்தீங்களா? கூகுளின் அதிகாரப்பூர்வத் தமிழ் செய்தியாளர் :) என்ற முறையில் நீங்களே அத பதிவா போட்டிரலாம்

உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு, தொடர்ந்தும் எழுதுங்கள்

பகீ!
உங்களைப் போன்ற திறமைமிக்க;அதுவும் மிக இக்கட்டான சூழலில் அதை வெளிப்படுத்துவோரை ; வெளிக் கொணர்வதுதான் மிக நன்று; அதை மலை நாடர் நல்லபடி செய்துள்ளார்.

உங்களுக்கு வாழ்த்தும், மலைநாடனுக்கு நன்றிகளும்...!!!

ரவிசங்கர் வாங்க. அதிகாரபூர்வ எழுத்தாளரா??? அட இது நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் அதைப்பயன்படுத்திறது இல்லை. நீங்க சொன்னாப்பிறகுதான் இப்ப போய்ப்பாத்திருக்கிறன். இனி பதிவு போட வேண்டியதுதான்.

கானா பிரபா நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

யோகன் அண்ணா, உங்கள் பின்னூட்டத்தை நிச்சயமாக எதிர்பார்த்தேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

செந்தழல் ரவி வாங்க. உங்க வாழத்துக்கு நன்றி. அதுசரி உங்களை யார் கூகிள் வேலைக்கு கூப்பிட்டிருக்கிறதை பதிவா போட சொன்னது?? நான்தான் உத்தியோக பூர்வ அறிவிப்பாளர் தெரியாதா?? வேணுமெண்டா ரவிசங்கரை கேட்டு பாருங்க... சும்மாதான் சொன்னேன் கோவிச்சுக்காதீங்க

உங்களைப் பற்றிய நிகழ்ச்சி கேட்டேன். மொழி புரியாததால் மொழி பெயர்த்து கேட்டேன். வாழ்த்துக்கள்.

வணக்கம் பகீ... வாழ்த்துக்கள்... இந்த சிரமத்தில் மத்தியிலும் யாழிலிருந்து பதியும் ஒரே வலை பதிவர் என்ற சிறப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் சிறப்பை மேலும் வெளிச்சம் போட்டு காட்டிய மலைநாடருக்கும் நன்றிகள்.

பகீ உங்கள் வலைப்பதிவை பற்றி மலைநாடானின் பதிவு மூலமாக தான் அறிந்து கொண்டேன். இக்கட்டான சூழலில் இருந்து வலைப்பதியும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

//மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை//

பகி!

எல்லோர்க்கும் தன் ஊரவன் என்கின்ற ஒரு நேசம் இருப்பது இயல்பே. ஆனால் இந்நிகழ்ச்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உங்களது வயதும், திறமையுமே. உங்களுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரவிசங்கருக்கும் இது பொருந்தும். உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஏறக்குறைய என் மகனின் வயதை ஒத்தவர்கள். இளைய தலைமுறையோடு எப்போதும் எனக்கிருக்கும் நேசம்தான் இதற்கான அடிப்படை. உங்களுடனாவது இணைய பரையாடல் வழி அறிமுகம் இருந்தது. ஆனால் ரவிசங்கருடன் அறிமுகத்துகுப் பின்னரே மின்மடலில் தொடர்புகொண்டேன். அதுபோன்று செந்தழல் ரவி, என்றென்றும் அன்புடன் பாலா, திரு ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பதிவு போட்டிருந்த போதும் கூட, திருவைத் தவிர மற்ற இருவருடனும் இதவரையில் எனக்கு மின்மடல் தொடர்பு கூட இல்லை. ஆனாலும் அவர்களின் பணிச்சிறப்பே பாராட்டத் தூண்டியது.
இறுதியாக நீங்கள் குறிப்பிட்டது போன்று உங்களடனான தொடர்பு நீண்டநாள் நெருக்கத்தை என்னுள்ளும், ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

உங்களைப்பற்றிய அறிமுகம், வானொலியில் மட்டுமல்லாது, இந்த ஒரு வாரகாலமும், என் இணையத்தளத்திலும் இருக்கும்,அதுபோல் இணைவில் எனும் இணைப்புப் பட்டியலில், உங்கள் தளத்துக்கான தொடர்பு தொடர்ந்திருக்கும். இது அறிமுகம் செய்யப்படும் எல்லா நண்பர்களுக்கும் பொருந்தும்.
நன்றி.
இணையத்தள முகவரி.
www.mnnpages.ch.vu

வணக்கம் பகி.
யாழ்ப்பாணத்தில் இருந்து பதியும் உங்களின் பதிவினை அடிக்கடி பார்ப்பேன்.இன்றுதான் பின்னுட்டம்
இடுகிறேன் என்ருநினைக்கிறேன்.உங்களைப்போல
தான் ஈழத்தவரின் பதிவுகளை அடிக்கடி
பார்ர்ப்பேன்.

இது உங்கள் ட்திறமைக்கான பரிசு.
தொடர்ந்து எழுத்துங்கள்.

வாங்க முதலாளி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

வாங்க சின்னக்குட்டி அண்ணை (அண்ணைதானே???). உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

வாங்க வி.ஜே. சந்திரன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

மலைநாடான் அண்ணா மிக்க நன்றிகள். ஊரவன் என்கின்ற உணர்வு ஊரில் ஒன்றாக இருக்கும் போது வருவதைவிட எங்கெங்கோ இருக்கும் போது அடி மனதில் இருந்து எழுகின்றது

மீண்டும் ஒருமுறை நன்றிகள்


பின்னூட்டம் ஒன்றை இட






உலகின் மிகச்சிறிய flash memory
உலகின் மிகச்சிறிய flash memory இனை Kingmax நிறுவனம் kingmax's USB 2.0 super stick எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த மிகச்சிறிய flash memory ஆக ஒரு கிராம் நிறையினையே கொண்டது.



இதன் நீள அகல உயரம் முறையே 34- x 12.4- x 2.2-mm. இது windows vista மற்றும் OS X இரண்டிற்கும் மிகுந்த ஒத்திசைவை காட்டக்கூடியிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 512MB(19$), 1GB(29$), 2GB(39$), 4GB(55$) ஆகிய கொள்ளவுகளை உடைய பதிப்புகளாக வெளிவிடப்பட்டுள்ளது.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






கூகிள் கைப்பேசி
கூகிள் நிறுவனத்தின் புதிய பொருளாக வெளிவர இருப்பது Google phone. இதைப்பற்றிய பல்வேறு கதைகள் இப்போது இணையத்தில் உலாவி வருகின்றன. கடைசியாக கூகிள் கைப்பேசியின் படம் கூட வெளிவந்து விட்டது நீங்களும் தான் பாருங்களேன்.


4 பின்னூட்டங்கள்:
இலங்கையின் வடபகுதிக்கான கூகுள் பிரதிநிதியாக உங்களை நியமிப்பது குறித்து கூகுள் ஆராயுதாம்:))) உந்த செய்தியளை எங்கையிருந்து பிடிக்கிறியள்..?

குருவே நீங்க சொன்னா சரிதான்.
இணையத்தை சுத்தி வரேக்க அம்பிடிற செய்திகள்தான் சயந்தன் அண்ணா.

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

ஐஃபோன் அலை ஓஞ்சுது. இப்ப இதா! :))

கூகிள் தன்னோடய தற்போதய திட்டத்தில இது இல்ல எண்டு அறிவிச்சிருக்கு பாப்பம் என்ன நடக்குதெண்டு


பின்னூட்டம் ஒன்றை இட






Picasa Web Albums : மேம்படுத்தப்பட்ட வசதிகள்
கூகிளின் Picasa Web Albums இப்போது பல முன்னேற்றகரமான வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு பாவனைக்கு வந்துள்ளது. இதன் முக்கிய மேம்பாடுகளை கீழே பார்ப்போம்.


இவ்வளவு காலமும் 250 Mb ஆக இருந்த இதன் கொள்ளளவு இப்போது 1Gb ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.



இப்பொழுது உங்களால் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களுள் சிறந்த ஒரு தேடுகையை மேற்கொள்ளக்கூடியதாக இதன் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது. கீழே ஒரு சிறிய தேடலை பாருங்கள்.



உங்களின் பதிவுகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களையும் இப்போது நீங்கள் Picasa Web Albums இன் உங்கள் கணக்கில் காணலாம். இந்த Album "B" என்ற புளொக்கரின் symbol இனால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.



உங்கள் பகிரப்பட்ட புகைப்படங்களுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சலிலேயே பெறும் வசதி.

இதனை விட மேலும் பல சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றியும் அறிந்து கொள்ள உங்கள் Web albums இற்கு சென்று பாருங்கள்.

4 பின்னூட்டங்கள்:
பகீ!
மாசிலா என்பவர் அவர் படங்கள் பதிவில் இதன் உதவியுடன் தான் போட்டிருந்தார். நன்றாக இருந்தது.
விபரமாக இனித்தான் பார்க்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி

நானும் இது பற்றி ஒரு பதிவு இட்டிருக்கிறேன் அது வேறு ஒர அல்பம்

அடடே, என்னைப்பற்றி பேச்சு நடக்கிறதே! பல்லி சொன்னது.

ஆம் நண்பரே. பிகாசா ஒரு அருமையான சேவை. அனைவரும் இதை உபயோகித்து பயண்பெற ஊக்குவிக்கிறேன்.

என் படங்களை பார்க்க இங்கே
http://picasaweb.google.com/Massila.Maximilian?pli=1 செல்லவும்.

நன்றி.

யோகன் அண்ணா வாங்க. இது நாங்களா விரும்பி அங்க கொண்டுபோய் வைக்கிறதில்லை. கூகிள் தானே கொண்டுபோய் வைக்குது.

தமிழ்பித்தன் மாசிலா வாங்க. உங்க பின்னூட்டங்களுக்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




மனைவிமார்கள்
இந்த படங்கள் நீண்ட காலமாவே என்னுடைய கணனியில் இருக்கின்ற படங்கள் வித்தியாசமான படங்கள், புகைப்படங்கள் கிடைச்சா சேர்த்துவைக்கிறது என்னுடைய பழக்கம். இப்ப எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இது உண்மையா இல்லையா எண்டு? நீங்கதான் பாத்திட்டு என்ர சந்தேகத்தை தீர்த்து வைக்கோணும் பெரிய மனசு பண்ணி.




9 பின்னூட்டங்கள்:
ஒரு விசயத்தில் ஆறுதல்,

எதிர்காலத்தில் திருமணம் நடப்பதாக காட்டி இருப்பது !
:)

wife of future படத்தில உள்ளமாதிரி எதிர்காலத்தில வராது. மாறாக கல்யாணம் கட்டாமல்த் தான் இருப்பார்கள் என் நான் நினைக்கிறேன்
நல்ல படங்கள்

மேலுள்ள நண்பர்கள் விரும்பிற மாதிரி -எதிர்காலத்தில இருவர் கலியாணங் கட்டாம இருந்தாலும்- வீட்டில இதுதான் ஊரோடி நடக்கும் :-)

இது போன்று நடக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பகீ!
இதில் எது பொருந்துமென உங்கள்;கலியாணத்தின் பின் கூறுங்கள்.

don't afraid!
all r not like that.
[yanaiku oru kalam vanda ponaikum oru kalam varum]

கோவி கண்ணன் வாங்க. இப்படி கூட யோசிக்கலாம் என்ன??

செல்லி நீங்க சொன்னா சரி. இந்த ஆம்பிளைகளுக்கு இதைப்பற்றி என்ன தெரியும் (அது சரி நீ்ங்க பெண்தானே??)

வாங்க பொடிச்சி. என்ன இப்பிடி சொல்லி ஒரேயடியா பயமுறுத்திறீங்க. நீங்களும் பொம்பிளைதானே??? அப்ப சரியாத்தான் இருக்கும்.

உமாபதி என்ன இப்படி சொல்லீட்டிங்க. அப்ப உங்க வீட்டில இரண்டாவது படத்தில இருக்கிற மாதிரிதானா இப்ப நடக்குது??

யோகன் அண்ணா அனுபவப்பட்டு சொன்னா உதவியா இருக்கும் எண்டுதானே கேக்கிறது. சரி பரவாயில்லை. ஆனா அதுக்கு எட்டு பத்து வருசமாகுமே...

வாங்க பிரியா. நீங்க சொல்லுறதுதான் ஏதோ ஆறுதாலா இருக்கு


பின்னூட்டம் ஒன்றை இட






Microsoft குளிர்பானம்
நீங்கள் எல்லோரும் Pepsi, Fanta போன்ற பல்வேறு குளிர்பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீரகள். குடித்து ரசித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் Microsoft குளிர்பானம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.



Microsoft நிறுவனத்தின் conference center இன் Lobby இல் இந்த MS Soda இலவசமாக வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அங்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தால் ஒன்றை எடுத்து பருகி பாருங்கள்

5 பின்னூட்டங்கள்:
இது இனிக்குமா? புளிக்குமா? இல்ல soft ? இல்ல micro-softa?
பகிடிக்கி எழுதினேன், கோவிச்சுக்காதீங்க.

எங்க நாட்டுக்கு வந்து ஒரு கப் தேத்தண்ணி குடிச்சுப் பாருங்களேன்.
http://pirakeshpathi.blogspot.com/
நன்றி

பகீ!
இப்போ தான் கேள்விப்படுகிறேன். அவங்களட்ட இருக்கிற காசுக்கு எதுவும் செய்யலாம்.

வாங்க செல்லி உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க பகிடிக்கு கேட்டாலும் சொல்லுறேன்.

இதில Natural எண்டு எழுதியிருக்கிறத கவனிச்சியள் தானே. இது உண்மையில தேசிக்காய் கலந்த பச்சத்தண்ணிதான். கொஞ்சம் சுத்திகரிப்பும் செய்தது.

யோகன் அண்ணா வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.

உவங்கள் எல்லாத்திலையும் கை வைக்கிறான்கள்

கானா பிரபா வாங்க. உங்க வருகைக்கு நன்றி.

இது விக்கிறதுக்கான குளிர்பானம் இல்லை. அவங்களிட்ட வேலை செய்யிறவங்களுக்கு.


பின்னூட்டம் ஒன்றை இட






Google Desktop 5.0
கூகிள் நிறுவனம் தன்னுடைய மிகப்பிந்தியதும் மிகச்சிறப்பு வாயந்ததுமான Google Desktop 5.0 இற்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இந்த புதிய பதிப்பில் புதிய வசதிகள் என்பதனை விட பழைய வசதிகளே மிகச்சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அழகிய வசதிகள் கூடிய கரைப்பட்டை (sidebar), பாதுகாப்பு நிறைந்த தேடுபொறி முடிவுகள், சிறந்த முன்னோட்டப்பெட்டி என்பன இவற்றில் சிலவாகும்.



கூகிள் சொல்கின்றது..
"The sidebar has a completely new look and feel. It samples the color of your wallpaper and fades in the sampled color so that it fits seamlessly onto your desktop. Some of our gadgets have been redesigned so that they are easy to tell apart, easy to read, and easy on the eyes. More differentiated gadgets allow for faster scanning of information through the sidebar. And we've created a new dialog for adding gadgets so it's easier and faster than ever to find the right gadgets for you."

5 பின்னூட்டங்கள்:
தொடர்த்து கூகுள் செய்திகளை தருவதற்கு கூகுள் ரசிகனின் :) நன்றி. முன்னர் desktop போட்டு பயன்படுத்தாம நீக்கிட்டேன்..இப்ப நீங்க போட்டிருந்த படத்த போட்டு திரும்ப பதிவிறக்கிட்டேன்..நல்லா இருக்கு..நன்றி

வாங்க ரவிசங்கர். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்கள் செய்திக்கு மிக்க நன்றி.

நல்ல தகவல்
நன்றி

வாங்க மாசிலா, செல்லி. உங்கள் வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






கூகிள் நிறுவனங்கள்
எம் எல்லோருக்கும் கூகிளைப்பற்றியும் அதன் நிறுவனத்தைப்பற்றியும் அனேகமாக தெரியும். ஆனால் கூகிள் குழுமத்தின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களையும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. தெரிந்து கொள்ள விரும்பின் கீழே பாருங்கள்.

  1. @Last Software, Inc.
  2. Android, Inc.
  3. Applied Semantics, Inc.
  4. dMarc Broadcasting, Inc.
  5. Ganji Inc.
  6. Google International LLC
  7. Google LLC
  8. Google Payment Corp.
  9. Ignite Logic, Inc.
  10. JASS Inc.
  11. JG Productions Inc.
  12. JotSpot Inc.
  13. Kaltix Corporation
  14. Liquid Acquisition Corp. 2
  15. Neotonic Software Corporation
  16. Nevengineering, Inc.
  17. Orkut.com, LLC
  18. Picasa LLC
  19. PiFidelity Holding Corporation
  20. PiFidelity LLC
  21. Scott Concepts, LLC
  22. Scott Studios, LLC
  23. SkillSet LLC
  24. The Salinger Group LLC
  25. Transformic, Inc.
  26. Upstartle, LLC
  27. Urchin Software Corporation
  28. Where2 LLC
  29. YouTube, LLC
  30. ZipDash, Inc.
  31. Aegino Limited
  32. @Last Software, Ltd.
  33. At Last Software GmbH
  34. allPAY GmbH
  35. bruNET GmbH
  36. bruNET Holding AG
  37. bruNET Schweiz GmbH
  38. Endoxon Ltd.
  39. Endoxon (India) Private Ltd.
  40. Endoxon Prepress AG
  41. Endoxon (Deutchland) GmbH
  42. Google (Hong Kong) Limited
  43. Google Advertising and Marketing Limited
  44. Google Akwan Internet Ltda.
  45. Google Argentina S.R.L.
  46. Google Australia Pty Ltd.
  47. Google Belgium NV
  48. Google Bermuda Limited
  49. Google Bermuda Unlimited
  50. Google Brasil Internet Ltda.
  51. Google Canada Corporation
  52. Google Chile Limitada
  53. Google Czech Republic s.r.o.
  54. Google Denmark ApS
  55. Google Finland OY
  56. Google France SarL
  57. Google Information Technology Services Limited Liability Company
  58. Google Germany GmbH
  59. Google India Private Limited
  60. Google International GmbH
  61. Google Ireland Holdings
  62. Google Ireland Limited
  63. Google Israel Ltd
  64. Google Italy s.r.l.
  65. Google Japan Inc.
  66. Google Korea, LLC.
  67. Google Limited Liability Company - Google OOO
  68. Google Mexico S. de R.L. de C.V.
  69. Google Netherlands B.V.
  70. Google Netherlands Holdings B.V.
  71. Google New Zealand Ltd.
  72. Google Norway AS
  73. Google Payment Ltd.
  74. Google Payment Hong Kong Limited
  75. Google Payment Singapore Pte. Ltd.
  76. Google Poland Sp. z o.o.
  77. Google Singapore Pte. Ltd.
  78. Google South Africa (Proprietary) Limited
  79. Google Spain, S.L.
  80. Google Sweden AB
  81. Google Switzerland GmbH
  82. Google UK Limited
  83. Neven Vision KK
  84. Neven Vision Germany GmbH
  85. Leonberger Holdings B.V.
  86. Reqwireless Inc.
  87. Skydocks GmbH

2 பின்னூட்டங்கள்:
do you have such a list for yahoo ?


if yes can you provide that please

thnx

வாங்க அனானி

நிச்சயமா அதுக்கும் ஒரு பதிவு போடுறன் விரைவில


பின்னூட்டம் ஒன்றை இட






கூகிள் நோட்புக் மேலதிக வசதிகள்
கூகிள் லாப்பிலேயே நீண்ட காலமாக இருக்கும் கூகிள் நோட்புக் மேலும் ஒரு வசதியினை சேர்த்துள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் நோட்புக்கில் இருக்கும் ஒரு விடயத்தினை நேரடியாக கூகிளின் spreadsheet மற்றும் docs இற்கு நேரடியாக export பண்ண முடியும்.


0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






முத்தம்
நாங்கள் எல்லோருமே அனேகமாக முத்தமிடுவதை பார்த்தவர்கள் தான் (குறைந்தது ஆங்கில படங்ளிலாவது). அதனால் முத்தமிடும் போது உதடுகள் எவ்வாறு இயங்கும் என்று தெரியும். ஆனால் எலும்புகள்???

கீழே பாருங்கள்


6 பின்னூட்டங்கள்:
பகீ!
இதழுடன் இதழ் இடும் முத்தத்துக்கு தான் இப்படி இருக்கும்; பிரன்ஸ் முத்தத்துக்கு இப்படி இருக்காது.
அது தாய்க்கிளி; கிளிக்குஞ்சுக்கு உணவூட்டுவது போல் ;வாய்கள் திறந்தே இருக்கும். இப்படிச் சாத்தியமில்லை. இது மிகச் சைவ முத்தம்; கமல் இதை விட பெரிய அசைவ முத்தமெல்லம் கொடுத்துள்ளார். (கமல் படங்கள் பார்க்கவும்- அபிராமி அபிராமி அபிராமி)

Very very informative :)

கோவி மணியண்ணா!!
தமிழ்மணத்தில் நடக்கும் கும்மியடிப்புடன் ஒப்பிடும் போது ;இந்தப் பதிவோ என் பின்னூட்டமோ அப்படி ஒன்றும்; தகவல் குறைந்ததல்ல!!
முயற்சித்துப் பாருங்கள் நாங்கள் தவறான தகவலா?? தந்திருக்கிறோமேன!!!

யோகன்
நல்லா மணியை அடிச்சிட்டியள்.
"அப்பிடிப் போர்றா சுப்பிர மணியெண்டானாம்" அற்புதம், பிறவி!

எனக்கு தெரிந்து இது ரொம்ப மென்மையான முத்தம்.நான் பார்த்த சில பிரான்ஸ் படங்களில் கொடுக்கப் படும் வேக வேகமான முத்தங்களில் தசை நார்களும் எலும்புகளும் என்னமாய் மாறிக்கொண்டே இருக்கும்.

என்னம்மயெலெல்லாம் நம்ம பசங்க யோசிக்கிறய்ங்கப்பா

யோகன் அண்ணா, வாங்க கனகாலமாச்சு தமிழ் படங்கள் பாத்து. நீங்கள் சொல்லீட்டியள் பாப்பம் எனி நேரம் கிடைச்சா எடுத்து பாக்கிறன்.

கோவி மணியண்ணா, குறையா சொன்னியளோ நிறையாச்சொன்னியளோ தெரியேல்லை. ஆனா இதுகளும் தெரிஞ்சிருக்கத்தானே வேணும் என்னை மாதிரி இளம் பெடியளுக்கு என்ன???

கந்தல் இது சரியில்லை இரண்டு பேர் கதைக்கேக்க குறுக்க வந்து என்னை பிரச்சனையில மாட்டிறது.... உங்க பின்னூட்டத்திற்கு நன்றி..

சோமியண்ணை வாங்கோ.. நாங்கெல்லாம் எப்ப பிரான்ஸ் படம் பாக்கிறது?? எப்ப அதுகளை பற்றி கதைக்கிறது??
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
Google docs updated
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads

தொடுப்புகள்:
- என் பார்வையில்
- சாரல்







Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution