தமிழையும் பாவிக்கலாம்
சில நாட்களுக்கு முன்னர் நான் அடொப் அப்பலோ பற்றி எழுதிய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டமாக அடொப் flex பற்றியும் குறிப்பிட்டு அதில் தமிழினை பயன்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நான் நீண்ட நாட்களாகவே Adobe Flex இனை பயன்படுத்தி வந்தாலும் தமிழை (Unicode) ஒருபோதும் பயன்படுத்தி பார்க்காமையினால் என்னால் எக்கருத்தும் தெரிவிகக இயலவில்லை. ஆனால் தமிழை பயன்டுத்துவதில் (அல்லது Unicode இல் உள்ளடங்கும் எந்த ஒரு மொழியினையும் பயன்படுத்துவதில்) எனக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை. திரைவெட்டுகளை பாருங்கள்.
அனேகமாக நண்பரின் பிரச்சனை இதுவாக தான் இருந்திருக்கும். ஆனால் நண்பர் மேலும் விளக்கமாக பின்னூட்டமொன்றினை இட்டால் என்னால் முடிந்தளவு பதிலளிக்க தயாராயுள்ளேன். (நண்பருக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும்தான்....)