Web 2.0 Logos
நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?

கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).





1 பின்னூட்டங்கள்:
பகீ,
தமிழ்ப் பதிவுலகில் தன்னார்வத்தின் பேரில் கூட்டு முயற்சியாக, வலைப்பதிவுகள் காட்சிப்படுத்தும் முறை ஒன்றில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு கூகுள் ரீடர் பயன்படுத்துபவர்கள் உதவி தேவைப்படுகிறது. பார்க்க - http://thamizhthendral.blogspot.com/2007/02/google-reader.html
நீங்கள் தொடர்ந்து நுட்பம் குறித்து எழுதுபவர் என்ற முறையில் எங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் உங்களை அணுகுகிறேன். நீங்கள் விரும்பினால், மேல் விவரங்களை தனி மடலில் அறியத்தருகிறேன்.


பின்னூட்டம் ஒன்றை இட






Microsoft Office 2008
Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும்.



இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படடிவில்லை)

Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும்

Ledger sheet - எந்த ஒரு பயனாளரையும் இலகுவாக Excel இல் கணக்குகளை கையாள இது உதவும்.

My day - இது ஒரு தன்னிச்சையாக இயங்கும் மென்பொருள் போல இயங்கும். அத்தோடு ஒரு நாட்காட்டி போல பயனாளர்கள் தங்கள் தினசரி வேலைகளை குறித்து செயலாற்ற உதவும். இதற்கு Desktop இல் அதிக இடம் தேவையில்லை.

இதைவிட இது Mac இயங்குதளத்துடன் வேறெப்போதையும் விட மிகுந்த ஒத்திசைவை காட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பின்னூட்டங்கள்:
பகீ
நல்ல தவல்கள் இவை.நன்றி

பொங்கல் வாழ்த்துக்கள்!

செல்லி வருகைக்கும் உங்கள பின்னூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட




புதிய வகை Flash Memory
வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற flash memoryகள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை கொண்டவை (256mb, 512mb). இதனால் எங்கள் தேவைகள் அதிகரிக்கின்ற போது ஒன்று நாங்கள் இரண்டு மூன்று memory களை வைத்திருக்க வேண்டும் அல்லது பழையதை வைத்துவி்ட்டு ஒரு புதிய கொள்ளளவு கூடிய flash memory இனை வாங்க வேண்டும் (நான்கூட முதலில் வைத்திருந்த flash memory 64 Mb கொள்ளளவம் உடையது(2002) பின்னர் 256, 512 என வளர்ந்து இப்போது 2Gb (2006 september) இல் வந்து நிற்கின்றது. பழையவைகள் அனேகமான நேரங்களில் பயன்படுத்தப்படாது கிடக்கின்றன).

இந்த பிரச்சனைகளின் தீர்வாக வந்திருக்கின்றது இந்த புதிய flash memory. இதில் ஒரு male connector மற்றும் ஒரு female connector உண்டு. male connector இனை கணினியுடன் இணைக்கலாம். மேலதிக கொள்ளளவம் தேவை எனின் இன்னுமொரு memory இன் male connector இனை முன்னயதன் female connector உடன் இணைத்துவிட்டால் சரி. தேவையான கொள்ளளவம் கிடைத்துவிடும்.





ஆனால் ஒரு 300Mb கொள்ளளவம் உள்ள கோப்பினை கொண்டு செல்ல இரண்டு 256Mb கொள்ளளவம் கொண்ட memory களை இணைத்தால் அது சரிப்படுமா எனத்தெரியவில்லை. ஆனால் அதற்கு மென்பொருட்கள் உண்டு.

2 பின்னூட்டங்கள்:
web 2.0 வா?! நடத்துஙக! நடத்துஙக!

அருமையான மாற்றஙகள்

வாங்க அனானி அதுக்குதான் முயற்சி பண்ணுறன் . இன்னும் கனக்க வேலை இருக்கு்


பின்னூட்டம் ஒன்றை இட






சிறிய விளையாட்டு
உங்களுக்கு பிடிக்காத இணையத்தளம் ஏதும் இருக்கின்றதா?? அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா?? அப்படியானால் கீழே சொல்லப்பட்டவாறு செய்யுங்கள்.



1. அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்

2. முகவரிப்பட்டையில் (Address bar) இலுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள்

3. கீழே தரப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை Address bar இல் ஒட்டி Enter பண்ணுங்கள் அவ்வளவுதான். சில அதிசயங்களை காண்பீர்கள்.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);

படங்கள் குறைவான இணையத்தளங்களில் (உதாரணம் google) முதலில் முயற்சித்து பாருங்கள்.

3 பின்னூட்டங்கள்:
It was very funny and interesting. Thanks

சூப்பர் ஊரோடி... ஊரோடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், எல்லாமே ஓடுகிறது?!!! :))))))))))))))

பொன்ஸ், வாமனன் வருகைக்கும் பின்னூட்டத்திறகும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






அப்பிள் ஐபோ(f)ன்
ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகள் இதுபற்றி வந்திருந்தாலும் என்னுடைய பார்வையில் ஐபோன் எப்பிடி இருக்குது என்பதுதான் இந்த பதிவு.

இதன் வசதிகளுக்கு வருவோம்.

திரையளவு மற்றும் resolution (3.5 inches, 320 by 480 at 160 ppi)
சாதாரண கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவு இது. உண்மையில் இது கைக்கணனிகளில் மட்டுமே உள்ள அளவாகும். எனது Digital photo album இப்பவே தயாராகுது, அப்பிள் ஐபோன் வாங்கின உடன அதில சேக்கிறதுக்கு.



கொள்ளளவு (4GB or 8GB)
எனது ipod இனை என்ன செய்வது என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.


இயங்குதளம் (OS X)
உண்மையில் எனக்கு Symbian OS (எனது கைத்தொலைபேசி Nokia 6680) மிகவும் பிடித்தமானது. ஏனெனில் எனக்கு தேவையான மென்பொருட்களை நானே எழுதிக்கொள்ள அது மிகவும் வசதி அளிக்கின்றது. அதைவிட அது மிகவும் பயன்படுத்த இலகுவானது (ஆனால் அடிக்கடி வைரஸ் தாக்கம் ஏற்படும்). இதில் OS X பயன்படுத்தி பார்த்தால் தான் சொல்லமுடியும். ஆனால் flash mobile player இப்போது இலவசம் என்பதால் பிரச்சனை இல்லை என்றே நினைக்கின்றேன்.


உள்ளீட்டு வசதி. (Multi-touch)
ஒரேயடியாக வித்தியாசப்பட்டுவிட்டது. ஆனால் இதை ஒரு பிரச்சனையாக நோக்குமளவிற்கு ஏதுமில்லை. இலகுவாக பயன்படுத்தலாம் என்றே நினைக்கின்றேன். ஆனால் இதன் touch screen keyboard எந்தளவிற்கு விரைவான எழுத்து உள்ளீடுகளுக்கு சாத்தியப்படும் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. ஆனால் அப்பிள் நிறுவனம் சொல்கின்றது
iPhone features the most revolutionary user interface since the mouse. It’s an entirely new interface based on a large multi-touch display and innovative new software that lets you control everything using only your fingers. So you can glide through albums with Cover Flow, flip through photos and email them with a touch, or zoom in and out on a section of a web page all by simply using iPhone’s multi-touch display.


iPhone’s full QWERTY soft keyboard lets you easily send and receive SMS messages in multiple sessions. And the keyboard is predictive, so it prevents and corrects mistakes, making it easier and more efficient to use than the small plastic keyboards on many smartphone.


நான் நம்புகின்றேன். நீங்கள் எப்படி??


GSM (Quad-band MHz: 850, 900, 1800, 1900)
எனது கைத்தொலைபேசியினை விட வசதி கூடியது (Nokia 6680 triband வசதியை மட்டுமே கொண்டது). இதனால் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.)


கம்பியற்ற இணைப்பு (Wi-Fi (802.11b/g) + EDGE + Bluetooth 2.0)
இதைவிட வேறேதும் தேவையில்லை. அதைவிட இதன் Bluetooth Mac OS X உடன் மிகுந்த ஒத்திசைவை காட்டுகிறது என்பது மிகவும் சிறப்பான ஒரு விடயம்.


புகைப்படக் கருவி (2.0 megapixels)
நிச்சயமாக இதுவே போதுமானது. அதுவும் 3.5 இஞ்சி திரையளவுடன். இதற்கு மேல் தேவையெனில் பேசாமல் ஒரு புகைப்படக் கருவியே வாங்கி விடலாம்.



அளவு மற்றும் நிறை. (4.5 x 2.4 x 0.46 inches / 115 x 61 x 11.6mm, 4.8 ounces / 135 grams)
எனது கைத்தொலைபேசியை விட சிறிது பெரிது. அனால் மிகவும் மெல்லியது. எனது ஐபொட்டை விடவும் சிறிதளவு பெரிதுதான் என நினைக்கின்றேன். ஆனால் இந்த அளவு ஒரு பிரச்சனையாய் இருக்காது என்பதே என் எண்ணம்.




மின்கலம் (Up to 5 hours Talk / Video / Browsing, Up to 16 hours Audio playback)
இதனை அகற்றவோ மாற்றவோ முடியாது (ஐபொட் போல). இது சிலவேளைகளில் சிக்கலை கொடுக்கலாமோ என்றே தோன்றுகின்றது. (ஒரேயடியாக stuck ஆகினால் நான் மின்கலத்தை அகற்றியே எனது பழைய கைத்தொலைபேசியை (Nokia 6600) வழமைக்கு கொண்டுவருவதுண்டு)


இணையவசதி
நாங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் இணையஉலாவிகளில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட இணைய உலாவியை (safari) கொண்ட முதலாவது கைத்தொலைபேசி இதுவே. Google Maps கூட இதில் நன்றாக இயங்குகின்றது. பூரணமான ஒரு இணையத்தளம் இந்த உலாவியில் தெரிவதில் எந்த சிக்கலும் இல்லை.



இதைவிட iTunes உடன் இதன் ஒத்திசைவும் முக்கியமாய் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அப்பிள் நிறுவனம் இந்த கைத்தொலைபேசிக்கென்று ஒரு மென்பொருளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


விலை ($499 for the 4GB and $599 for the 8GB)
இதன் விலை கொஞ்சம் உதைத்தாலும் வசதிகள் மற்றும் நிறுவனம் என்பவற்றோடு ஒன்று சேர்த்து ஒப்பிடுகையில் பரவாயில்லை போலவே தோன்றுகின்றது.



என்னை பொறுத்தவரை இதிலுள்ள வசதிகள் தாராளமாகவே போதுமானவை. இல்லாதிருக்கினற ஒரே விடயம் 3G மட்டுமே. ஆனால் எவ்வளவு தூரம் 3G இன் பயன்பாடு எங்கள் நாடுகளில் உள்ளது என்பது இதனைப்பற்றி சிந்திப்பதை அறவே நீக்கி விட்டது. நிச்சயமாக அப்பிளின் அடுத்தடுத்த பதிப்புகளில் 3G சேர்க்கப்படும் என்பதே என் எண்ணம்.

அப்பிள் ஐபோன் கைத்தொலைபேசி சந்தையை விட கைக்கணினிச் சந்தையிலேயே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்றே நான் நினைககின்றேன். ஏனெனில் கைக்கணினிகளை வாங்குபர்கள் நிச்சயமாக அப்பிள் ஐபோன் பக்கம் திரும்பி விடுவார்கள்.


அப்பிள் ஐபோன் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடனே கைத்தொலைபேசி சந்தையின் நிலவரம் கீழே


எங்கட பக்கம் 2008 இலதான் வருகுதாம். அதுக்குள்ள ஆரிட்டயாவது சொல்லி விட்டெண்டான்ன வாங்கிப்போடோணும் (online இல வாங்கேலுமோ தெரியேல்ல) பாப்பம் சந்தைக்கு வரட்டும். இதைப்பற்றி உங்கட கருத்துகள் ஏதும் இருந்தா அப்பிடியே ஒரு பின்னூட்டமா போட்டு விடுங்கோ.

1 பின்னூட்டங்கள்:
LFC fan வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நிச்சயமாக இதற்கெல்லாம் கேட்கவே தேவையில்லை. லைசென்ஸ் அப்படி.


பின்னூட்டம் ஒன்றை இட






சில கணக்குகள்.
இந்த கணக்குகளையும் விடைகளையும் ஒரு ஆங்கில பதிவில இருந்து எடுத்தனான். நீங்களும் பாருங்கோவன். இவ்வளவு ஈசியா கணக்குகள் செய்யிற வழி உங்கள் ஒருத்தருக்கும் தெரிஞ்சிருக்காது. பாத்திட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கோவன்.



















4 பின்னூட்டங்கள்:
பகீ
நல்லாதான் யோசிக்கிறாங்க???சிரித்தேன்.
யோகன் பாரிஸ்

எனக்கும் பாரத்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது அதுதான் பதிவாக்கினேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி யோகன் அண்ணா.

நல்லா சிரிச்சேன்

நல்லா சிரிச்சேன்


பின்னூட்டம் ஒன்றை இட






வெளிச்சப்பெட்டி (Light box)
இப்ப சில நாட்களா என்ர பதிவுகளில இருக்கிற படங்களை பெரிசாக்கிறதுக்கு நீங்கள் சொடுக்கி பாத்திருந்தா ஒரு effect ஐ பாத்திருக்கலாம். இதுக்கு பெயர் Light Box. இது தான் இப்ப அனேகமான இணையத்தளங்களில படங்கள் பிழைச்செய்திகள் அறிவுறுத்தல்கள் போன்ற சில விசயங்களை காட்டுறதுக்கு பயன்படுத்தப்படுகுது. நானும் என்ர பதிவுகளில இப்ப படங்களை பெரிசாக்கி காட்டுறதுக்கு இதை பாவிக்க தொடங்கியிருக்கிறன். இதில இருக்கிற நன்மை என்னெண்டா படங்களை பெரிசாக்கி பாக்கிறதுக்கு நீங்கள் இன்னொரு சாளரத்தை திறக்க தேவையில்லை. அதோட திறந்து வைச்சிருக்கிற இணையப்பக்கமும் திருப்பி லோடாகிற தேவைகள் இல்லை.



இதைப்பற்றி மேலதிக விபரம் தேவையெண்டா இங்க போய் பாருங்கோ.

ஆனா இதைப்பாவிக்கிற எண்டா நீங்கள் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரலை அந்த இணையத்தளத்தின்ர வழங்கியில இருந்தே பாவிக்க ஏலாது. அதை பதிவிறக்கி உங்கட ஏதாவது வழங்கியில அல்லது ஜாவாஸ்கிரிப்ட் host பண்ணிற ஏதாவது இணையத்தளங்களை பாவிக்க வேணும். உஙகளுக்கு இதை பயன்படுத்த விருப்பம் இருந்து ஆனா இந்த வசதிகள் இல்லாம இருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ என்ர வழங்கியின்ர முகவரியை தாறன் (அதில இருந்துதான் நான் பயன்படுத்திறன்).

3 பின்னூட்டங்கள்:
பகீ!

நல்ல தகவல். தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன். அறியத்தந்தமைக்கு நன்றி.

பகி!

தகவலுக்கு நன்றி!. தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன்.

நன்றி மலைநாடான் வருகைக்கும் பின்னூட்டத்திறகும்


பின்னூட்டம் ஒன்றை இட






CSS CHEAT SHEET
CSS என்பது எங்கள் இணையப்பக்கங்களை அழகுபடுத்த நாங்கள் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். (மொழி என்பது சரியென்று எனக்கு படவில்லை, அனால் என்ன சொல்லை பயன்படுத்துவது என்று தெரியவில்லை). இதனை பயன்படுத்தி எந்தவித படவேலைப்பாடுகளும் இன்றி அழகிய இணையபபக்கங்களை வடிவமைத்துவிட முடியும். CSS இனை இலகுவாக ஞாபகப்படுத்திக்கொள்ள இந்த Cheat sheet உதவும். சொடுக்கி பாருங்கள்.



இதனைப்பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

2 பின்னூட்டங்கள்:
பகீ!
யாராவது; பூந்து விளையாடுபவர்கள்.முயலட்டும்.நமக்குச் சரிப்படாது.இதைப் பயன் படுத்தக் கூடியவர்களுக்கு தொடர்ந்து தேடிக் கொடுக்கவும்.
யோகன் பாரிஸ்

யோகன் அண்ணா நிச்சயமாக. உங்கள் வருகைக்கும் பின்னனூட்டத்திற்கும் நன்றி.


பின்னூட்டம் ஒன்றை இட






உபுந்துவில போட்டோசொப்


கொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோவன்.









6 பின்னூட்டங்கள்:
எனக்கு ஒரு கேள்வி..

Ubuntu uses KDE or GNOME environment? or we can choose any?
I would like to use it next mnth for a project. So, Plz guide me.. :-)

எனக்கு ஒரு கேள்வி..

Ubuntu uses KDE or GNOME environment? or we can choose any?
I would like to use it next mnth for a project. So, Plz guide me.. :-)

நண்பரே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

உண்மையில் உபுந்து Gnome இனைத்தான் பயன்படுத்துகின்றது. ஆனால் KDE இனை பயன்படுத்தும் Kubuntu எனும் பதிப்பும் உள்ளது. நீங்கள் அவர்களின் தளத்திற்கு விஜயம் செய்து பாருங்கள்.

http://www.ubuntu.com

உபுண்டு நிருவல் மிக எளிதாக உள்ளது.என்ன? எனது 2 பார்டிஷியன் களில் நிருவும் போது ஒன்றில் ரெசொலுசன் சொதப்பியது மற்றவற்றில் ஓகே.இத்தனைக்கும் ஒரே வட்டில் இந்த பிரச்சனை & அதே கணினியில்

உபுண்டு நிருவல் மிக எளிதாக உள்ளது.என்ன? எனது 2 பார்டிஷியன் களில் நிருவும் போது ஒன்றில் ரெசொலுசன் சொதப்பியது மற்றவற்றில் ஓகே.இத்தனைக்கும் ஒரே வட்டில் இந்த பிரச்சனை & அதே கணினியில்

வடுவூர் குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கென்னவோ உபுந்து மிகவும் இலகுவானதாக படுகிறது. இதற்கு முன்னர் நான் Redhat Mandrave Knopix போன்ற லினிக்ஸ் பதிப்புகளை பயன்படுத்தியிருந்தேன். (லின்ஸ்பையர் கூட). எனக்கு wine இனை கொன்விகர் பண்ணுவதில் தான் பிரச்சனைகள் வந்தது. மற்றபடி பிரச்சனை ஏதும் இல்லை.


பின்னூட்டம் ஒன்றை இட




உங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட




நேற்று இணையத்தளங்களை சுத்தி வரேக்க இந்த இணையத்தை கண்டுபிடிச்சன். இந்த தேடுபொறியில நீங்கள் ஏதாவது சொல்லை உள்ளி்ட்டு தேடினா அது Google, msn, yahoo மூன்று தேடுபொறியில கிடைக்கிற முதல் 50 முடிவுகளையும் ஒப்பிட்டு சொல்லும். இப்ப இது text மற்றும் Image தேடல்களை மட்டும் தான் ஒப்பிடுது. போகப்போக இன்னும் வசதிகள் வருமெண்டும் சொல்லுகினம். நீங்களும் ஒருக்கா போய் பாருங்கோவன்.

பிடிச்சிருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






உபுந்து சில திரைவெட்டுகள்
உபுந்து லினிக்ஸின்ர பயனாளர் ஆகிட்டன் எண்டு முன்னமே சொன்னனான் தானே. இப்ப அதில இருந்து எடுத்த சில திரைவெட்டுகள் உங்களுக்காக.













0 பின்னூட்டங்கள்:

பின்னூட்டம் ஒன்றை இட






Web 2.0 என்றால் என்ன ?
அறிமுகம்.
Web 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Web 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.



இனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 அடிப்படைக்கு அமைவாக மாற்றுவது என பார்ப்போம்.

இலகுத்தன்மை
Web 2.0 வடிவமைப்பு பயன்படுத்த இலகுவானதாய் பெரிய எழுத்துக்களையும் அதிக படங்களையும் கொண்டதாய் அமைந்திருத்தல் வேண்டும். வேண்டும். எழுதப்பட்ட விடயங்கள் மிகக் குறைவாயே இருத்தல் வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.




மையப்படுத்தப்பட்ட விடயங்கள்.
கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று விடயங்கள் இணையப்பக்கத்தின் மையத்தில் அமைதல் வேண்டும். சூழ உள்ள வெறுமையான பிரதேசங்கள் Gradient நிறங்களால் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.



Web 2.0 இல் Horizontal navigation மிகவும் பொதுவாக பயன்படுத்த படுகின்றத்தப்படும் வடிவமைப்பாகும். இது பெரிய எழுத்துருக்களில் அனைவருக்கும் தெரியக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.






பின்னணி.
Web 2.0 இணையத்தளங்களின் பின்னணி பொதுவாக Gradiaent colors இலோ அல்லது diagnol line pattern இலோ காணப்படும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.



ஒளித்தெறிப்பு
Web 2.0 இன் இன்னுமொரு அடிப்படை நீங்கள் இணையப்பக்கத்தில் பயன்படுத்தும் சில படங்களுக்கு (குறிப்பாக சின்னங்களுக்கு) கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று ஒளித்தெறிப்பினை ஏற்படுத்துதல்.




வட்டவடிவ மூலைகள்.
இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் சதுரங்கள், buttons, text boxes போன்றவற்றின் மூலைகளை வட்டவடிவமாக்கலும் இந்த வடிவமைப்பில் புதியதொரு விடயமாகும்.
கீழே சில உதாரணங்களை பாருங்கள்.



Light box
இதுவும் புதிய வடிவமைப்பு முறையில் காணப்படும் ஒரு விடயமாகும். பெரிய படங்கள் மற்றும் பிழைச்செய்திகள் போன்றவற்றை காட்டுவதற்கு இது பயன்படுத்தபடுகின்றது. கீழே உதாரணத்தை பாருங்கள்.


Ajax
எப்போதும் Web 2.0 இனை பற்றி கதைக்கும்போது AJAX இனைப்பற்றியும் சேர்த்தே கதைக்கின்றோம். இது உங்கள் இணையப்பக்கங்களை கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகவானவையாயும், வேகமானவையாயும் மற்றுகின்றது.


Syndication
உங்கள் இணையத்தளத்திற்கு RSS Syndication பயன்படுத்தபட்டிருத்தல் வேண்டும். அத்தோடு கீழ் காட்டப்பட்டது போன்று பயன்படுத்த இலகுவாக feed icons உம் காணப்படவேண்டும்.


Bookmarking
உங்கள் இணையப்பக்கத்தை பயனாளர்கள் Bookmark செய்யக்கூடியவாறு digg, delicious, reddit சின்னங்கள் காணப்படவேண்டும்.


பெரிய எழுத்துருக்கள
உங்கள் Web 2.0 வடிவமைப்பில் பெரிய தெளிவான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


பிரகாசமான நிறங்கள்
உங்கள் வடிவமைப்பிற்கு பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


உங்கள் சேவை பற்றிய அறிமுகம்.
உங்கள் இணையத்தளத்தின் முதற்பக்கத்தில் உங்கள் செவை பற்றிய பத்தி காணப்படவேண்டும். இது பெரிய எழுத்திலும் படங்கள் புள்ளடிகள் கொண்டதாயும் அமைந்திருத்தல் வேண்டும்.



Web 2.0 நட்சத்திரம்
அனேகமான Web 2.0 இணையத்தளங்களில் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துதல், எண்களிடல் போன்ற தேவைகளுக்கு ஒரு நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதனை அவதானித்திருப்பீர்கள். இவற்றை நீங்களும் பயன்படுத்த வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.



Beta version
உங்கள் இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படும் போது அல்லது மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது ஒரு Beta சின்னம் அல்லது சொல்லு உங்கள் இணையப்பக்கத்தில் காணப்பட வெண்டும்.



பயனாளர்களின் பங்களிப்பு

உங்கள் இணையத்தளத்திற்கு பயனாளர்களின் பங்களிப்பு கட்டாயம் இருத்தல் வேண்டும். இது ஒரு பின்னூட்டப்பெட்டியாக, விக்கி பக்கமாக அல்லது வேறு எந்த விதமாகவாவது இருக்கலாம்.
உதாரணம்
wikipedia : wiki based
Digg : contents sharing
Wordpress : comments sections and ratting.

இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.

17 பின்னூட்டங்கள்:
அடேங்கப்பா.. இவ்வளவு விசயங்களா?

அருமையானப் பகுதி. பகிர்ந்தமைக்கு நன்றி...

ஜி.

Excellent.

ஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

அனானி பின்னூட்டத்திற்கு நன்றி

நண்பரே உஙகள் வலைத்தளம் web 2.0 வால் ஆனதா இல்லை என்றால் நீங்கள் வடிவமைத்த வேறொரு web2.0 வலைத்தளத்தை காண்பிக்கவும்

நன்றி

இந்த வலைப்பதிவு ஓரளவுக்கு Web 2.0 வசதிகளை கொண்டுள்ளது. Light box, book marking, feedings, tags, comments மற்றும் சில. விரைவில் Web 2.0 இற்கு பூரணமாக மாற்றி விடுவேன் என நினைக்கின்றேன்.

அது சரி இதைக்கேட்க ஏன் அனானியா வரணும்??

பின்னூட்டத்திற்கு நன்றி

பகீ

நல்ல ஒரு பதிவு. முதல்ல உங்களோட முயற்சிக்கு ஒரு பாராட்டு.

ஆனா Web2.0 ன்னா என்னன்றதை கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்.
நீங்க சொன்ன முக்கால் வாசிக்கு மேல எல்லாமே வடிவமைப்பு பத்தினது. இதுக்கும் web2.0 க்கும் ரொம்ப பெரிய சம்பந்தம் இல்லை. சில web2.0 பக்கங்கள் இந்த மாதிரி இருக்குன்றதனால இதுதான் அதுன்னு எப்டி சொல்ல முடியும். அதனால நீங்க சொன்ன எல்லாமே web2.0 உபயோகப்படுத்தப்படுற வலைப்பூக்கள் எப்படி இருக்குன்றது மட்டும் தான், web2.0ன்னா என்னங்கிறதுக்கான விளக்கம் கிடையாது.


இப்படியான ஒரு வரையறையை நீங்க எங்கருந்து எடுத்தீங்கன்னு தெரியலை.
சரியான வரையறைன்னு ஒன்னு இல்லாட்டி கூட இந்த விக்கி பக்கம் உங்களுக்கு உதவக்கூடும்.

http://en.wikipedia.org/wiki/Web_2.0

மத்தபடி நல்லா எழுதீட்டு வர்றீங்க பாராட்டுக்கள்.

இது உங்களுக்கான தனிப்பட்ட மடல், பிரசுரிக்க தேவையில்லை.

ஜீ!
நல்ல தமிழுலக நடப்புச் சொல்லும் கதை. ஆனால் கவிதாவும் தான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.
என்று கூறியுள்ளதை அன்புள்ளத்துடன் மதிப்போம்.
யோகன் பாரிஸ்

பகீ!
நீங்க சொல்லச் சொல்ல ஆசையாகத்தான் இருக்கு!!ஆனால் பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்படக்கூடாது.நம் நிலை அப்படியே!!எனிமும் பலருக்குப் பயனான செய்தி!
மிக்க நன்றி
யோகன்

Web 2.0 is not AJAX and visual design. We typically see a site that has bright colors and fancy shadow effects and say, "Web 2.0." That is not the case.

In a simple definition, Web 2.0 is harnessing collective intelligence through the internet. Think Myspace and Youtube. Both rely on user generated content. They have some color schemes and such which fit the design bill, but that is not what their business model is centered around.


taken from

http://www.jdsblog.com/2006/10/30/the-essentials-of-creating-web-20-sites/

முனியாண்டி, வசூல்ராஜா உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் சம்பந்தமாக நிச்சயமாக ஒரு பின்னூட்டமிடுவேன்.

யோகன் அண்ணா என்ன நடந்தது?????

பகீ!
நீங்கள் கூறியபடி "தீநரி" ஏற்றி இப்போ வாசிக்க முடிகிறது. மாறி மாறி இரண்டிலும் வாசித்து எழுதி ஒட்டியதால் ஏற்பட்ட தவறு ,அதை நீக்கிவிடவும்.
நீங்கள் போடும் கணணி பற்றிய பதிவெல்லாம் எனக்குச் சரிப்படுமா??என் கதி பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்பட்டது போல் தான், விபரம் தெரிந்தவர்களுக்கு நல்ல தகவல்களே!!தொடரவும்;நான் படித்துப் பின்னூட்டுவேன். மாதமோரு பதிவோ அதுகூட இல்லை. எப்படியோ இருக்கட்டும். எனக்குப் பின்னூட்டமிட வசதியிருந்தால் போதும்.
யோகன் பாரிஸ்

யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் எங்களை ஊக்கப்படுத்த

இந்த தகவல்களை தமிழ் விக்கிபீடியாவிலும் சேர்த்தால் நன்று. www.ta.wikipedia.org நன்றி.

நற்கீரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் பின்னூட்டங்களை பார்த்தபின்னர் இதில் சிலவற்றை விளக்கி எழுதுவது என தீர்மானித்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதன்பின் நிச்சயமாக.........

நல்ல ஒரு பதிவு. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இதில் யாஹூ முன்னோடியாய் இருந்தது.. :)

உண்மையில் என்பது இணைய இணைய வடிவமைப்பில் அடுத்த மைல் கல்லே இதுவரைகாலமும் அது இணையத்தளங்களுக்கே உரித்தான ஒன்றாக கருதப்பட்டு வந்தாலும் ஒருசில தினங்களுக்கு முன் ஒருசில ஆங்கில புளொக் நண்பர்கள் முன்று விட்டு ஏனோ பழமைக்கு திரும்பினார்கள் ஆனால் இத பற்றி படுப்பாய்வு செய்கிறோம் விரைவில் வெளிக்கொண்டு வருவேன்
கொசுறு:-நான் தான் இது பற்றி எழுத என்று இருந்தன் முந்தி விட்டியல் வாழ்த்துக்கள் ஒரு சில தினத்தில் நானும் எழுதுவன்


பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
Google docs updated
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
xcavator.net
ஐபோன் கார்ட்டடூனில்
Ask.com மீள்வடிவமைப்பு
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads

தொடுப்புகள்:
- என் பார்வையில்
- சாரல்







Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution