« இல்லம்

புதிய தேடுபொறி Hakiaசின்ன போட்டி.உபுந்து (ubuntu)புத்தாண்டு வாழ்த்துக்கள்சில வியப்பூட்டும் விடயங்கள்.செயற்கைக் கடற்கரை2006 இன் சிறந்த புகைப்படங்கள்2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.கூகிள் - விடுமுறைநாள் சின்னங்கள்.சிக்கிண்குணியா  »கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்
கூகிள் காலத்துக்கு காலம் பல சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவற்றில் பல வெற்றி பெற்றும் சில தோல்வியுற்றும் உள்ளன. இருந்தாலும் சில சேவைகளை மட்டுமே கூகிள் இடைநிறுத்தி உள்ளது. அவற்றை கீழே பார்ப்போம்.Google Keyboard shortcuts (2002)
கூகிளின் தேடுபொறியினை இயக்குவதற்கும் அதன் தேடு முடிவுகளுடே உலாவுவதற்கும் விசைப்பலகையினை பயன்படுத்த இது வசதி செய்து தந்திருந்தது.


Google Voice search (2002)
ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கூகிளில் தேடுதல். இதன்மூலம் பயனாளர்கள் ஒரு சொல்லினை உள்ளிடத்தேவையில்லை. கூகிள் ஒலியினை அடையாளப்படுத்துவதன் மூலம் (voice recognition) தேடுதலை மேற்கொள்ளும்.

Google viewer (2002)
இதன் மூலம் கூகிளின் தேடுதல் முடிவுகளை ஒரு படக்காட்சியாக (Slide show) ஆக பார்க்க முடியும். கூகிள் கருவிப்பட்டை இந்த வசதியை கொண்டிருந்தது. ஆனால் இது சரியாக வேலைசெய்யவில்லை.


Google webquotes (2002)
இதன் மூலம் ஒரு இணையத்தளத்தை பற்றிய விமர்சனங்களை பார்க்க முடியும்.

Google Compute (2002)
இது உங்கள் கணினியில் உள்ள வளங்களை அராய்ச்சிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். உங்கள் கணனி Idle நிலையில் இருக்கும் போது மட்டுமே இது வேலை செய்யும்.

Google Answers (2002)
ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பணம் செலுத்தி ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பதிலை பெற இந்த சேவை உதவியது. 2006 நவம்பரில் இந்த சேவை இடைநிறுத்தப்பட்டது.

Google Search API (2002)
இது கூகிளின் தேடல் முடிவுகளை மேம்படுத்துபவர்கள் (Developers) தங்கள் applications உடன் இணைக்க உதவிய ஒரு SOAP API. இது 2006 திசம்பருடன் இடைநிறுத்தப்பட்டு விட்டது.

Google Deskbar (2003)
உங்கள் கணினியில் இருந்து கூகிளை தேட உதவிய ஒரு மென்பொருள். இப்போது இது Google Desktop உடன் இணைக்கப்பட்டு விட்டது.

Google X (2005)
இது Mac வடிவில் அமைந்த கூகிளின் முன்பக்கமாகும். இது ஒரு நாள் மட்டுமே பாவனையில் இருந்தது. அப்பிள் கணினி நிறுவனத்தின் எதிர்ப்பினை தொடர்ந்து இது உடனடியாகவே நிறுத்தப்பட்டு விட்டது.

Google vedio (initial version)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேட உதவிய ஒரு கூகிளின் சேவை.

 
2 பின்னூட்டங்கள்:
தகவலுக்கு நன்றி

மன்மதன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
புதிய தேடுபொறி Hakia
சின்ன போட்டி.
உபுந்து (ubuntu)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சில வியப்பூட்டும் விடயங்கள்.
செயற்கைக் கடற்கரை
2006 இன் சிறந்த புகைப்படங்கள்
2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.
கூகிள் - விடுமுறைநாள் சின்னங்கள்.
சிக்கிண்குணியா

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution