Flash - ஒரு வரலாறு
இன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது?

Jonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த மென்பொருளின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அப்பொழுது அவரிடம் இருந்த கணனி Apple II. பின்னர் Jonathan மென்பொருள்களை எழுதுவதன் மூலம் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அறிந்து கொண்டார். அவர் தனக்கு தேவையான மென்பொருளை எழுதிக்கொண்டாலும் அதற்கு அவரது கணனியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

"If you ever think Flash is difficult to use, you should try drawing with a joystick on an Apple II
before the concept of undo was invented. That will test your patience."

--Jonathan Gay, Creator of Flash


பின்னர் அவர் Pascal மொழியினை கற்று அவரது முதலாவது Graphic editor (SuperPaint) இனை உருவாக்கினார். இந்த மென்பொருள் Silicon Beach Software எனும் நிறுவனம் மூலம் மக்களின் பாவனைக்கு வந்தது. அதன் பின்னர் SuperPaint இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான SuperPaint II இவரால் உருவாக்கப்பட்டு பாவனைக்கு வந்தது. இதன் பின்னர் Silicon Beach Software நிறுவனத்தில் பூரணமாக வேலைக்கமர்ந்த இவர் C++ மொழியில் Intellidraw என்கின்ற மென்பொருளை எழுதி வெளியிட்டார். இது அப்போது சந்தையில் இருந்த Adobe Illustrator மற்றும் Aldus Freehand (இது பின்னர் macromedia நிறுவனத்தால் வாங்கபபட்டு விட்டது.) இரண்டையும் பின்தள்ளி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.



இதன்பின்னர் இணையத்தின் வளர்ச்சியை தொடர்ந்து படிப்படியாக வளர்ந்திருந்த இந்த மென்பொருள் CelAnimator என்ற பெயருடன் இணையத்தில் இயங்கக்கூடிய வகையில் வெளிவந்தது. பின்னர் இது சிறிய மேம்பாடுகளோடு FutureSplash Animator என பெயர் மாற்றம் பெற்றது. இது வெளிவந்த நேரத்தில் சந்தைவாய்ப்பை பெரிதளவில் கொண்டிருக்கவில்லையாயினும் மிகவிரைவில் சந்தையில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தது.




பின்னர் 1996 திசம்பரில் Macromedia நிறுவனம் FutureSplash Animator இனை வாங்கி Macromedia Flash 1.0 என்ற பெயருடன் வெளியிட்டது.



இப்போது இது Macromedia Flash 8.0 எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அத்தோடு கடந்த வருடம் இந்த மென்பொருளையும் Macromedia நிறுவனத்தையும் Adobe நிறுவனம் உள்வாங்கி மேலும் புதிய வசதிகளையும் இணைத்து விரைவில் Adobe Flash வெளிவர இருக்கின்றது.



சரி இப்போது Jonathan Gay எங்கே? அவர் இப்போது Adobe நிறுவனத்தில் Flahs இற்கான Technology Vice President ஆக உள்ளார்.

3 பின்னூட்டங்கள்:
Wondered abt flash from my college days. Today I'm able to read the history.

Informative post. Keep up the good work.

சுவையான வரலாறு
தகவலுக்கு நன்றி !

என்னோட நண்பன் வாங்க. எப்பயுமே flash எண்டா ஒரு தனி சுவைதான்...

அன்பே சிவம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..


பின்னூட்டம் ஒன்றை இட






உலகின் மிக அழகிய Hub
உலகின் மிக அழகிய Hub ஒன்றினை பிருத்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இதில் நான்கு USP ports, 2 firewire port, 1 சிறிய காற்றாடி மற்றும் ஒரு சிறிய மின்விளக்கும் உண்டு.


0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






Google cheat sheet
முதல் முறையாக கூகிளிற்கென்று ஒரு Cheat sheet வெளியிடப்பட்டுள்ளமையினை இப்பொழுதுதான் நான் பார்க்கின்றேன். அனேகமாக கூகிள் நிறுவனத்தின் சேவைகள் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள இது உங்களுக்கு உதவும். இதில் கூகிளின் சேவைகள் பற்றி மட்டுமல்லாது அதன் இயக்கங்கள், அதன் முகவரிகள் மற்றும் அதன் உத்தியோகபூர்வ பதிவுகள் அனைத்தும் இரண்டு பக்கத்தினுள் இடம்பெற்றிருக்கின்றன.








இது கூகிள் நிறுவனத்தின் வெளியீடோ அல்லது அவர்களது உத்தியோகபூர்வமானதோ அல்ல.

3 பின்னூட்டங்கள்:
தகவலுக்கு நன்றி, பகீ

I am the author of this content, may you please provide a link to http://www.adelaider.com/google/

வாங்க ரவிசங்கர் உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

அனானி மன்னிக்கணும் தொடுப்பு வழங்காததற்கு. தொடுப்பிற்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






உலகின் மிகப்பெரிய வண்டு
உலகிலேயே மிகப்பெரிய வண்டு Goliathus cacicus எனப்படும் வண்டினம்தான். இது ஐவரி கோஸ்ரை (Ivory coast) இனை தாயகமாக கொண்டது. இதில் ஆண் வண்டுகள் 5 தொடக்கம் 10 சென்ரிமீற்றர் வரை நீளமானவை. பெண்வண்டுகள் பொதுவாக 7 சென்ரி மீற்றர் அளவிலானவை.






இப்படங்களில் உள்ளவை பெண் வண்டுகள்.

3 பின்னூட்டங்கள்:
பகீ!
இவை மிகப் பெரியவைதான்! இந்த நாடுகளில் இருக்கவாய்ப்பு உண்டு.
படங்களுக்கு நன்றி!

பாக்கவே பயமா இருக்கு.. அப்பு.

யோகன் அண்ணா, இவன் வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




அதிசய புகைப்படம்
முள்ளம் பன்றியின் முட்கள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுதுதான் ஒரு முள்ளம் பன்றியுடன் சண்டை செய்து விட்டு வந்திருக்கும் இந்த நாயின் புகைப்படங்களை பாருங்கள்.







11 பின்னூட்டங்கள்:
உடம்பெல்லாம் சிலிர்த்து போய்விட்டது அன்பரே!
பயங்கரம்!!!

படைப்பவன் சிறு குழப்பதில் படைத்த
படைப்போ? அதை அன்போடு வள்ர்ப்பவர் படைத்தவனுக்கும்
மேல்தான்.
நானானி

பகீ!
இப்படம் சற்றுக் குழப்பமாக உள்ளது. முள்ளம் பன்றியின் உடலில் உள்ள முள்ளுகளை அவை எதிரியைக் கண்டதும் உதறும்;விறைப்பாகவும் வைத்திருக்கும்; அப்படி உதறும் போது அத்தனை முள்ளும் நாய்த் தோலில் ஏறுமென்றில்லை. அதுவும் குறிப்பாக நாயின் முகம் கழுத்து மாத்திரம்.நான் தொலைக்காட்சியில் பார்த்த விவரணச் சித்திரத்தில்; அதை எதிர் கொள்ளும் விலங்கு ,சில முள்ளுப் பட்டதும்.; விலகிக் கொள்ளும்.
எனினும் இது பெரும் தாக்கம் தான்!

plz delete that pic..

அடிபட்டு வந்த நாய்க்கு முதலுதவி செய்யாம படமெடுத்தாரா அன்போடு வளர்த்தவர்?

மாசிலா உண்மையிலேயே பயங்கரமாக இருந்தாதால் தான் பதிவிலிட்டேன்.

யோகன் அண்ணா நானும் அவ்வாறுதான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்த்த பின் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சிநேகிதி நல்ல கேள்வி எனக்கும் பதில் தெரியேல்ல.

அனானிகள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

Ouch that must hurt..நாய் பாவம்

முள் சிலிர்க்க வைக்கிறது.அப்படியே அந்த முள் எப்படி,என்னதன்மை என்று விரிவாகச் சொல்லலாமே?

துயா, கண்மணி வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. முள்ளம்பன்றி முள்ளைப்பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. எங்காவது கண்டால் ஒரு பதிவு போடுகின்றேன்.

முள்ளம்பன்றியின் முள் நன்கு கூர்ப்பாக சீவிய பென்சில் போலிருக்கும்.அதைக்கொண்டு
கண்ணுக்கு மை எழுதுவதைக்கண்டிருக்கிறேன்
நானானி

வாங்க அனானி. அதுக்கெல்லாமா இது பயன்படுது???

ஆண்டவன் படைச்சது எதுக்கு?? நம்ம ஆளுங்க பாவிக்கிறது எதுக்கு?? எல்லாத்திலயும்தான்.

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி


பின்னூட்டம் ஒன்றை இட






ஐபோன் விளம்பரம்
இந்த ஐபோன் விளம்பரத்தை நீங்கள் ஒருகாலமும் பாத்திருக்க மாட்டியள். இப்பவெண்டாலும் பாருங்கோ..





2 பின்னூட்டங்கள்:
இவிங்களுமா..?
இனி கோர்ட்டு கேசு எல்லாம் முடிய
எப்ப வரும் iphone

ifone - iphone

சயந்தன் வாங்க. நீங்க கேட்டதும் தான் கேட்டீங்க. இண்டைக்குதான் இரண்டு பேரும் சமரசத்துக்கு வந்து அறிக்கையும் விட்டுட்டாங்கள்.

என்ன இருந்தாலும் முதலில iPhone செய்தது Cisco தானே


பின்னூட்டம் ஒன்றை இட




Flash பாவனையாளர்களுக்கு உதவி
Adobe Flash (முன்னர் Macromedia) மென்பொருள் இப்போது இணைய மற்றும் கைப்பேசி மென்பொருள்களை உருவாக்கும் ஒரு சாதனமாக வளர்ச்சியுற்றுள்ளமை அனைவரும் அறிந்தது. இந்த மென்பொருளின் வெளிவந்த இறுதிப்பதிப்பானது அதன் மொழியாக ActionScript 2.0 இனைக்கொண்டுள்ளமையும் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது Adobe Flash Player 9.0 உடன் ActionScript 3.0 வெளியிடப்பட்டு விட்டாலும் இன்னமும் அதிகளவான பாவனையில் உள்ளது AS 2.0 தான். (AS 3.0 இற்கும் AS 2.0 இற்கும் பெரிதளவான வெளிப்படையான மாற்றங்கள் இல்லை).



இந்த மொழியில் வேலை செய்யும் போது இந்த Cheat Sheet எப்போதும் எனக்கு உதவுவதுண்டு. உங்களுக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கின்றேன். படத்தில் சொடுக்கி பூரணமான தாளினை பெற்றுக்கொள்ளுங்கள்.

2 பின்னூட்டங்கள்:
எங்கையப்பு கனகாலம் சிலமனில்லை?

என்ன இப்பிடி கேட்டிட்டியள் அண்ணை... யாழ்ப்பாணத்தில சில காலம் இணைய வசதிகள் வேலை செய்யேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதோ...


பின்னூட்டம் ஒன்றை இட






யாகூ pipes
யாகூ நிறுவனம் feeds களை ஒரு சாதாரண text கோப்பு போல பயன்படுத்தக்கூடிய Yahoo Pipes எனும் சேவையினை உருவாக்கி இருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் பல்வேறு feeds களை உள்ளீடாக கொடுத்து உங்களுக்கு தேவையான புதிய தரவுகளை பெறமுடியும். இது மிக அழகிய ஒரு visual programming environment இனை கொண்டுள்ளது.



உடனே போய் முயற்சித்து பாருங்கள்.

1 பின்னூட்டங்கள்:
வருகிற 2008 ஆம் ஆண்டு வெளிவரயிருக்கும் JSON (Javascript Object Notation) க்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிற இந்த யாகூ பைப்ஸ் இணையம் 3.0 க்கான (இது விஜய்டிவி மூன் இல்லீங்க) முன்னோடி என்று கணிக்கப்படுகிறது.


பின்னூட்டம் ஒன்றை இட




கூகிள் Spreadsheets புதிய வசதிகள்
கூகிள் தனது Spreadsheet இல் ஒவ்வொரு கோப்பிற்கும் நேரவலயத்தையும்(Timezone), Local settings இனையும் மாற்றுவதற்கு இப்போது வசதிகளை செய்துள்ளது.



நேரவலயத்தில் மாற்றத்தை செய்வதன் மூலம் நேரத்தை பயன்படுத்துகின்ற NOW(), TODAY() போன்ற function களிலும் Timestamps மற்றும் revision history dates போன்றவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

Local settings இல் மாற்றம் செய்வதன் மூலம் பணத்தின் குறியீடு மற்றும் எண்கள் பயன்படுத்தப்படும் முறை என்பவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

நீங்களும் முயற்சித்து பாரத்துவிட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கள். (Click on File ---> Settings)

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்
கூகிள், ஜிமெயிலின் இடைமுகத்தினை தமிழில் உருவாக்கி வரும் அதேவேளை அதிலுள்ள சொற்பிழை திருத்திக்குமான (Spell checker) அகராதியினையும் தமிழில் உருவாக்கி வருகின்றது. தமிழ் இடைமுகம் இன்னமும் பாவனைக்கு வராத போதிலும் சொற்பிழை திருத்தி இப்போதே பாவனைக்கு வந்து விட்டது. ஆனால் அது இப்போதும் தொடர்ந்து படியேற்றப்பட்டு வருவதால் அனேக தமிழ் சொற்களை பிழையெனவே காட்டுகின்றது.








அனேகமாக ஜிமெயிலின் அடுத்த பிறந்தநாளின் போது (01-April-2007) பூரணமான தமிழ் ஜிமெயிலினை எங்களால் பயன்படுத்த முடியும் என நினைக்கின்றேன்.

7 பின்னூட்டங்கள்:
நல்லா இருக்கே!தேவையான ஒன்று தான்.
சில சமயங்களில் "ர","ற"- போட்டுப்பார்க்கிறது.

நண்பா அருமையான தகவல்.. கோடி நன்றிகள்.

எப்படிங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க?
அருமையான தகவல்கள். தொடருங்கள்

பகீ, நல்ல செய்தி. இந்த சொற்திருத்தியை ஜிமெயிலே செய்கிறதா? இல்லை தன்னார்வல முயற்சியா? தொடுப்புகள் தர இயலுமா? அண்மையில், மயூரன் தன் பதிவில் இது போன்ற முயற்சிகள் வீண் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்தீர்களா?

http://mauran.blogspot.com

வடுவூர் குமார், இசாக் ராஜா, மயூரேசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ரவிசங்கர் நானும் முன்னரே மயூரனின் பதிவினை பார்ததேன். சொற்பிழை திருத்தி பயனற்றது என்கின்ற அவரது வாதத்தினை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சரியான பூரணமான அகராதியுடன் ஒப்பிட்டு பிழைதிருத்தும் போது சொற்பிழை ஏற்படாது என்பதுதான் உண்மை. மயூரன் தன் "ம்" இல் சொல்வது போல அன்னம் என்பதற்கு அண்ணம் என உள்ளிட்டால் பிழை காட்டாது என்பது உண்மைதான். ஆங்கிலத்தில் கூட என்பதற்கு என உள்ளிட்டால் பிழை காட்டாது. அதற்காக அதனை பயனற்றது என கூறிவிட முடியாது. பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சில எழுத்துப்பிழைகளை இலகுவாக கண்டறிய அவை உதவுகின்றன என்பதுதான் உண்மை. தமிழிலும் கூடத்தான்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பகீ!
அவர்களின் நல்ல முயற்சி! சரியான அகராதியைக் கையாண்டார்களானால் மிகப் பயனுள்ளதே!
நிச்சயம் வெகுவிரைவில் அமையும் தகவலுக்கு நன்றி!

நிச்சயமாக யோகன் அண்ணா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்
மாசி 2006 இல் கூகிள் நிறுவனம் இலகுவான, இணைய உலாவியினுள்ளேய
பயன்படுத்தக்கூடிய தனது Gmail chat இனை அறிமுகப்படுத்தியது. இப்போது 2007 மாசியில் யாகூ தனது அரட்டை மென்பொருளை Yahoo Mail Beta உடன் இணைத்திருக்கின்றது.




அனேகாமாக இன்னும் சில தினங்களில் இது அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வந்து விடும். இதன் மூலம் தனது அரட்டை மென்பொருளின் பயனாளர்களின் எண்ணிக்கையை (தற்போது 73 மில்லியன், யாகூ மின்னஞ்சல் 250 மில்லியன்) அதிகரிக்க முடியும் என யாகூ நம்புகின்றது.

அது சரி Yahoo Mail Beta என்றால் என்ன? யாகூ சொல்கின்றது
The Yahoo! Mail beta is a true Web 2.0 experience, including a sleek, easy-to-use interface with the speed and responsiveness of a desktop application. In addition to instant messaging, the Yahoo! Mail beta also features enhanced functionality such as drag and drop e-mail organization, message preview, an integrated calendar and an RSS reader.

8 பின்னூட்டங்கள்:
this is a test comment.

வணக்கம் பகீ, வாருங்க்கள் ... கன நாளைக்கு பின்னர்...செய்திக்கு நன்றி..:)

பகீ!
உங்கள் பதிவு இப்போ சரியாக வருகிறது. இந்த "அரட்டை" பொய் பிறக்குமிடம்;இங்கே நான் ஒரு தடவை போவேன்.பொய்க்குத்தான் மிக மரியாதை;அதைவிட "வியாதிக்காரரும்" அதிகம்; ஒரு தகவல் வேண்டிக் கேட்டேன்.எவருமே உதவவில்லை; வெறும் நேரவிரயமகப் பட்டது. விட்டுவிட்டேன்.
ஆனால் இளம் வயசுக் காரருக்கு உபயோகப்படும்.

இதை எப்படி activate செய்வது?

வாருங்கள் அனானி. இது இன்னமும் எல்லோருக்கும் பாவனைக்கு வரவில்லை. நான் நினைக்கிறேன் இன்னும் ஒரு கிழமைக்குள் உங்களால் இதனை பயன்படுத்த முடியும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

ஊரோடி பகீ

எல்லாருக்கும் உடனே activate பண்ணா என்ன? yahoo ஏன் இப்படி செய்கிறாய்?!

நன்றி நண்பா... கணித் தகவல் களை ஆர்வமாகப் படிப்பேன்.. :)

வாருங்கள் துயா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இப்போதுதான் யாழ்ப்பாணத்தில் மீளவும் இணையவசதிகள் சரிவந்துள்ளது.

யோகன் அண்ணா எனது எண்ணமும் அரட்டை மென்பொருள் என்பது நேரவிரயம் தான். ஆனால் அது மின்னஞ்சலுடனேயே இணைக்கப்பட்டு விட்டால் எமது முகவரிப்புத்தகத்தில் உள்ளவர்களுடன் மட்டும் அரட்டை அடிக்க உதவும். இது ஓரளவு பரவாயில்லை தானே. எப்படி இருந்தாலும் நான் மின்னஞ்சலிடும் எண்ணிக்கையை ஜிமெயிலின் சற் குறைத்துவிட்டது என்பதுதான் உண்மை.

மயூரேசன் வாருங்கள். உங்கள் வருகைக்கும் ஊக்கமிடும் பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






யுத்தம் வேண்டாம்
உலகின் சிறந்த யுத்தத்திற்கெதிரான சுவரொட்டிகளை கீழே பாருங்கள். ( இது அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகள்)













2 பின்னூட்டங்கள்:
இதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்;புஸ் புரிவதாக இல்லை

அந்தாளுக்கு புரிஞ்சா உலகத்தில பிரச்சனையே இல்லாம போயிருமே


பின்னூட்டம் ஒன்றை இட






அப்பிள் ஐபோன் (iPhone)
இதனைப்பற்றிய பதிவொன்றினை முன்னமே நான் இட்டிருந்தாலும், அவற்றில் விடப்பட்ட அல்லது பின்னர் அறியப்பட்ட சில விடயங்களை மட்டும் இந்த பதிவு கொண்டுள்ளது.


பொத்தான்கள்
இந்த கைப்பேசி மூன்றே மூன்று பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளது.
இவற்றில் volume slider ஆனது மின்கலத்தின் செயற்றிறனை அதிகரிக்கவே திரையில் வைக்கப்படாமல் பொத்தானாக உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளீட்டு வசதி
இந்த கைப்பேசியின் உள்ளீட்டு வசதியான "Multi-touch" எனப்படுவது, அப்பிள் நிறுவனத்தின் 200 காப்புரிமை பெறப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அத்துடன் இதன் திரைவிசைப்பலகை மிக அதிஉணர்திறன் கொண்டதுடன் எங்களின் உள்ளீடுகளின்போது ஏற்படும் தவறுதலான அழுத்தல்களை நிவர்த்திசெய்ய ஒரு வினைத்திறன் வாய்ந்த சொற்பிழை திருத்தியினையும் கொண்டுள்ளது.

Sensor control
இந்த ஐபோன் ஆனது நாங்கள் எந்த வகையில் வைத்திருக்கிறோம் என்பதனை (நிலைக்குத்தாக, கிடையாக) Sensor மூலமாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் தனது திரையினை அமைத்துக்கொள்ளும்.

Text (SMS)
வழமையான கைப்பேசிகளில் இருக்கும் sms போலல்லாது இந்த கைப்பேசி iChat போன்றதொரு சிறிய மென்பொருளை sms சேவைக்கு பயன்படுத்துகின்றது. இதனால் எங்களால் bubbles, icons போன்றவற்றினையும் எஙகள் sms இல் சேர்த்துக்கொள்ள முடியும்.


மின்னஞ்சல்

இந்த கைப்பேசியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருளில் எங்கள் கணனியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருட்களை (Outlook, lotos notes) போன்று IMAP, POP3 சேவைகளை பயன்படுத்த முடியும். அதைவிட யாகூ நிறுவனம் அனைத்து ஐபோன் பாவனையாளர்களுக்கும் Blackberry இல் பயன்படுத்துவதைப்போன்ற Push mail கணக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

iPhone ஒரே பார்வையில்.


முன்னைய ஒப்பீட்டுப் பதிவு இங்கே.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட




காதலர் தினம் - (கொண்டாடுபவர்களுக்கு மட்டும்)
வழமையான எந்த ஒரு நாளையும் விட காதலர் தினம் எண்டா பெரிய பட்டிமன்றங்கள் விவாதங்கள் எல்லாம் தொடங்கீரும். நானும் இந்த வயசுபோனாக்கள் எல்லாம் இந்த தினமெல்லாம் தேவையில்லையெண்டும், வயசு வந்த பெடி பெட்டையள் எல்லாம் வேணுமெண்டும் ஒரு கிழமைக்கெண்டாலும் ஒரே பிச்சுப் புடுங்கலா இருக்கும்.

நான் உதைப்பற்றி ஒண்டும் கதைக்க வரேல்ல. நீங்கள் யாராவது வாழ்த்துமட்டை கொடுக்கிற எண்டா கீழ இருக்கிற படங்களை எடுத்து உங்களுக்கு ஏற்றமாதிரி மாத்தி விரும்பின பேருகளை படங்களை போட்டு குடுத்துககொள்ளுங்கோ. என்னால முடிஞ்ச உதவி. (படத்தை சொடுக்கி பெரிசாக்கி எடுங்கோ)




























கனகாலமா நானும் இந்த படங்களை பாவிச்சு வாழ்த்துமட்டை செய்து குடுப்பம் எண்டு பாத்தா............. எங்க சரிவருது......

2 பின்னூட்டங்கள்:
//கனகாலமா நானும் இந்த படங்களை பாவிச்சு வாழ்த்துமட்டை செய்து குடுப்பம் எண்டு பாத்தா............. எங்க சரிவருது......//

அட உங்களுக்கு இன்னும் சரிவரேல்லையா?..(தக)அவலுக்கு நன்றி.:)

என்ன செய்யிறது மலைநாடான் எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்தானே.......


பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
Google docs updated
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads

தொடுப்புகள்:
- என் பார்வையில்
- சாரல்







Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution