செவ்வாய், மே 29, 2007
கூகிளின் எதிர்காலம்
இன்னும் சில காலத்தில் கூகிள் எவ்வாறெல்லாம் தேடப்போகின்றது என்கின்ற ஒரு கற்பனையை கீழே பாருங்கள். நிச்சயமாக இது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது..
திங்கள், மே 28, 2007
அட உண்மைதான்.....
ஒரு காதலியை வைத்திருப்பதை விட programming செய்வது எவ்வளவு மேலானது என்பது பற்றி கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை சில உதாரணங்கள்தான். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் கீழே சேர்த்து விடலாம்.
a. No matter how many times you call an “X” no one gets jealous.
b. Using the same line over and over again always works!
c. Accurate comments make everyone happy.
d. If something is not working correctly you can always change the source code.
e. Programs don’t get offended if you let your friends play with them.
f. When you write a useful function you can add it to all of your programs.
g. You can write a program to take input from multiple sources without complaining.
h. You can not run a program for years and it is always ready when you want it.
i. You can play with more than one program at the same time.
j. Programs don’t complain when you use “helper” programs.
k. Programs exist to serve YOU.
l. No one goes to jail when they kill a program.
நான் ரோபோட்டா??
கூகிளில் ஒரு விடயத்தை தேடியபோது கூகிள் சொன்ன பதிலை கீழே பாருங்கள்.
வெள்ளி, மே 25, 2007
கைப்பேசியில் கூகிள் Calender
கூகிள் calender பல சிறப்பான பயன்பாடுகளை உடையது. இதில் இருந்த ஒரு குறைபாடு எமது நிகழ்வுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் கணனியின் முன் இருக்க வேண்டி இருந்தமை ஆகும். பின்னர் இதனை இலகு படுத்த கூகிள் sms அனுப்பும் முறை ஒன்றினை கையாண்டது. அத்துடன் இவ்வசதி தனியே US பயனாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது இவற்றிற்கெல்லாம் தீர்வாக கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடிய கூகிள் calender இனை கூகிள் வெளியிட்டுள்ளது. போய் பயன்படுத்தி பாருங்கள்
செவ்வாய், மே 22, 2007
Google Talk
கடந்த ஐந்து மாதங்களாக எந்த விதமான மேம்படுத்தல்களும், மேம்படுத்தல் அறிவித்தல்களும் இல்லாமல் இருந்து Google Talk இப்போது பெரிய ஒரு மாறுதலுக்கு உள்ளாக இருக்கின்றது. இதன் மூலம் Google Talk இலிருந்து சாதாரண ஒரு தொலைபேசியுடனும் பேச முடியும். இவ்வசதி விரைவிலேயே பொதுமக்களின் பாவனைக்கு வர உள்ளது.
செவ்வாய், மே 15, 2007
Windows Live Folders - beta
மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
இது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று நான் சொல்லத் வேண்டியதில்லை)


புதன், மே 09, 2007
கூகிள் விளம்பரம் அச்சில்.
கூகிள் தனது Adword உடன்
Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது
- எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
- ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
- எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?
என்பவற்றை கொடுத்தால் போதும் மீதியை கூகிள் பார்த்துக்கொள்ளும். கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.


Introducing Microsoft Silverlight
மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய
plug-in ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது.

இதைப்பற்றி மைக்ரோசொவ்ற் என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.
Microsoft® Silverlight™ is a cross-browser, cross-platform plug-in for delivering the next generation of .NET based media experiences and rich interactive applications for the Web. Silverlight offers a flexible programming model that supports AJAX, VB, C#, Python, and Ruby, and integrates with existing Web applications. Silverlight supports fast, cost-effective delivery of high-quality video to all major browsers running on the Mac OS or Windows.
திங்கள், மே 07, 2007
விக்கிபீடியா தேடுபொறி
Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.

முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.
யப்பான் சிறுவர் தினம்
கூகிள் யப்பான், யப்பானின் சிறுவர் தினத்திற்காக கூகிள் யப்பான் பக்கத்தில் வெளியிட்ட சின்னத்தை பாருங்கள். யப்பானில் சிறுவர் தினம் மே 5 இல் வருகிறது. அப்படியே முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சின்னங்களையும் பாருங்கள்.
2007
2006
2005
2004
2003
சனி, மே 05, 2007
புதிய யாகூ அரட்டை
நீண்ட காலமாக இணையத்தில் முடிசூடா அரட்டை அரசனாக இருந்த யாகூவினை மெல்ல மெல்ல ஜிமெயிலின் அரட்டை மென்பொருள் வீழ்த்தத்தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கூகிளின் அரட்டை மென்பொருள் பதிவிறக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்ததும் அது தனது மின்னஞ்சலுடன் இணைந்து வேலை செய்ததும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்போது யாகூவும் தனது அரட்டை மென்பொருளின் இணைப்பதிப்பை வெளியிட்டிருக்கின்றது. போய்பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.