Adobe Flash CS3 Professional
நேற்று அடொப் நிறுவனம் தனது flash CS3 professional மென்பொருள் வெளியீடு சம்பந்தமான உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. flash என்றால் என்ன அதனை பயன்டுத்தி என்ன செய்ய முடியும் என்ற விடயங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இங்கு இந்த CS 3 இல் வரப்போகும் முக்கிய வசதிகளை மட்டும் குறிப்பிடுகின்றேன்.Adobe Photoshop மற்றும் Illustrator உடன் மிகுந்த ஒத்திசைவு.
இதன் மூலம் இம்மென்பொருள்களில் தயாரிக்கபடும் வெளியீடுகளை (psd,ai) நேரடியாக flash இனுள் உள்ளீடு செய்துகொண்டு பயன்படுத்த முடியும். உள்ளீடு செய்யும்போது அவற்றின் layer மற்றும் structure என்பன மாற்றமடையாமல் உள்ளீடு செய்யப்படுவதால் இலகுவாக எமக்கு தேவையான விதத்தில் அவற்றை கையாள முடியும்.
Convert animation to AS 3.0
நாங்கள் சாதாரணமாக செய்கின்ற animation களை இலகுவாக ActionScript 3.0 நிரல்களாக எழுதி பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் ஒரே அனிமேசனை பல வேறு வேறு object களுக்கு கொடுக்க முடியும்.
Action Script 3.0
இவ்வளவு காலமும் Action Script 2.0 ஆக இருந்த இது இப்போது மிகவும் மேம்படுத்தப்பட்டு ActionScript 3.0 ஆக இந்த பதிப்பில் வெளிவந்துள்ளது. (உங்களுக்கு ActionScript 1.0 மற்றும் Action Script 2.0 இற்கு இடையில் ஏற்பட்ட மாற்றம் மறந்திருக்காது என்று நினைக்கின்றேன்)
ActionScript debugger
இந்த புதிய வசதி இலகுவாக எங்கள் நிரல்களை எழுத உதவிடும்.
புதிய வரையும் கருவிகள்
அடொப் நிறுவனத்துடன் இணைந்தவுடனேயே எதிர்பார்க்கப்பட்ட வசதி இது. இதன்மூலம் ஒரு சிறந்த Graphic editor இல் வேலை செய்வது போல இதிலும் வேலை செய்ய முடியும்.
மேம்படுத்தப்பட்ட AS3 components
மிக இலகுவாக மாற்றியமைக்க கூடியவையும் அளவு குறைந்தனவுமான component கள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
Advance QuickTime export
இதன்மூலம் எமது swf கோப்பு ஒன்றினை இலகுவாக மிகுந்த வசதிகளுடன் QuickTime கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதைவிட அடொப் நிறுவனம் தனது முந்தைய மென்பொருள்களில் பயன்படுத்திய GUI இனையே இப்போது flash மென்பொருளிற்கும் பயன்படுத்தியுள்ளது. இது பலவழிகளில் இலகுத்தன்மையை கொண்டு வந்துள்ளது.
இதைவிட மேலும் பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.