வெள்ளி, ஜூன் 29, 2007
நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
கன காலமா புளொக்கரில இருந்து வந்த ஊரோடி இப்ப
புது வீட்டுக்கு(www.oorodi.com) போயிட்டுது. வந்து பாத்து விருந்தெல்லாம் சாப்பிட்டுட்டு போங்க.....

இப்பிடி இருந்த நான்

இப்பிடி ஆகிட்டேன்.
புதன், ஜூன் 27, 2007
Google docs updated
கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.
முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.
போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.
படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)
செவ்வாய், ஜூன் 26, 2007
xcavator.net
நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.

திங்கள், ஜூன் 25, 2007
ஐபோன் கார்ட்டடூனில்
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.
ஞாயிறு, ஜூன் 24, 2007
Ask.com மீள்வடிவமைப்பு
ask.com ஆனது கேள்விகள் சார்பான தேடல்களுக்கு மிகவும் பெயர்பெற்றது. இப்போது அவ்விணையத்தளம் மிகவும் பயனாளர்களுக்கு இலகுவான முறையில் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
கீழே சில திரைவெட்டுக்களை பாருங்கள்.


சனி, ஜூன் 23, 2007
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.

இதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.
வியாழன், ஜூன் 21, 2007
simple CSS
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒரு முறையேனும் CSS கோப்புடன் அல்லது CSS நிரல்களுடன் போராடியிருப்பார்கள். நான் இணையத்தளங்களை வடிவமைக்கும் போது எனது அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்பவை இந்த நிரல்கள்தான். ஆனால் இதற்கு தீர்வு வந்தாற்போல எனக்கு simple CSS என்கின்ற மென்பொருள் கிடைத்திருக்கின்றது.

இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மக் இயங்குதளங்கள் எல்லாவற்றிற்கும் கிடைக்கின்றது. இருந்தபோதிலும் வின்டோஸ் விஸ்ராவில் இயங்குவதில் சிறிய சிக்கல்கள் காணப்படுகின்றது.

இங்கே சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
புதன், ஜூன் 20, 2007
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
இணைய உலகின் தீவிர தமிழ் பாவனையாளர்கள் என்று தமிழ் வலைப்பதிவர்களை கூறலாம். தமிழ் சார் செயற்பாடுகள் எதனையும் இணையத்தில் செய்யும் போது தமிழ்வலைப்பதிவர்களின் உதவியின்றி அவற்றை சாதிக்க முடியாது என்பது என் எண்ணம். இப்பொழுது நான் தமிழ்மொழியில் அமைந்த ஒரு இணைய மென்பொருளை உருவாக்கி வருகின்றேன். இதன்போது சில குறிப்பிட்ட வசதிகளை அமைக்கும் போது இணைய உலாவிகளை கணக்கிலெடுக்கவேண்டிய தேவை உருவாகி உள்ளது.
இதனால் தமிழ் வலைப்பதிவாளர்களாகிய நீங்கள் தயவு செய்து நீங்கள் பயன்படுத்தும் இணைய உலாவியின் பெயரை வாக்களித்து உதவுமாறு தயவுடன் வேண்டுகின்றேன். (தயவு செய்து அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்க உதவுமாறு வேண்டிக்கொள்ளுகின்றேன்). முடிந்தால் வாக்களித்ததை பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள்.
ஐபோன் இணைய உலாவி
மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் கணினிகள் கொண்டிருக்கின்ற வசதிகளை கொண்ட safari இணைய உலாவியை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வசதிகளை கொண்டிருக்கும் என Macrumors வரிசைப்படுத்தி உள்ளது. அத்தோடு அது என்ன விதமான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டுப்பாடுகளை மட்டும் கீழே பாருங்கள்.
- 10MB max html size for web page
- Javascript limited to 5 seconds run time
- Javascript allocations limited to 10MB
- 8 documents maximum loaded on the iPhone due to page view limitations
- Quicktime used for audio and video
மேலதிக தகவல்களுக்கு
இங்கே வாருங்கள்.
செவ்வாய், ஜூன் 19, 2007
அட..............
இந்த வியக்க வைக்கும்படியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்கு சிலவேளைகளில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடும். வந்து பாருங்கள்.




ஞாயிறு, ஜூன் 17, 2007
YouTube in Mobile
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com

உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.
சனி, ஜூன் 16, 2007
சிறுத்தை களத்தில்
மிக நீண்ட காலமாக (ஏறத்தாள ஒரு வருடம்) எதிர்பார்த்திருந்த சிறுத்தை இப்பொழுது களத்திற்கு வந்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது இயங்கு தளத்தின் பிரதான பதிப்பான Mac OSX 10.5 இனை வெளியிட்டுள்ளதோடு அதற்கு ஏற்றாற்போல் தனது இணையத்தளத்தினையும் மீள் வடிவமைப்பு செய்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்
அப்பிள் இணைத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
வெள்ளி, ஜூன் 15, 2007
AS Library.org
நீண்ட காலமாக flash மற்றும் Flex சம்பந்தமான எனது
இணையத்தளத்தை ஆரம்பிக்க வேண்டு என்று எண்ணி வந்தேன் (ஏறத்தாள 5 வருடங்கள்). எனது இந்த ஊரோடி வலைத்தளத்தை ஆரம்பித்த போது கூட எனது முதலாவது பதிவில் இதனை குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதுதான் அதனை ஆரம்பிக்க முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலைகள் பாக்கி உள்ளது.

வருகை தந்து பாருங்கள்.
புதன், ஜூன் 06, 2007
கதைக்கும் கடதாசி
மத்திய சுவீடன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதியவகையான டிஜிடல் கடதாசியினை உருவாக்கி உள்ளார்கள். இவை தாங்களே பேசக்கூடியவை. இவற்றில் நீங்கள் தொடுவதன் மூலம் அவற்றில் எழுதப்பட்டுள்ளவை (அச்சிடப்பட்டுள்ளவை) ஒலியாக எமக்கு கேட்கும்.
மேலதிக தகவல்களுக்கு பிபிசி இணையத்தின்
இப்பக்கத்தை பாருங்கள்.
செவ்வாய், ஜூன் 05, 2007
ஐபோன் வெளியாகிறது
அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக வருகிறது வருகிறது என்று சொல்லப்பட்டுவந்த ஐபோன் வருகின்ற 29 ஆம் திகதி பாவனைக்கு வருகின்றது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (BBC News)
ஐபோன் பற்றிய எனது ஏனைய பதிவுகள்.
http://oorodi.blogspot.com/2007/01/f.htmlhttp://oorodi.blogspot.com/2007/02/iphone.html
ஞாயிறு, ஜூன் 03, 2007
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு
யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு
உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு
பொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டு
ஐயன் அடியிணை அன்பர்க் குண்டே
கல்லா தார்பாற் கபட முண்டு
எல்லா ரிடத்து மீச னுண்டு
வில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டு
எல்லாச் சக்தியும் இறைபால் உண்டே
தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டு
தேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டு
நாடுவார் மாட்டு நன்மை உண்டு
பாடுவார் மாட்டுப் பரமன் உண்டே
சீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டு
ஆவதும் அழிவதும் அசடர்க் குண்டு
ஈவது விலக்கார்க் கெல்லா முண்டு
தேவ தேவன் திருவடி உண்டே
அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு
பொன்புரை மேனி புனிதர்க் குண்டு
தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு
விண்போல் விரிவு மேலோர்க் குண்டே
வீத்தொழில் - கொல்லுந்தொழில்