நான் புதுவீட்டுக்கு போயிட்டேன்....
கன காலமா புளொக்கரில இருந்து வந்த ஊரோடி இப்ப
புது வீட்டுக்கு(www.oorodi.com) போயிட்டுது. வந்து பாத்து விருந்தெல்லாம் சாப்பிட்டுட்டு போங்க.....
இப்பிடி இருந்த நான்
இப்பிடி ஆகிட்டேன்.
Google docs updated
கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.
இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.
சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)
கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.
முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.
போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.
படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)
xcavator.net
நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.
ஐபோன் கார்ட்டடூனில்
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.
Ask.com மீள்வடிவமைப்பு
ask.com ஆனது கேள்விகள் சார்பான தேடல்களுக்கு மிகவும் பெயர்பெற்றது. இப்போது அவ்விணையத்தளம் மிகவும் பயனாளர்களுக்கு இலகுவான முறையில் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
கீழே சில திரைவெட்டுக்களை பாருங்கள்.
வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.
இதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.
simple CSS
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒரு முறையேனும் CSS கோப்புடன் அல்லது CSS நிரல்களுடன் போராடியிருப்பார்கள். நான் இணையத்தளங்களை வடிவமைக்கும் போது எனது அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்பவை இந்த நிரல்கள்தான். ஆனால் இதற்கு தீர்வு வந்தாற்போல எனக்கு simple CSS என்கின்ற மென்பொருள் கிடைத்திருக்கின்றது.
இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மக் இயங்குதளங்கள் எல்லாவற்றிற்கும் கிடைக்கின்றது. இருந்தபோதிலும் வின்டோஸ் விஸ்ராவில் இயங்குவதில் சிறிய சிக்கல்கள் காணப்படுகின்றது.
இங்கே சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள்.