Microsoft Office 2008
Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படடிவில்லை)
Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும்
Ledger sheet - எந்த ஒரு பயனாளரையும் இலகுவாக Excel இல் கணக்குகளை கையாள இது உதவும்.
My day - இது ஒரு தன்னிச்சையாக இயங்கும் மென்பொருள் போல இயங்கும். அத்தோடு ஒரு நாட்காட்டி போல பயனாளர்கள் தங்கள் தினசரி வேலைகளை குறித்து செயலாற்ற உதவும். இதற்கு Desktop இல் அதிக இடம் தேவையில்லை.
இதைவிட இது Mac இயங்குதளத்துடன் வேறெப்போதையும் விட மிகுந்த ஒத்திசைவை காட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.