« இல்லம்

சில கணக்குகள்.வெளிச்சப்பெட்டி (Light box)CSS CHEAT SHEETஉபுந்துவில போட்டோசொப்உங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிடஉபுந்து சில திரைவெட்டுகள்Web 2.0 என்றால் என்ன ?கூகிளின் புத்தாண்டு சின்னங்கள்கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்புதிய தேடுபொறி Hakia  »அப்பிள் ஐபோ(f)ன்
ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகள் இதுபற்றி வந்திருந்தாலும் என்னுடைய பார்வையில் ஐபோன் எப்பிடி இருக்குது என்பதுதான் இந்த பதிவு.

இதன் வசதிகளுக்கு வருவோம்.

திரையளவு மற்றும் resolution (3.5 inches, 320 by 480 at 160 ppi)
சாதாரண கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவு இது. உண்மையில் இது கைக்கணனிகளில் மட்டுமே உள்ள அளவாகும். எனது Digital photo album இப்பவே தயாராகுது, அப்பிள் ஐபோன் வாங்கின உடன அதில சேக்கிறதுக்கு.கொள்ளளவு (4GB or 8GB)
எனது ipod இனை என்ன செய்வது என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.


இயங்குதளம் (OS X)
உண்மையில் எனக்கு Symbian OS (எனது கைத்தொலைபேசி Nokia 6680) மிகவும் பிடித்தமானது. ஏனெனில் எனக்கு தேவையான மென்பொருட்களை நானே எழுதிக்கொள்ள அது மிகவும் வசதி அளிக்கின்றது. அதைவிட அது மிகவும் பயன்படுத்த இலகுவானது (ஆனால் அடிக்கடி வைரஸ் தாக்கம் ஏற்படும்). இதில் OS X பயன்படுத்தி பார்த்தால் தான் சொல்லமுடியும். ஆனால் flash mobile player இப்போது இலவசம் என்பதால் பிரச்சனை இல்லை என்றே நினைக்கின்றேன்.


உள்ளீட்டு வசதி. (Multi-touch)
ஒரேயடியாக வித்தியாசப்பட்டுவிட்டது. ஆனால் இதை ஒரு பிரச்சனையாக நோக்குமளவிற்கு ஏதுமில்லை. இலகுவாக பயன்படுத்தலாம் என்றே நினைக்கின்றேன். ஆனால் இதன் touch screen keyboard எந்தளவிற்கு விரைவான எழுத்து உள்ளீடுகளுக்கு சாத்தியப்படும் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. ஆனால் அப்பிள் நிறுவனம் சொல்கின்றது
iPhone features the most revolutionary user interface since the mouse. It’s an entirely new interface based on a large multi-touch display and innovative new software that lets you control everything using only your fingers. So you can glide through albums with Cover Flow, flip through photos and email them with a touch, or zoom in and out on a section of a web page all by simply using iPhone’s multi-touch display.


iPhone’s full QWERTY soft keyboard lets you easily send and receive SMS messages in multiple sessions. And the keyboard is predictive, so it prevents and corrects mistakes, making it easier and more efficient to use than the small plastic keyboards on many smartphone.


நான் நம்புகின்றேன். நீங்கள் எப்படி??


GSM (Quad-band MHz: 850, 900, 1800, 1900)
எனது கைத்தொலைபேசியினை விட வசதி கூடியது (Nokia 6680 triband வசதியை மட்டுமே கொண்டது). இதனால் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.)


கம்பியற்ற இணைப்பு (Wi-Fi (802.11b/g) + EDGE + Bluetooth 2.0)
இதைவிட வேறேதும் தேவையில்லை. அதைவிட இதன் Bluetooth Mac OS X உடன் மிகுந்த ஒத்திசைவை காட்டுகிறது என்பது மிகவும் சிறப்பான ஒரு விடயம்.


புகைப்படக் கருவி (2.0 megapixels)
நிச்சயமாக இதுவே போதுமானது. அதுவும் 3.5 இஞ்சி திரையளவுடன். இதற்கு மேல் தேவையெனில் பேசாமல் ஒரு புகைப்படக் கருவியே வாங்கி விடலாம்.அளவு மற்றும் நிறை. (4.5 x 2.4 x 0.46 inches / 115 x 61 x 11.6mm, 4.8 ounces / 135 grams)
எனது கைத்தொலைபேசியை விட சிறிது பெரிது. அனால் மிகவும் மெல்லியது. எனது ஐபொட்டை விடவும் சிறிதளவு பெரிதுதான் என நினைக்கின்றேன். ஆனால் இந்த அளவு ஒரு பிரச்சனையாய் இருக்காது என்பதே என் எண்ணம்.
மின்கலம் (Up to 5 hours Talk / Video / Browsing, Up to 16 hours Audio playback)
இதனை அகற்றவோ மாற்றவோ முடியாது (ஐபொட் போல). இது சிலவேளைகளில் சிக்கலை கொடுக்கலாமோ என்றே தோன்றுகின்றது. (ஒரேயடியாக stuck ஆகினால் நான் மின்கலத்தை அகற்றியே எனது பழைய கைத்தொலைபேசியை (Nokia 6600) வழமைக்கு கொண்டுவருவதுண்டு)


இணையவசதி
நாங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் இணையஉலாவிகளில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட இணைய உலாவியை (safari) கொண்ட முதலாவது கைத்தொலைபேசி இதுவே. Google Maps கூட இதில் நன்றாக இயங்குகின்றது. பூரணமான ஒரு இணையத்தளம் இந்த உலாவியில் தெரிவதில் எந்த சிக்கலும் இல்லை.இதைவிட iTunes உடன் இதன் ஒத்திசைவும் முக்கியமாய் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அப்பிள் நிறுவனம் இந்த கைத்தொலைபேசிக்கென்று ஒரு மென்பொருளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


விலை ($499 for the 4GB and $599 for the 8GB)
இதன் விலை கொஞ்சம் உதைத்தாலும் வசதிகள் மற்றும் நிறுவனம் என்பவற்றோடு ஒன்று சேர்த்து ஒப்பிடுகையில் பரவாயில்லை போலவே தோன்றுகின்றது.என்னை பொறுத்தவரை இதிலுள்ள வசதிகள் தாராளமாகவே போதுமானவை. இல்லாதிருக்கினற ஒரே விடயம் 3G மட்டுமே. ஆனால் எவ்வளவு தூரம் 3G இன் பயன்பாடு எங்கள் நாடுகளில் உள்ளது என்பது இதனைப்பற்றி சிந்திப்பதை அறவே நீக்கி விட்டது. நிச்சயமாக அப்பிளின் அடுத்தடுத்த பதிப்புகளில் 3G சேர்க்கப்படும் என்பதே என் எண்ணம்.

அப்பிள் ஐபோன் கைத்தொலைபேசி சந்தையை விட கைக்கணினிச் சந்தையிலேயே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்றே நான் நினைககின்றேன். ஏனெனில் கைக்கணினிகளை வாங்குபர்கள் நிச்சயமாக அப்பிள் ஐபோன் பக்கம் திரும்பி விடுவார்கள்.


அப்பிள் ஐபோன் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடனே கைத்தொலைபேசி சந்தையின் நிலவரம் கீழே


எங்கட பக்கம் 2008 இலதான் வருகுதாம். அதுக்குள்ள ஆரிட்டயாவது சொல்லி விட்டெண்டான்ன வாங்கிப்போடோணும் (online இல வாங்கேலுமோ தெரியேல்ல) பாப்பம் சந்தைக்கு வரட்டும். இதைப்பற்றி உங்கட கருத்துகள் ஏதும் இருந்தா அப்பிடியே ஒரு பின்னூட்டமா போட்டு விடுங்கோ.

 
2 பின்னூட்டங்கள்:
Good analysis oorodi....quite good. Can I include that stock exchange graph in my english blog?

http://internetbazaar.blogspot.com

LFC fan வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நிச்சயமாக இதற்கெல்லாம் கேட்கவே தேவையில்லை. லைசென்ஸ் அப்படி.பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
சில கணக்குகள்.
வெளிச்சப்பெட்டி (Light box)
CSS CHEAT SHEET
உபுந்துவில போட்டோசொப்
உங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட
உபுந்து சில திரைவெட்டுகள்
Web 2.0 என்றால் என்ன ?
கூகிளின் புத்தாண்டு சின்னங்கள்
கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்
புதிய தேடுபொறி Hakia

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution